பிரதோஷமே நடைபெறாத ஒரே சிவன் கோவில்
சிவன் இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர்.
சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர்.
பொதுவாக சிவாலயங்களில் மாதத்திற்கு 2 முறை பிரதோஷம் வழிபாடு வெகு விமர்சியாக நடைபெறும்.
பிரதோஷ நாட்களில் சிவாலயங்களில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படும். பிரதோஷ வழிபாடு மிகுந்த பலன் தரும் என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் உள்ளது.
ஆனால் ராமகிரி தலத்தில் பிரதோஷ வழிபாடு நடத்தப்படுவது இல்லை. அதற்கு ஒரு காரணம் கூறப்படுகிறது.
இந்த தலத்தில் உள்ள வாலீஸ்வரருக்கு எதிரே நந்தி பிரதிஷ்டை செய்யப்படவில்லை. பக்த ஆஞ்சநேயர் விக்கிரகம்தான் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
அந்த ஆஞ்சநேயருக்கு பிறகுதான் அடுத்தடுத்து 2 நந்திகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அதுவும் பிரகாரத்துக்கு வெளியேதான் உள்ளது.
இத்தகைய காரணங்களில் இந்த தலத்தில் பிரதோஷம் வழிபாடு கிடையாது. பிரதோஷம் வழிபாடு நடைபெறாத ஒரே ஆலயமாக இந்த ஆலயம் கருதப்படுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |