சனி தரும் ராஜயோகம்-அதிர்ஷ்ட வாய்ப்புகளை பெற போகும் ராசிகள்
தீபாவளி முடிந்த நிலையில் சனி பகவானின் வக்ர நிவர்த்தி நடைபெற இருக்கிறது. வரும் நவம்பர் 15ஆம் தேதி கும்ப ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் சனி பகவான் சச ராஜயோகத்தை உருவாக்கப் போகிறார். சனியின் சச ராஜயோகம் இந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க இருக்கிறார்.அப்படியாக இந்த மாற்றத்தால் அதிர்ஷ்டம் பெற போகும் ராசியை பற்றி பார்ப்போம்.
மேஷம்
மேஷ ராசிக்கான சனி வக்ர நிவர்த்தி பலன் நல்ல அதிர்ஷ்ட வாய்ப்புகளை தர இருக்கிறது.சனி நேரடியாக இருப்பதால் பெரியளவில் மாற்றம் இல்லை என்றாலும் பணம் சம்பந்த பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.பணி செய்யும் இடத்தில் நல்ல மதிப்பு உண்டாகும்.குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கு சனி வக்ர நிவர்த்தி ராஜயோகத்தை கொடுக்கப்போகிறது.இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டாகும்.வியாபாரத்தில் அடுத்த கட்ட நகர்வை சிறப்பாக எடுத்து வைப்பீர்கள்.புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.
தனுசு
தனுசு ராசிக்கு இது மிக பெரிய பொற்காலம். மனதில் இருந்து வந்த கவலை நீங்கி உற்ச்சாகம் கிடைக்கும். நீண்ட நாள் சிக்கிக்கொண்ட கடனை அடைப்பீர்கள்.நீதிமன்ற வழக்கு சாதகமாக அமையும்.நோய் பிரச்சனை தீரும்.உடல் ஆரோக்கியம் மேம்படும்.
மகரம்
சனியின் இந்த வக்ர நிவர்த்தி மகர ராசிக்கு சாதகமான பலனை தரும். இதுவரையில் இருந்து வந்த பிரச்சனைகளுக்கு நல்ல முடிவு கிடைக்கும்.திருமணம் வரன் தேடுபவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.புதிய இடம் மாறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உண்டாகும். பொருளாதார பிரச்சனை சீராகும்.