பாவங்கள் குறைய அமாவாசையில் நாம் செய்ய வேண்டிய தானம்
இன்று வைகாசி மாதத்தின் அமாவாசை.அமாவாசையில் திதி கொடுப்பது நன்மைகள் தரும்.மேலும் அமாவாசையில் திதி கொடுப்பதுடன் சேர்த்து தானம் கொடுக்கலாம்.
அதாவது நாம் தெரியாமல் செய்த பாவங்கள் முன் ஜென்ம வினைகள் எல்லாம் தீர இன்றைய நாளில் தானம் கொடுப்பதால் அந்த பாவங்கள் தீரும் என்பது நம்பிக்கை.
பசுவில் தான் 30 முக்கோடி தெய்வங்களும் வாசம் செய்ததாக சொல்லப்படுகிறது. அப்படியான பசுவிற்கு இன்றைய தினத்தில் அகத்தி கீரை, வாழைப்பழம், பச்சரிசி இவை மூன்றில் ஏதேனும் ஒன்றை தானமாக கொடுக்க வேண்டும்.
இதை செய்யும் பொழுது நம்முடைய கர்மாக்கள் நிச்சயம் குறையும் என்று நம்பப்படுகிறது எல்லோருடைய வீட்டில் தினமும் மறவாமல் காகத்திற்கு சாதம் வைப்பதுண்டு.
அப்படியாக இன்றைய தினத்தில் காகத்திற்கு வெள்ளை சாதத்தில் தயிர் எள் கலந்து வைக்க வேண்டும்.
அப்படி செய்வதால் பித்ருக்களின் ஆசி நமக்கு பரிபூர்ணமாக கிடைக்கும் இதோடு சேர்த்து குலம் காக்கும் குலா தெய்வ வழிபாடு செய்யலாம்.
அம்மாவாசை நாளான இன்றைய நாளில் குலா தெய்வ வழிபாடு நம் குலம் தழைக்கும் என்பது நம்பிக்கை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |