பங்குனி மாதம்: பண மழை கொட்டவுள்ள ராசிகள் - அள்ளிக்கொடுக்கும் பெயர்ச்சி
பங்குனி மாதத்தில் கிரகங்களின் சேர்க்கையால் நிகழும் பலன்கள், பாதிப்புகளை பார்ப்போம்.
மீன ராசிக்கு மார்ச் 14ம் தேதி சூரியன் பெயர்ச்சியாக உள்ள பங்குனி மாதம் பிறக்கிறது. மேலும், மீன ராசியின் சூரியன், சுக்கிரன், புதன், ராகு, சனி ஆகிய கிரகங்களின் சேர்க்கை நடக்கவுள்ளது.
இதனால் சிறந்த பலன்களை அனுபவிக்கும் ராசிகளை இங்கு தெரிந்து கொள்வோம்.
ரிஷபம்
நிதி சார்ந்த விஷயத்தில் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டு. குடும்பத்திலும், பணியிடத்திலும் இனிமையான சூழல் நிலவும்.
மிதுனம்
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, புதிய பொறுப்புகள் வழங்கப்பட வாய்ப்புள்ளது. நிதி நிலை ரீதியாக முன்னேற்றம் ஏற்படும்.
கடகம்
திருமண வாழ்க்கை, வேலை தொடர்பான விஷயத்தில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் அதிகரிப்பதோடு, செலவுகளைக் கட்டுப்படுத்த முடியும்.தந்தையின் முழு ஆதரவை பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு, புதிய வேலைக்கான வாய்ப்பு கிடைக்கும்.
விருச்சிகம்
சொத்துக்கள் சேர வாய்ப்புள்ளது. எதிர்பாராத விதமாக நிதி நன்மைகளை பெறுவீர்கள். தொழில், வேலை தொடர்பான விஷயத்தில் உங்களின் செயல் திறன் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்திருக்கும்.
தனுசு
வருமானம் அதிகரிக்கும். விருப்பமான பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்பு உண்டு. சொந்த தொழிலில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். குடும்பத்தினரின் ஆதரவை பெறுவீர்கள்.
மீனம்
உத்தியோகம், தொழில் தொடர்பான விஷயத்தில் எதிரிகளின் தொல்லை தீரும். ஆரோக்கியம் மேம்படும். அரசு தொடர்பான வேலைகளில் வெற்றி கிடைக்கும்.