உருவாகும் மகாலட்சுமி ராஜ யோகம்: செப்டம்பர் மாதத்தில் இந்த 3 ராசிகளுக்கு பணமழை கொட்டுமாம்
செப்டம்பர் மாதத்தில் நவராத்திரி விழா தொடங்க உள்ளது. அதாவது 2025 செப்டம்பர் 22 திங்கட்கிழமை தொடங்கி அக்டோபர் 2ஆம் தேதி வரை இந்த நவராத்திரி விழா உலகம் எங்கிலும் கொண்டாடப்டுள்ளது. இதற்கிடையில் செப்டம்பர் 24ஆம் தேதி சந்திரன் துலாம் ராசிக்கு நகர உள்ளார். அங்கு செவ்வாய் ஏற்கனவே இருக்கிறார்.
ஜோதிட சாஸ்திரப்படி துலாம் ராசியில் சந்திரனும் செவ்வாயும் இணைவது மகாலட்சுமி யோகத்தை உருவாக்கக்கூடியது. இதனால் 3 ராசிகளுக்கு பண மழையை கொடுக்க காத்திருக்கிறது. அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.
ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இந்த செப்டம்பர் மாதம் பாதியில் இருந்து பல மாற்றங்களை அவர்கள் வாழ்க்கையில் சந்திக்க உள்ளார்கள். வாழ்க்கையில் சந்தித்து வந்த மன அழுத்தம் குறையும். வேலையில் சம்பள உயர்வு வேண்டும் என்று காத்திருந்தவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். அதேபோல் சிலருக்கு பொன் பொருள் நகை வாங்கும் யோகம் உண்டாகும் . வியாபாரத்தில் நஷ்டத்தை மட்டுமே சந்தித்து வந்தவர்களுக்கு அதை ஈடு கட்டும் வகையாக நல்ல லாபம் பெற காத்திருக்கிறார்கள். மகாலட்சுமி தாயாரின் அருளால் இவர்கள் வாழ்க்கையில் கடன் தொல்லைகளிலிருந்தும் பணப்பிரச்சனைகளில் இருந்தும் விடுதலை பெற போகிறார்கள்.
துலாம்:
துலாம் ராசிக்கு செப்டம்பர் மாதம் இறுதியில் இருந்து அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை சந்திக்கப் போகிறார்கள். அதாவது சிலர் கடந்த காலங்களாக பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருந்து பல சிக்கல்களை சந்தித்து வருகிறார்கள். அந்த சிக்கல்கள் அனைத்தும் அவர்களை விட்டு விலகி பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் பெறும் காலமாக அமையப் போகிறது. மகாலட்சுமி தாயாரின் அருளால் சிலருக்கு திருமணம் நடக்க வாய்ப்புகள் உள்ளது. திருமணத்தில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தாலும் அதுவும் இந்த காலகட்டத்தில் விலகி அவர்களுக்கு நன்மை உண்டா போகிறது.
மகரம்:
மகர ராசியினருக்கு நீண்ட நாட்களாகவே மனதில் பல குழப்பங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது. அதாவது தொழில் ரீதியாகவும் சரி, திருமண வாழ்க்கை சார்ந்த விஷயமாக இருந்தாலும் சரி அனைத்திலும் அவர்கள் பல சிக்கல்களை சந்தித்து வருகிறார்கள். மகர ராசியினருக்கு அந்த மன அழுத்தம் குறைந்து வாழ்க்கையில் சந்தித்து வரும் குழப்பங்கள் அனைத்தும் விலகி அவர்கள் மிகப்பெரிய மாற்றத்தை சந்திக்க காத்திருக்கிறார்கள். இந்த மாற்றமானது அவர்கள் வாழ்க்கையில் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் முகத்தில் பொலிவையும் கொடுக்கப் போகிறது. மகாலட்சுமியின் ஆசிர்வாதம் இவர்களை வாழ்க்கையில் உயர் நிலைக்கு எடுத்துச் செல்ல போகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







