ராகு பகவானால் உண்டாகும் யோகம்:அதிரடி மாற்றம் எந்த ராசிகளுக்கு
ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்வார்.இந்நிலையில் வரும் 2025 ஆம் ஆண்டு ராகு பகவான் சனி பகவானின் சொந்தமான ராசிக்கான கும்ப ராசியில் நுழைகின்றார். இதன் காரணமாக ஒரு 2025 ஆம் ஆண்டு ராகு பகவானால் ஒரு சில ராசிகள் யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
தனுசு:
தனுசு ராசியில் மூன்றாவது வீட்டில் வீட்டில் ராகு பகவான் நுழைய உள்ளார்.இதனால் உங்களுக்கு பல ஆண்டு காலம் உருவான மன வலி கொஞ்சம் கொஞ்சம் ஆக குறையும்.பல நாள் ஆசைகள் நிறைவேறும்.பிள்ளைகள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.உங்களை விட்டு விலகி சென்ற சொந்தங்கள் மீண்டும் உங்களை தேடி வரும்.மனதில் தைரியமும் உற்சாகமும் பெருகும்.குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மேஷம்:
மேஷ ராசியில் 11 வது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்யப் போகின்றார்.இதனால் உங்கள் கடின உழைப்பிற்கு ஏற்ற வெற்றி கிடைக்கும். 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள்.பிறரிடத்தில் உங்களுக்கு மதிப்பு உயரும்.தொழில் செய்பவர்கள் அதை விரிவு படுத்த சில ஏற்பாடுகளை செய்வீர்கள்.
கும்பம்:
கும்ப ராசியில் முதல் வீட்டில் ராகு பகவான் நுழைய போகிறார்.2025 ஆம் ஆண்டு பண யோகம் கிடைக்கப் போகின்றது.திருமணம் யோகம் குழந்தை பாக்கியம் கைகூடும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.காதல் செய்பவர்களுக்கு நல்ல காதல் வாழ்க்கை அமையும்.உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மன அழுத்தம் குறைந்து மன தைரியம் அதிகரிக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |