தானம் செய்யும் பொழுது இந்த தவறை மறந்தும் செய்து விடாதீர்கள்
இந்த உலகத்தில் மிகச்சிறந்த பரிகாரங்களில் "தானம்" செய்வது என்பது முக்கியமானதாக இருக்கிறது. அப்படியாக நாம் ஒவ்வொரு பொருட்களை தானம் செய்யும் பொழுது நமக்கு ஒவ்வொரு வகையான பலன்கள் கிடைக்கிறது.
மேலும் நாம் தானம் செய்யும் பொழுது எந்த கைகளை பயன்படுத்தி தானம் செய்கிறோமோ அதற்கு தகுந்தாற்போலும் பலன்கள் மாறுபடுவதாக சாத்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் ஒருவர் மறந்தும் இடது கையால் மட்டும் ஒருவருக்கு தானம் வழங்கி விடக் கூடாதாம். அதற்கு பின்னால் இருக்கக்கூடிய காரணங்களை பற்றி பார்ப்போம்.

பெரும்பாலும் ஒருவருக்கு தானம் வழங்குவது என்பது அவருடைய தேவையை அறிந்து செய்வதை காட்டிலும், அந்த நபர் ஏதேனும் ஒரு காலகட்டங்களில் செய்த பாவங்களை போக்கிக் கொள்வதற்காக செய்யக்கூடிய ஒரு விஷயமாக மாறிவிட்டது.
மேலும், நம்முடைய வலது கைகளில் தான் குரு சுக்கிரன் சந்திரன் மற்றும் சூரியன் செவ்வாய் இவர்களுடைய ஆதிக்கம் நிறைந்து இருக்கிறது. அதோடு, கிரகங்களில் மிகவும் சுபத்துவமான தன்மையை இந்த கிரகங்கள் பெற்றிருக்கிறது.
அந்த வகையில் ஒருவருக்கு நாம் தானம் அல்லது தர்மம் செய்யும் பொழுது இந்த கிரகங்களுடைய ஆதிக்கம் செலுத்தக்கூடிய வலது கைகளால் அவர்களுக்கு நாம் வழங்க பொழுது அவர்களுடைய புண்ணியமும் நமக்கு சேர்வதாக சொல்கிறார்கள்.
அதாவது அவர்களுக்கு நாம் அவர்களுடைய தேவையை கொடுக்கும் பொழுது அவர்கள் நமக்கு அவர்களுடைய புண்ணியத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். இதுதான் இதில் இருக்கக்கூடிய தத்துவமாகும். இந்த தத்துவத்தின் அடிப்படையிலேயே ஒருவர் வலது கைகளால் தானம் தர்மம் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள்.

இதுவே நாம் இடது கைகளால் தானம் செய்யும் பொழுது அவர்களுடைய பாவத்தை நாம் பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலை வருகிறது. காரணம் இடது கைகளுக்கு அசுப கிரகங்களாக ஜோதிடதில் கருதக்கூடிய ராகு கேது ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.
இவர்கள் பாவ கிரகங்களாக இருப்பதால் நாம் ஒருவருக்கு இடது கைகளால் தானம் வழங்கும் பொழுது அவர்களுடைய பாவத்தை நாம் பகிர்ந்து கொள்ள நேர்கிறது. மேலும், சனி பகவான் இந்த எந்த கரத்திற்கும் உரியவர் அல்ல.
சனி பகவான் தான் எதையும் சரியாக சமநிலையில் பார்த்து தீர்ப்பு வழங்கக் கூடியவர் அல்லவா அதனால் அவர் எந்த கரத்திற்கும் சொந்தக்காரராக இருப்பதில்லை. ஆக குழந்தைகள் வழியாக நாம் தான தர்மங்கள் செய்ய முற்படும் பொழுதும் அவர்களுக்கு இந்த நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுத்து வலது கைகளால் எதுவாக இருப்பினும் கொடுத்து பழக வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்கும் பொழுது நிச்சயமாக அவர்கள் வாழ்க்கையில் ஆசீர்வாதம் உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |