இந்தியாவின் மிக உயரமான ஆஞ்சிநேயர் சிலை எங்கு உள்ளது தெரியுமா?
1.அருள்மிகு ஆஞ்சிநேயர் திருக்கோயில்,நாமக்கல்
ஆஞ்சிநேயர் என்றாலே வெற்றிக்கான அதிபதி.அப்படியாக நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 18 அடி உயரம் உள்ள சக்தி வாய்ந்த ஸ்ரீ ஆஞ்சநேயர் திறந்த வெளியில் நின்று தொழுத கைகளுடனும், இடுப்பில் கத்தியுடனும் பிரமாண்டமாக காட்சி கொடுக்கும் திருக்கோயிலாகும்.
இங்கு ஆஞ்சிநேயர் சிலையில் சிறப்பு என்னவென்றால் அந்த சிலை ஒரே கல்லால் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இக்கோயிலுக்கு அருகில் சுமார் 10 மைல் தொலைவில் பல வகை மூலிகைகளும், பல மரங்களும், தானிய வகைகளும் கொண்ட "சதுரகிரி" என்னும் பெருமை வாய்ந்த "கொல்லி மலை" அமையப்பெற்று இருப்பது கூடுதல் சிறப்பு.
மேலும் இங்கு ஆஞ்சிநேயர் மிக கூர்மையான நகங்கள் உடன் இரண்யனை சம்காரம் செய்த அடையாளமாக கையில் ரத்த கரையுடன் இருப்பது ஆச்சிரியம் மிகுந்த சிறப்பம்சம் ஆகும். மேலும் விஷ்ணு பகவானின் அவதாரமான நரசிம்மர், அனுமன் மற்றும் லஷ்மி தேவியாருக்காக தோன்றியதன் அடிப்படையில் அமைந்துள்ளது.
இக்கோயில் இந்தியாவில் மிகவும் உயரமான அனுமன் சிலைகளில் ஒன்றாக திகழ்கிறது.மேலும் நரசிம்மர் மடியில் லட்சுமி தேவி அமர்ந்து இருந்தால் லட்சுமி நரசிம்மர் என்போம்.ஆனால் இக்கோயில் சுவாமியின் மார்பில் லட்சுமி தேவி இருப்பது கூடுதல் விஷேசம்.
இத்தயாரின் திருநாமம் நாமகிரி ஆகும்.இவர் பிரகாரத்தில் கிழக்கு நோக்கி இருந்து மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.இத்தாயாரை வணங்கிட குழந்தைகள் கணிதத்தில் சிறந்து விளங்குவர் என்பது சிறப்பு.
மேலும் இங்குள்ள ஆஞ்சிநேயருக்கு வெற்றிலை மாலை சாத்துதல், எலுமிச்சம் பழம் மாலை சாத்துதல், துளசி மாலை சாத்துதல், வடை மாலை சாத்துதல், பூ மாலை சாத்துதல் ஆகியவை நேர்த்திக் கடனாக செலுத்தப்படுகின்றன.
தவிர வெண்ணெய் காப்பு போன்ற சிறப்பு அபிஷேகங்களும் இங்கு செய்யப்படுவது வழக்கம்.
வழிபாட்டு நேரம்
காலை 6.00 மணி முதல் 1.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும்.
இடம்
அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில், நாமக்கல் - 637403. நாமக்கல் மாவட்டம்.
2.அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் திருச்செங்கோடு
பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர செல்ல வேண்டிய அற்புதமான ஆலயம்.நாமக்கல் மாவட்டத்தின் திருச்செங்கோட்டின் மலையின் மீது அமைந்துள்ளது. இத்தலம் திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல்பெற்ற கொங்கு நாட்டுச் சிவத்தலமாகும்.
அறுபத்திமூன்று நாயன்மார்களில் ஒருவரான விரல்மிண்ட நாயனார் பிறந்த பெருமை பெற்றது.மேலும், ஆதிசேஷ பாம்பானது மேருமலையை பிடித்த போது காயம் ஏற்பட்டு சிந்திய ரத்தத்தில் மலை செந்நிறம் ஆனதால் இப்பெயர் வந்ததாகவும் கூறுவர்.
இந்த திருக்கொடிமாடச்செங்குன்றுர் காலப்போக்கில் இது மறுவி திருச்செங்கோடு என்று அழைக்கபடுகிறது. திருச்செங்கோட்டில் அமைந்துள்ள மலை சிவலிங்க தோற்றத்துடனும், வடமேற்கில் இருந்து பார்க்கும்போது பசுவின் தோற்றத்துடனும், மேற்கு பகுதியில் இருந்து பார்க்கும் போது ஆண் உருவம் படுத்து இருப்பதுபோலவும், தென்மேற்கு பகுதியில் இருந்து பார்க்கும்போது பெண் படுத்திருக்கும் தோற்றமும் அமைந்துள்ளது.
அர்த்தநாரீஸ்வரர் என்று அழைக்கப்படும் மூலவர் சுமார் 6 அடி உயரம் உள்ள உளி படாத சுயம்புத் திருமேனியாக பாதி ஆணாகவும் பாதி பெண்ணாகவும் மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறார்.
தலையில் ஜடாமகுடம் தரித்து, பூர்ண சந்திரன் சூடி, கழுத்தில் ருத்ராட்சம், தாலி அணிந்து, கையில் தண்டாயுதம் வைத்திருக்கிறார். அம்பிகையின் அம்சமாக உள்ள இடது பாக காலில் கொலுசு உள்ளது.
சிவன், சக்தி சேர்ந்த வடிவம் என்பதால் வலதுபுறம் வேட்டியும், இடப்புறம் சேலையும் அணிவிப்பர்.இங்கு சிவனும் பார்வதியும் சேர்ந்து அர்த்தநாரீஸ்வரராக நவபாஷனா சிலையாக உள்ளார்.
இத்தல அம்பாள் 'பாகம்பிரியாள்' என்ற திருநாமத்தில் அழைக்கப்படுகிறாள். இந்த திருக்கோவிலில், மார்கழி மாதத்தில் மட்டும் அபிஷேகம் செய்து வழிபடப்படும் மரகதலிங்கம் உள்ளது.
அந்த லிங்கத்தை மார்கழி மாதத்தை தவிர பிற மாதங்களில் பார்க்க முடியாது.குறிப்பாக மார்கழி மாதத்திலும் காலை சுமார் 5 மணி வரை மட்டுமே அந்த லிங்கத்தை தரிசனத்திற்கு வைப்பார்கள்.
மூலவரின் காலடியில் இருக்கும் தேவதீர்த்தம் எக்காலத்திலும் வற்றாமல் சுரந்து கொண்டே இருக்கும். மூலவரை தரிசிக்க வருபவர்களுக்கு இந்த தீர்த்தம் வழங்கப்படுகிறது.
கோவிலில் வடக்குப் பிரகாரத்திலுள்ள கிழக்கு நோக்கி அமைந்த செங்கோட்டு வேலவர் சந்நிதி உள்ளது. படிக்கட்டுகள் வழியே மலைக்குச் செல்லும் வழியில், பாறையில் செதுக்கப்பட்டுள்ள நாகர் சன்னதி மிகவும் பிரசித்தி பெற்றது.
வழிபாட்டு நேரம்
காலை 6.00 முதல் 2.00 மணி வரை மதியம் 3.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை
இடம்
அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில், மலைக்கோயில், திருச்செங்கோடு - 637211, நாமக்கல் மாவட்டம்.
3.அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் ராசிபுரம்
இக்கோயிலின் இறைவனின் திருநாமம் கைலாசநாதர் ,இறைவியின் திருப்பெயர் அறம்வளர்த்தநாயகி.
இக்கோயிலில் கைலாசநாதர் மூலஸ்தானத்தில் சுயம்புலிங்கமாக காட்சி தருகிறார்.இங்கு என்ன சிறப்பு என்றால் இறைவன் திருமேனியில் அம்பு பட்ட தழும்பு ஒன்று காணப்படுகிறது.மேலும்,அம்பாள் அறம்வளர்த்தநாயகி தனிச்சன்னதியில் மேற்கு நோக்கி காட்சி தருகிறாள்.
இவளுக்கு முன்புறம் மகாமேரு உள்ளது. இவளது சன்னதியில் பவுர்ணமியன்று காலையில் விசேஷ ஹோமம் நடைபெரும். கடந்த காலத்தில் வல்வில் ஓரி என்ற மன்னன் கொல்லிமலையை தலைநகராக கொண்டு இப்பகுதியை ஆட்சி செய்து வந்தான்.
வில் வித்தையில் சிறந்த வீரனான இம்மன்னன் ஒரு தீவிர சிவபக்தனும் கூட. ஒருசமயம் இப்பொழுது கோயில் இருக்கும் பகுதிக்கு இப்பகுதிக்கு வேட்டைக்கு வந்தான்.காட்டில் நீண்டநேரமாக தேடியும் ஒரு மிருகம்கூட கண்ணுக்கு தென்படவில்லை.மிகவும் களைத்துப்போன ஓரி மன்னன், ஓரிடத்தில் வென்பன்றியைக் கண்டான்.
உடனே பன்றி மீது அம்பை எய்தான். அம்பினால் தாக்கப்பட்ட பன்றி, அங்கிருந்து நீண்டதூரம் ஓடியது.ஓடிய பன்றி,ஒரு புதருக்குள் மறைந்தும் கொண்டது. மன்னன் புதரை விலக்கியபோது அவ்விடத்தில் பன்றி சுயம்புலிங்கமாக மாரி இருப்பதை கண்டு ஆச்சிரியம் கொண்டான்.
மேலும் லிங்கத்தின் நெற்றியில் மன்னன் எய்த அம்பு தாக்கியதில், ரத்தமும் வழிந்து கொண்டிருந்தது.மிகவும் மனம் வருந்தி கலங்கிய மன்னன் சிவபெருமானை நோக்கி வேண்டினான்.சிவன் அவனுக்கு சுயரூபம் காட்டி தானே பன்றியாக வந்ததை உணர்த்தினார்.
அதன்பின் மன்னன் இவ்விடத்தில் கோயில் எழுப்பினான். கோயில் கட்டிய மன்னருக்காக பிரகாரத்திலுள்ள வன்னி மரத்தின் அடியில் வல்வில் ஓரி மன்னனுக்கு சிலை இருக்கிறது. இவர் வில், அம்பு மற்றும் இடுப்பில் கத்தியுடன் நின்ற கோலத்தில் வணங்கியபடி காட்சி தருகிறார்.
வழிபாட்டு நேரம்
காலை 6.00 முதல் 12.00 மணி வரை மாலை 4.30 மணி முதல் 8.30 மணி வரை
இடம்
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில், ராசிபுரம் - 637408, நாமக்கல் மாவட்டம்.
4.அருள்மிகு நாவலடி கருப்பசாமி திருக்கோயில்,மோகனூர்
கருப்பசாமி என்றாலே மிகவும் சக்தி வாய்ந்தவர்.அப்படியாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் என்னும் ஊரில் அருள்மிகு நாவலடி கருப்பசாமி திருக்கோயில் அமைந்துள்ளது.நாவல் மரத்தடியில்.. மூன்று வாகனங்களுடன் கருப்பசாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
அருள்மிகு நாவலடி கருப்பசாமி திருக்கோயிலில் மூலவர் நாவல் மரத்தின் அடியில் காட்சியளிப்பதால் நாவலடியான் என்று பெயர் பெற்றார். கருப்பசாமி உற்சவர், மரத்தால் செய்யப்பட்டு தனிச்சன்னதியில் நாய் வாகனத்துடன் காட்சியளிக்கிறார்.
மூலவருடன் மனைவியர் பொம்மி மற்றும் வெள்ளையம்மாள் காட்சியளிக்கின்றனர்.இங்கு உற்சவர் சன்னதிக்கு எதிரே உள்ள பிரகாரத்தில் அருகருகில் மூன்று வேல்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இத்தலத்தில் வடக்கு வாசலுக்கு நேரே அம்பாள் செல்லாண்டியம்மன் பீடத்தில் அமர்ந்தவாறு காட்சியளிக்கிறார்.
இவரின் கைகளில் உடுக்கை, சூலம், மலர் மற்றும் குங்குமம் வைத்து அசுரனை சம்ஹாரம் செய்தபடி காட்சியளிக்கிறார். அருள்மிகு நாவலடி கருப்பசாமி திருக்கோயிலின் முகப்பில் கருப்பசாமிக்கு உரிய மூன்று குதிரை வாகனங்கள் அமைந்துள்ளது.
இத்தலத்தில் நந்தி, சிம்மம், குதிரை ஆகிய மூன்று வாகனங்கள் காணப்படுவது சிறப்பு.இங்கு என்ன சிறப்பு என்றால் அருள்மிகு நாவலடி கருப்பசாமி திருக்கோயிலில் எல்லா நாளுமே சுவாமிக்கு விசேஷ வழிபாடுகள் நடைபெறும். தினமும் திருவிழா போலவே இவருக்கு விசேஷ அலங்காரம் மற்றும் வைபவங்கள் நடைபெறுகின்றது.
இத்தலத்தில் கோரிக்கை வைப்பவர்கள் தங்களது வேண்டுதலை ஒரு காகிதத்தில் எழுதி நாவல் மரத்தில் கட்டிவிடுகிறார்கள். இவ்வாறு செய்வதால் விரைவில் அந்த கோரிக்கை நிறைவேறும் என்பது நம்பிக்கை. பிறரால் ஏமாற்றப்பட்டவர்கள் தங்களுக்கு நியாயம் கிடைக்க இக்கோயிலில் இருக்கும் மூன்று வேல்களில் மூன்று எலுமிச்சை பழத்தை சொருகி வழிபடுகின்றனர்.
இடம்
அருள்மிகு நாவலடி கருப்பசாமி திருக்கோயில்-மோகனூர்,நாமக்கல் மாவட்டம்
வழிபாட்டு நேரம்
காலை 4.00மணி முதல் இரவு 10.00மணி வரை
5.அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ராமணர் திருக்கோயில்,மோகனுர்
நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பெருமாள் கோயிலில் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் கோவில் ஒன்று. இங்கு கருவறையில் மூலவர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள், வலதுபுறம் ஸ்ரீதேவி, இடதுபுறம் பூதேவியோடு நின்ற நிலையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். பெருமாளின் சன்னதிக்கு பின்புறம் தன்வந்திரிக்கு சன்னதியம் உள்ளது.
இச்சன்னதியின் முன்மண்டப மேற்கூரையில் நவக்கிரகங்கள் மரச்சிற்பமாக இருக்கின்றன. இந்த நவக்கிரகங்கள், அந்தந்த கிரகங்களுக்குரிய மரத்தினால் செதுக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பாகும்.
நவக்கிரகங்களுக்குரிய மரங்கள் மற்றும் தாவரங்கள் சூரியன் - எருக்கு மரம், சந்திரன் - பலாசு மரம்,செவ்வாய் - கருங்காலி மரம், புதன்- நாயுருவி, சுக்கிரன் - அத்தி மரம், குரு- ஆல மரம்,சனி- வன்னி மரம், ராகு - அருகம்புல், கேது- வெற்றிலைக்கொடி என நவகிரகங்கள் கூறிய மரங்களினால் அமையப்பெற்றது இக்கோயிலின் தனி சிறப்பாகும்.
வழிபாட்டு நேரம்
காலை 7.00 முதல் 11.00 மணி வரை மாலை 5.30 மணி முதல் 8.00 மணி வரை
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |