நவகிரகங்களை எவ்வாறு வழிபட வேண்டும்?

By Sakthi Raj Jul 27, 2024 05:27 AM GMT
Report

நம் வாழ்வில் நடக்கூடிய அனைத்து மாற்றங்களுக்கும் நவகிரகத்திற்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.ஆதலால் நவகிரகத்தை நாம் வணங்கி வழிபட வாழ்க்கையில் உள்ள அனைத்து துன்பங்களும் படி படியாக குறையும்.

யோகம் தரும் நவக்கிரகங்கள்

1. சூரியன் – ஆரோக்கியம்

2. சந்திரன் – புகழ்

3. செவ்வாய் – செல்வச் செழிப்பு

4. புதன் – அறிவு வளர்ச்சி

5. வியாழன் – மதிப்பு

6. சுக்கிரன் – வசீகரத் தன்மை

7. சனீஸ்வரன் – மகிழ்வான வாழ்க்கை

8. ராகு – தைரியம்

9. கேது – பாரம்பரியப் பெருமை

நவகிரகங்களை எவ்வாறு வழிபட வேண்டும்? | Navargragam Koyil Vazhipaadu Worship

நவகிரகங்களை எத்தனை முறை வலம் வர வேண்டும்? எப்படி வணங்க வேண்டும்?எந்தக் கிழமைகளில் வணங்க வேண்டும் என்ற சந்தேகங்கள் பலருக்கும் இருக்கும்.

அதாவது கோயிலுக்கு சென்று முதலில் விநாயகரை வணங்கிவிட்டு, பின்னர் அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பின்னர் கடைசியாக நவகிரகங்களை தரிசிப்பது தான் சரியானது.

ஆடி மாதத்தில் நாகருக்கு சர்ப்ப வழிபாடு செய்வது ஏன்?

ஆடி மாதத்தில் நாகருக்கு சர்ப்ப வழிபாடு செய்வது ஏன்?


நவகிரகங்களை வழிபட்டு, 9 முறை வலமாக சுற்றி வரவேண்டும்.நவகிரகங்களைப் சுற்றி வழிபடும் போது அந்தந்த கிரகத்திற்கும் உரித்தான எண்ணிக்கையில் சுற்றி வழிபட வேண்டும்.

அதாவது முதலில் ஒன்பது முறை சுற்றி வணங்கிய பின் அந்தக் கிரக அனுக்கிரகத்துக்காக மேலும் விசேஷமாகச் சுற்றி வந்து வழிபடுதல் வேண்டும்.

எந்த தெய்வங்களையும் தொட்டு வணங்குதல் கூடாது. குறிப்பாக நவகிரகங்களை தொட்டு வணங்குதல் கூடாது. கிழமைக்கு ஏற்றவாறு அதற்குரிய கிரகத்தை வழிபட்டு வந்தால் அதற்கான கூடுதல் பலன்கள் கிடைக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US