சொந்த வீடு கட்ட இந்த ஒரு பொருளை தானம் செய்யுங்கள்
எலி வலையானாலும் தனி வலையே சிறந்தது என்ற பழமொழி சொல்வதுண்டு.
அதுபோல், சொந்தமாக இடம் வாங்க வேண்டும், வீடு கட்ட வேண்டும், குடியேற வேண்டும் என்று பலரது கனவாக இருந்து வருகிறது.
அப்படிப்பட்ட சொந்த வீடு கட்டுவதற்கு கோவிலில் இந்த பொருளை தானமாக தரவேண்டும்.
செய்யவேண்டிய தானம்
இந்த தானத்தை திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமைகளில் ஏதாவது ஒரு நாளில் தான் செய்ய வேண்டும்.
அந்தவகையில், சொந்த வீடு கட்ட நாம் வீடு கட்ட உதவும் ஜல்லியை தானமாக தர வேண்டும்.
சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் கைப்பட பணத்தை கொடுத்து இந்த ஜல்லியை வாங்க வேண்டும்.
வாங்கியதும் நேராக அருகில் இருக்கக்கூடிய ஆலயத்திற்கு சென்று கொடி மரத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும்.
பிறகு அந்த கொடி மரத்திலிருந்து ஆலயத்தை ஒருமுறை அடி பிரதக்ஷணம் செய்ய வேண்டும்.
இதன் பிறகு சாதாரணமாக 3 முறை கோவிலை வலம் வந்து இந்த ஜல்லியை கோவிலில் தானமாக தந்து விட வேண்டும்.
தானம் கொடுத்துவிட்டு ஆலயத்தில் உள்ள இறைவனை மனதார வழிபட்டால் விரைவிலேயே சொந்த வீடு கட்டும் கனவு பலித்துவிடும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |