ரிஷப ராசியினரின் பரிகார ஸ்தலம் நெய் நந்தீஸ்வரர் கோயில்
புதுக்கோட்டையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும் காரைக்குடியில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கும் ஊர் வேந்தன்பட்டி ஆகும். அதன் அருகே 90 ஆண்டு பழைய வேப்பமரம் உள்ளது. இம்மரத்தின் பெயரால் அவ்வூர் வேப்பம்பட்டி என்று அழைக்கப்படுகிறது.
வேப்ப மரத்தின் கீழ் சுயம்புவாகக் கண்டறியப்பட்ட சிவலிங்கம் வேந்தன்பட்டியில் சொக்கலிங்கேஸ்வரர் என்ற பெயரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இக்கோயிலில் உள்ள அம்மனின் பெயர் மீனாட்சி அம்மை ஆகும்.
நந்தீஸ்வரர்
நந்தீஸ்வரர் கோவிலில் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலின் பெரிய நந்திக்கு தம்பியான இன்னொரு பெரிய நந்தி உள்ளது. இந்நந்தி தேவனே இக்கோயிலின் முக்கிய வழிபடு தெய்வம் ஆகும். நந்தியம் பெருமானுக்கு நெய் அபிஷேகம் செய்து மக்கள் தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றுகின்றனர்.
நந்தி சிறப்பிடம் பெற்றுள்ள கோயில் என்பதால் இங்கே கோயில் கொண்டிருக்கும் சிவபெருமான் நந்தீஸ்வரன் எனப்படுகிறார். முன் மண்டபத்தின் உச்சியில் சிவலிங்கத்திற்கு பதில் நந்திதேவர் இடம் பெற்றுள்ளார்.
உப சந்நிதிகள்
நந்தீஸ்வரர் கோவிலில் மற்ற சிவன் கோவில்களில் இருப்பதைப் போலவே விநாயகர், வள்ளி தெய்வானை சமேதராகிய சுப்பிரமணியர், பைரவர், மகாலட்சுமி, சூரியன் மற்றும் நவக்கிரக சன்னதிகள் உள்ளன.
நந்தியின் கதை
ஒரு சிவபக்தர் சிவலிங்கத்தை இங்குப் பிரதிஷ்டை செய்துவிட்டு நந்தி தேவரை பிரதிஷ்டை செய்யாமல் இருந்தார். நந்தி தேவரை தீர்த்தக் குளத்தில் வைத்திருந்தார். இதனால் வெகுண்ட நந்திதேவர் இப்பக்தருக்கு வயிற்று வலியை வரவழைத்தார்.
வயிற்று வலியால் அவதிப்பட்டபோது அவர் கனவில் மாடுகள் விரட்டின. மாடுகள் ஏன் விரட்டுகின்றன என்று கேட்டறிந்த போது நந்தி தேவரின் கோபம் புரிய வந்தது. உடனே அவர் தீர்த்தக்குளத்தில் இருந்த நந்தி தேவர் சிலையைக் கொண்டு வந்து சிவலிங்கத்திற்கு முன்பு பிரதிஷ்டை செய்து அதற்கு நெய் அபிஷேகம் செய்தார். அவருடைய வயிற்று வலி மறைந்து போனது
நெய்யபிஷேகம்
நந்தீஸ்வரர் கோவிலில் நந்திக்கு அபிஷேகம் செய்யப்படும் நெய்யை ஈ, எறும்பு மொய்க்காது. ஒருமுறை ஒருவர் இவ்வாறு கீழ் இறங்கி வந்த நெய்யை ஒரு பாத்திரத்தில் பிடித்து அதைக் கொண்டு சாமிக்கு விளக்கேற்றினார். ஆனால் அந்த எண்ணெய் சிவந்த நிறத்தில் மாறிப் போயிற்று.
அதன் பிறகு அபிஷேக நெய்யை வேறு எதற்கும் யாரும் பயன்படுத்துவதில்லை. கீழே வடிந்து வரும் நெய்யை கோயில் கிணற்றில் ஊற்றினர். அபிஷேகம் செய்யப்பட்ட நெய் ஊற்றப்பட்ட கிணறு இன்றைக்கு நெய்க் கிணறு என்று அழைக்கப்படுகின்றது ஏழாம் நூற்றாண்டில் வயிற்று வலி காரணமாக மதம் மாறிய கதை திருவதிகையிலும் நடந்துள்ளது.
சமணராக இருந்த மருள்நீக்கியார் கடும் வயிற்று வலி வந்து அவதிப்பட்டார் அவருடைய சகோதரி திலகவதி யார் சிவ பக்தையாவார் அவர் சிவபெருமானிடம் வணங்கி தன் தம்பி மருள் நீக்கியாரின் வயிற்று வலியை குணமாக்கினார்.
அதன் பிறகு மருள்நீக்கு யார் திருநாவுக்கரசர் என்ற பெயரில் சிவ பக்தராக மாறினார் வயோதிக காலத்தில் இவரே அப்பர் என்றும் அழைக்கப்பட்டார் இதனால் திருவதிகை சிவன் கோவிலில் இவர்கள் இருவருக்கும் சிலை வைக்கப்பட்டுள்ளது.
சூலை நோய் கொடுத்து பக்தர்களை ஆட்கொள்வது சிவபெருமானின் லீலைகள் ஒன்றாகும் அவ்வாறே நந்தீஸ்வரர் கோவிலில் நந்தியை பிரதிஷ்டை செய்யாததற்கு சிவபெருமான் அவருக்கு வயிற்று வலியை கொடுத்து நந்தி தேவரின் பிரதிஷ்டையை செய்வித்தார்.
நந்தியைப் பிரதிஷ்டை செய்த பக்த்ர் பின்பு அதற்கு நெய் அபிஷேகம் செய்தார். அவரைத் தொடர்ந்து மற்றவர்களும் இன்று வரை நெய் அபிஷேகம் செய்து வருகின்றனர். சமன, பௌத்த சமயங்களின் வருகைக்கு முன்பு இயற்கை வழிபாடும் முன்னோர் வழிபாடும் நம் தமிழகத்தில் இருந்து வந்தது அப்போது இறந்து போன வீரர்களுக்கு நடுகல் நட்டு அதற்கு நெய் பூசினர்.
பூவும் நெல்லும் மயிலிறகும் வைத்து வணங்கினர். இச்சடங்கு இறந்தவரை நினைவு கூரும் சடங்காக. இதனைத் தொடர்ந்து சமண தீர்த்தங்கரர் சிலைகளுக்கும் நெய் அபிஷேகம் செய்தனர். சமண சமயத்தில் தீர்த்தங்கரர்களின் சிலைகளைப் பிரதிஷ்டை செய்யும்போது இந்திரர்கள் அவர்களுக்கு அச்சிலைகளுக்கு அபிஷேகம் செய்வதாக நம்புகின்றனர்.
(பௌத்த சமயத்திலும் கௌதம் புத்தர் ஞான ஒளி பெட்ரா போது இந்திரன் அவருக்கு அபிஷேகம் செய்தார். இதன் தொடர்ச்சியாகவே சபரி மலை சாஸ்தா வழிபாட்டில் நெய் அபிஷேகமும் தேங்காய்க்குள் நெய் ஊற்றுவதும் முக்கிய இடத்தைப் பெறுகின்றது.).
எனவே இத்திருத்தலத்தில் இடபதேவர் என்ற ஆதிநாதர் (நந்தி) பிரதிஷ்டையின்போது சமணர்கள் நெய் அபிஷேகம் செய்திருப்பர். மற்ற மாநிலங்களில் ரிஷப தேவருக்கு மகா மஸ்தாபிஷேகம் நடக்கும்போது பக்தர்கள் அபிஷேகம் செய்யும் இந்திரன், இந்திராணி போன்ற ஒப்பனையுடன் கலந்து கொள்கின்றனர். ரிஷப தேவருக்கு தண்ணீர், பால், சந்தனம், நெய் மற்றும் பழங்களால் அபிஷேகம் செய்வது சமணர்களின் சமய நடைமுறையாகும்.
ரிஷப ராசி பரிகார ஸ்தலம்
நந்தீஸ்வரர் கோயிலில் நந்தி தேவர் முக்கியத்துவம் பெறுவதால் ரிஷப ராசி மற்றும் ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கான பரிகார ஸ்தலமாக இக்கோவில் கருதப்படுகின்றது. மேலும் கால்நடைகள் பெருகவும் பால் பாக்கியம் பெருகவும் இக்கோவிலுக்கு வந்து பக்தர்கள் வழிபடுகின்றனர்.
தங்கள் பசு மாடு கன்று ஈன்றவுடன் முதல் பாலை எடுத்து நெய் உருக்கி நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்கின்றனர். ஜல்லிக்கட்டில் தமது காளைகள் வெற்றி பெற வேண்டும் என்று இக்கோவிலுக்கு வந்து வேண்டுகின்றனர்.
மாட்டுப் பொங்கல் அன்று நந்தி தேவருக்கு பூ, பழம், இனிப்புகள் போன்றவற்றால் சிறப்பு அலங்காரம் செய்யப்படுகின்றது. பூசை மற்றும் வழிபாடுகள் நந்தீஸ்வரர் கோவிலிலும் மற்ற சிவன் கோவில்களில் நடப்பதை போலவே சித்திரை மாதம் சித்ரா பௌர்ணமி, வைகாசி மாதம் வைகாசி விசாகம், ஆனி மாதம் ஆனித் திருமஞ்சனம், புரட்டாசியில் நவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், கார்த்திகையில் திருக்கார்த்திகை, மார்கழியில் மகா சிவராத்திரி, தை மாதம் தைப்பூசத் திருவிழா, பங்குனி மாதம் பங்குனி உத்திரம், மற்றும் ஆருத்ரா தரிசனம் என்று அனைத்து மாதங்களிலும் கோவில் திருவிழாக்கோலம் பூண்டு காணப்படும். பிரதோஷ நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளால் கோயில் நிறைந்து இருக்கின்றது.
கோவில் முன் வரலாறு
ஏழாம் நூற்றாண்டில் ஞானசம்பந்தர் சமணர்களுடன் வாதிட்டு வென்றார். தோற்றுப் போன 8000 சமணர்களை கழுவேற்றும்படி அரிகேசரி மாறவர்மன் என்ற கூண் பாண்டியன் உத்தரவிட்டான். இத்தகவல் தக்கயாகப் பரணியில் பதிவாகியுள்ளது.
வைகை கரையில் உள்ள திரு ஏடகநாதர் கோபுரத்தில் சமணர் கழுவேற்ற சிற்பங்கள் உள்ளன. ஆவுடையார் கோவிலல் சமணர் கழுவேற்றிய காட்சியை விளக்கும் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 1974 ஆம் ஆண்டு வரைகழுவுற்ற நிகழ்ச்சி கோவிலில் நடத்தப்பட்டு வந்தது.
எண்ணாயிரம் பேர் கழுவேற்றப்பட்ட பின்பு சமணர்கள் மிக வேகமாக சைவர்களாக மாறினர். சமணர்கள் புழு பூச்சிகளுக்கு எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என்று சமயக் கட்டளை உடையவர்கள். ஆதலால் அவர்கள் வேளாண்மைத் தொழிலில் ஈடுபடவில்லை. உள்நாட்டு வெளிநாட்டு வணிகத்தில் ஈடுபட்டனர்.
இக்காலகட்டத்தில் மதுரையில் வாழ்ந்த சமண வணிகர்கள் சைவர்களாக மாறினர். சமண கோவில்களும் சைவக் கோவில்களாயின. அவ்வாறு மாற்றப்பட்ட கோவில்களில் ஒன்றாக நந்தீஸ்வரர் கோவிலும் (ரிஷப நாதர்)
ரிஷப நாதர் யார
சமணர்கள் தம் சமயத்தைத் தோற்றுவித்த ஆதி தீர்த்தங்கரரான ரிஷப நாதரை காளையின் மீது அமர்ந்திருக்கும் இறைவனாக சிலை வடித்து வணங்கினர். சமணர்கள் தம் சமயத்தின் 24 தீர்த்தங்கரர்களுக்கும் பறவை அல்லது விலங்கின் சின்னம் வைத்து வழிபட்டனர்.
கடவுள் நம்பிக்கை மற்றும் உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் அவர்களுக்கு மரியாதை செலுத்துவற்காக சிலை வணக்கத்தைக் கொண்டு வந்தனர்.
பரதனும் பாரதமும்
ரிஷப நாதர் கோசல நாட்டில் இட்சவாகு குலத்தைச் சேர்ந்த மன்னரான நபி ராஜா மற்றும் மறு தேவிக்கும் மகனாகப் பிறந்தார். இவருக்கு சுநந்தா, சுமங்களா என்று இரண்டு மனைவியார். சுனந்தாவுக்கு பாகுபலி, சுந்தரி என்று இரண்டு குழந்தைகள்.
சுமங்களாவுக்கு பரதன், பிராமி என்று இரண்டு குழந்தைகள் இருந்தனர். ரிஷபநாதர் தன் நாட்டின் வடபகுதியை முதலில் பிறந்த பரதனுக்கும் தென்பகுதியை இரண்டாவதாக பிறந்த பாகுபலிக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டு தவம் இயற்ற சென்றார்.
அயோத்தியில் பிறந்த ரிஷபநாதர் திருக்கைலாய மலையில் அஷ்டபாதம் என்ற இடத்தில் தன் 84ஆவது வயதில் நிர்வாண நிலை அடைந்தார். இதனால் ஆதிநாத்ர் என்ற ரிஷபநாதரின் இருப்பிடம் கைலாயம் என்று சமணர்கள் நம்புகின்றனர்.
ரிஷபதேவருடைய உபதேசங்கள் பூர்வ வேதம் எனப்படும். இவருடைய இளைய மகன் பாகுபலியும் துறவு மேற்கொண்டு இந்தியாவின் தென்பகுதியில் சமனத்தைப் பரப்பினார். மூத்த மகன் பரதன் பெயரால் வட இந்திய பகுதி பரத வர்ஷம் என்றும் பரத கண்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
விஷ்ணுவின் அவதாரம் ரிஷபநாதரின் செல்வாக்கு வடநாட்டில் பெருகி வந்த போது அங்கு வைணவர்கள் இவரை உரிமை கொண்டாடினர். பாகவத புராணம் இவரை விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாக சித்திரித்தது.
ரிஷப சின்னம் ஏன்?
ரிஷபநாதரின் தாய் அவரை கருவுற்றிருக்கும் போது 14 நல்ல கனவுகளை கண்டார். அவரைப் பிரசவிப்பதற்கு முன்பு ஒரு காளை மாட்டை கனவில் கண்டார். எனவே ரிஷப நாதரை காளை உருவில் சமணர்கள் வணங்குகின்றனர்.
ரிஷபமும் நந்தியும்
சைவ சமயப் பேரெழுச்சி ஏற்பட்ட பின்பு சமணர்களின் கோவில்கள் சைவக் கோவிலாக மாற்றம் பெற்றன அப்போது இடபநாதர் நந்தி தேவராக சிவன் கோவில்களில் நந்தி தேவர் ஆனார். பல ஊர்களில் ஆதிநாத்ர் கோயில்கள் ஆதிசிவன் கோயில்கள் எனப்பட்டன. இடபநாதருக்கு செய்யப்பட்ட அபிஷேகங்கள் நந்தி தேவருக்குத் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றன.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |