தெய்வங்களுடைய புராணங்கள் படிப்பதால் வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்கள்
நம்மில் சிலருக்கு கஷ்டம் என்பது சாதாரணமாகி போனது.அதற்கு காரணம் மனமும் கூட. ஒரு சின்ன விஷயத்தை பெரிதாக கருதி நம் மனம் வருந்தி கொண்டிருக்கும்.
அந்த சமயத்தில் நமக்கு இறைவன் ஒரு வழி மட்டும் தான் வலியை தீர்த்து நல்ல காலம் பிறக்க அருள்புரிவார். அப்படியாக நம்மில் பல பேருக்கு ஜாதகத்தில் சில தோஷங்கள் இருப்பதாக ஜோதிடர்கள் சொல்வதை நாம் கேள்விப்பட்டிருப்போம்.
அவர்கள் தோஷங்களுக்கு பரிகார நிவர்த்தி கோவில்களுக்கு சென்று தோஷ நிவாரணமும் செய்யலாம். அதுமட்டுமல்லாமல் தெய்வங்கள் உடைய புராணக் கதைகளை எடுத்து படிப்பதால் அவர்களுடைய தோஷங்கள் நிவர்த்தி ஆவதை கண்கூடாக பார்க்க முடியும்.
உதாரணமாக தேவாரம், திருவாசகம், திருப்புகழ் ,திருமந்திரம் ,திருப்பாசுரம் ,திருவிளையாடல் புராணம், கந்த புராணம் இப்படி தெய்வங்களுடைய புத்தகங்களை எடுத்து படிக்க அதற்கான பலனை நம் கண்டிப்பாக பெற முடியும்.
மேலும் நிறைய பேருக்கு திருமண தடைகள் இருப்பதை நாம் பார்த்திருப்போம் அவர்கள் தெய்வங்களுடைய திருமண கதைகளை எடுத்து படித்தால் அவர்களுக்கு திருமண தடைகள் இருந்தால் விலகி சீக்கிரத்தில் நல்ல வரன் கைகூடி வரும்.
ஆக நம்பிக்கையோடு தெய்வங்களுடைய புத்தகங்களை எடுத்து படிக்கும் பொழுது நம் வாழ்க்கையில் இருக்கும் தோஷங்களும் நம் வாழ்க்கையில் இருக்கும் சங்கடங்களும் நீங்கி வாழ்க்கையில் நலம் பெறலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |