ஒரு குடும்பத்தில் மூன்று பேருக்கு ஒரே ராசி இருந்தால் ஆகாதா?
அப்படியெல்லாம் எந்த விதியும் கிடையாது. ஒரே ராசியைச் சேர்ந்தவர்களுக்கு ஒரே நேரத்தில் ஏழரைச்சனி, அஷ்டமத்து, குரு போன்ற பிரச்னைகள் தோன்றும் என்ற கருத்தினை மையப்படுத்தி இதுபோன்ற புரிதல்கள் உண்டாகின்றன.
ஏழரைச்சனி நடக்கும் காலத்தில், எல்லோருக்கும் பிரச்னை என்பது தோன்றுவதில்லை. ஏழரைச்சனியின் காலத்தில்தான் நான் வாழ்வினில் உயர்வு பெற்றேன் என்று சொல்வோரும் உண்டு.
அவரவர் ஜாதகத்தில் நடக்கும் தசாபுக்திகளும், அந்த கிரஹங்களின் அமைவிடமும்தான் பலனைத் தீர்மானிக்குமே தவிர, ஒரே ராசியைச் சேர்ந்தவர்களுக்கு ஒரே மாதிரியான பலன்கள் ஒருபோதும் நடக்காது.
இரட்டைக் குழந்தைகளின் ஜாதகங்களிலேயே பலன்கள் மாறுபடுவதைக் காண்கிறோம். உண்மை நிலை இப்படி இருக்க, ஒரே ராசியைச் சேர்ந்த மூவர், ஒரே வீட்டில் இருப்பதை தோஷமாகக் கருத வேண்டிய அவசியம் இல்லை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |