வளர்பிறை பஞ்சமி என்ன செய்யும்? இஷ்ட தெய்வத்தை இவ்வாறு வழிபடலாம்
வளர்பிறை பஞ்சமி நாளன்று என்ன செய்யலாம் என்பது குறித்து தெரிந்துக்கொள்வோம்.
வளர்பிறை பஞ்சமி
அமாவாசைக்கு பிறகு வருவது வளர்பிறை பஞ்சமி. இது வாராகி அம்மனுக்கு உரிய திதியாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த மாசி மாதத்தில் செவ்வாய்க்கிழமையோடு வரக்கூடிய வளர்பிறை பஞ்சமி மார்ச் மாதம் 3ம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 4ம் தேதி இரவு 8:17 உடன் முடிகிறது.
வாராஹி அம்மனை இரவு 6 மணிக்கு மேல் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும், வாராஹிக்கு பிரியமான மாதுளம் முத்துக்களை உதித்தோ, சர்க்கரை வல்லிக்கிழங்கு படைத்தோ அல்லது தயிர் சாதம் நைவேத்தியமாக படைத்தோ வழிபடலாம்.
எவ்வாறு வழிபடலாம்?
இதனுடன் செம்பருத்தி பூக்கள் வைத்து வழிபடலாம். குறிப்பாக சிவப்பு நிற பூக்களைக் கொண்டு பூஜிப்பது விசேஷம். சுக்கு சேர்ந்த பானகத்தையும் படைக்கலாம்.
இந்த திதி செவ்வாய்கிழமையில் வந்துள்ளதால் முருகனை நினைத்தும் இந்த வழிபாட்டை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பணத்தடைகள் நீங்கி ஐஸ்வர்யமான வாழ்வு கிட்டும்.