சூரிய, சந்திரர் வழிபடும் குரு ஸ்தலம் -தென்குடி திட்டை
தஞ்சாவூர் அருகே பத்து கிலோ மீட்டர் தோணிவில் உள்ள தென்திட்டை குடி என்று அழைக்கப்படும் தேவாரப் பாடல் பெற்ற 78ஆவது திருத்தலம் குரு பகவானுக்குரிய பரிகார ஸ்தலமாகும். இங்கு சுயம்புவாக எழுந்தருளியிருக்கும் மூலவரின் பெயர் ஸ்வயம்பேஸ்வரர் அம்பாளின் பெயர் மங்களாம்பிகை. தீர்த்தங்கள் மூன்று.
திட்டை திருத்தலத்தின் சிறப்பு
திட்டை என்னும் திருத்தலம் ஒரு பஞ்சலிங்க ஸ்தலமாகும். கோவிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கம் இருக்க நடுவில் மூலவர் குரு ரூபமாக வசிஷ்டேஸ்வரர் என்ற பெயரில் எழுந்தருளி இருக்கின்றார். அவருக்குச் சற்று தொலைவில் மங்களாம்பிகை தனிச்சன்னதியில் அருள்பாலிக்கின்றாள்.
இருவருக்கும் இடையில் குரு பகவான் சந்நிதி இருப்பதனால் அவரை ஞானகுரு என்றும் ராஜகுரு என்றும் அழைக்கின்றனர். இவரை தரிசித்தால் ராஜ யோகம் கட்டும் என்பதும் ஓர் ஆழமான நம்பிக்கை. தென்திட்டை குடிக்கு பல ஸ்தல புராணக் கதைகள் உண்டு.
எல்லா சமயங்களிலும் இருப்பது போல சைவ சமயத்திலும் ஜலப் பிரளயம் பற்றிய ஒரு கதை உண்டு. ஜலப் பிரளயம் ஏற்பட்டபோது சிவனும் பார்வதியும் தோணியிலேறி பயணப்பட்டனர். அவர்கள் ஓம் என்னும் மந்திர ஒலி கேட்டு வந்து சேர்ந்த இடம் சீர்காழி எனப்படும் தோணிபுரம் ஆகும். அது வடமேடு எனப்பட்டது. அதற்குத் தென்பகுதியில் இருக்கும் மணல் திட்டு தென்திட்டை எனப்பட்டது.
அம்மனின் பெயர்கள்
திட்டையில் எழுந்தருளியிருக்கும் மங்களாம்பிகைக்கு உலகநாயகி, சுகந்த குந்தளாம்பிகை, லோகநாயகி என்று பல பெயர்கள் உண்டு.
சிவனின் பெயர்கள்
திட்டையின் மூலவராகிய சிவபெருமானுக்கு அனந்தீஸ்வரர், தேனுபுரீஸ்வரர், வேதபுரீஸ்வரர், நாகநாதர், நாகேஸ்வரர், வசிஷ்டேஸ்வரர் என்று பல பெயர்கள் உள்ளன. குருவின் பெயரால் இத்தலம் விளங்குவதால் தேவர்களின் குருவான வசிட்டரின் பெயரால் இறைவன் அழைக்கப்படுகிறார்.
சூரியனின் வழிபாடு
தென்குடி திட்டைக் கோயிலின் கருவறையில் உள்ள மீது சிவலிங்கத்தின் மீது ஆவணி மாதம் 15 16 17 ஆம் தேதிகளில் சூரியனுடைய ஒளி கிரணங்கள் படியும். மீண்டும் பங்குனி மாதம் 25 26 27 ஆம் நாட்களில் சூரியனின் கதிரொளி பாயும். இதனை சூரிய வழிபாடு என்போம். சிவலிங்கத்தை சூரியன் தன் கதிர்க் கரங்களால் தொட்டு வழிபடும் நிகழ்வாகும்.
சந்திரனின் வழிபாடு
திட்டையின் சிவபெருமானுக்கு தினமும் இரவும் பகலும் அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகப் பிரியரான சிவபெருமானை பிரதோஷக் காலங்களில் பால், தேன், தயிர், விபூதி, மஞ்சள், இளநீர் தயிர் என்று பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்வது உண்டு.
தினமும் அவரது சிவலிங்கத்திற்கு தூய்மையான மாசற்ற தூய நீரினால் துளித்துளியாக அபிஷேகம் செய்யப்படுவது இத்திருத்தலத்தில் மட்டுமே. இவ் அபிஷேகத்துக்கு எங்கிருந்தும் தண்ணீர் கொண்டு வரப்படுவதில்லை.
காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை உள்வாங்கி சிவலிங்கத்தின் உச்சியின் மீது பதினைந்து இருபது நிமிடங்களுக்கு ஒரு முறை சொட்டு சொட்டாக நீர் விழுந்து விழுந்து நித்யாபிஷேகம் நடைபெறுகின்றது. தண்ணீர் கும்பம் இல்லாமல் தண்ணீரால் அபிஷேகம் செய்யப்படுவது எப்படி? என்று வினவினாள் நம்முடைய பண்டைய கட்டுமான அறிவியல் என்பதே பதில்
சந்திரகாந்தத்தின் மகிமை
ரத்தினங்களில் பல பல வகை உண்டு. அவற்றில் ஒன்று சந்திரகாந்தக் கல் எனப்படும் மூன்ன் ஸ்டோன் ஆகும். சுற்றியுள்ள காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை சந்திரகாந்தக் கல் உள்வாங்காமல் திருப்பி கொடுக்கும். அக் கள் ஏற்கெனவே குளிர்ச்சியாக இருப்பதால் மேலும் மேலும் ஈரத்தை உறிஞ்சிக்கொள்ள இயலாது. வெப்பமான கற்கள் ஈரத்தை உள்வாங்கி ஜில்லென்று இருக்கும். காற்றில் உள்ள ஈரப்பதம் நீர்த் துளியாகக் கல்லில் துளிர்க்கும், கல்லிலிருந்து சிந்தும் அல்லது வடியும் .
திருவிளையாடல் புராணத்தில்
திருநகர் சிறப்பு படலத்தில் மதுரையில் உள்ள மாட மாளிகைகளின் மற்றும் கூட கோபுரங்களின் சுவர்கள் சந்திரகாந்தக் கற்களால் ஆனவை என்று சொல்லப்பட்டுள்ளது. சந்திரகாந்தக் கல்லால் ஆகிய சுவரில் நீர் துளிர்ப்பதால் அறைகள் குளிர் பதனமூட்டியவை போல குளுகுளுவென்று இருக்கும். இது ஒரு இயற்கை ஏர் கண்டிஷன் ஆகும்.
வெப்பம் மிகுந்த மதுரை மாநகரில் வீடுகளுக்கு இயற்கையாகவே சந்திரகாந்தக் கற்கள் குளிரூட்டின. கட்டுமானத்துறை தொழில்நுட்பத்தின் தனித்தன்மையும் சிறப்புத் தகுதியும் பெற்றவர்கள் நாம் என்பதற்கு சந்திர காந்தக் கல் ஓர் உதாரணம்.
சிலையிலும் தரையிலும் சந்திரகாந்தம்
தென்குடி திட்டையில் சந்திரகாந்தக் கல்லை கருவறையின் விதானத்தில் மேல் கூரையில் பதித்துள்ளனர். சிவலிங்கத்திற்கு நேர் மேலே சந்திரகாந்தத்தில் பதிக்கப்பட்டு இருப்பதால் அங்குத் தண்ணீர் துளித்து சொட்டு சொட்டாக சிவலிங்கத்தின் மீது விழுகின்றது.
இதைப்போலவே திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோவிலிலும் கோவிலிலும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலிலும் தரையில் சந்திரகாந்தாக்கல் பதிக்கப்பட்டு இருப்பதால் தரையில் தண்ணீர் கிடப்பதைப் பார்க்கலாம். வேறு சில ஊர்களிலும் முருகன் கோவிலிலும் மாரியம்மன் கோவிலிலும் சாமி சிலைகள் சந்திரகாந்தக் கற்களால் செய்யப்பட்டு இருப்பவை.
எனவே அச்சிலைகளின் மேல் நீர் துளிர்த்துக் காணப்படும். அவற்றை மாரியம்மன் முகத்தில் உள்ள முத்துக்கள் என்று கூறுவர். முருகனுக்கு வியர்க்கின்றது என்றும் கோயில் பூசாரி தன் வெள்ளை வஸ்திரத்தால் தொட்டு அதில் ஈரம் படிந்திருப்பதைப் பக்தர்களுக்குக் காண்பிப்பார். சந்திரகாந்த கல் பயன்பாடு தமிழகப் பண்டைய கட்டுமானக் கலை சிறப்பின் வெளிப்பாடு.
கதை 1
சந்திரனின் நன்றியுணர்வு சந்திர பகவான் சிவபெருமானுக்கு 24 மணி நேரமும் தன்னுடைய குளிர்ச்சியான நீர் துளி துளிகளால் அபிஷேகம் செய்கின்றார் என்பதால் இங்கும் சந்திர வழிபாடு நடக்கின்றது.. இதற்கென்று ஒரு புராண கதையும் இயற்றப்பட்டுள்ளது. தட்சனின் 27 மகள்களைத் திருமணம் செய்த சந்திரன் அவர்களில் ரோகினி மீது மட்டும் அதிகப் பிரியமுடன் இருந்ததனால் மீதி 26 பெண்ர்களும் தன் தந்தையிடம் முறையிட்டனர்.
அவர் சந்திரனின் ஒளி கிரணங்கள் அற்றுப் போகும்படி சபித்தார். சாபம் பெற்றதால் இருண்டு போன சந்திரன் திங்களூர் வந்து சிவபெருமானை வணங்கி தன்னுடைய ஒளிக் கலைகள் வளர்ந்தும் தேய்ந்தும் போகும் வரத்தை பெற்றான்.
அதன் பின்பு அவன் இங்கு வந்து இத்லத்தில் ஞானகுருவாக விளங்கும் சுயம்பு நாதருக்கு நன்றி கூறிச் செனறான். ஏன் இங்கு வந்து நன்றி சொல்லவேண்டும் திங்களூர் சிவனுக்கே நன்றி சொல்லியிருக்கலாம் என்ற கேள்வி தோன்றுவது இயற்கை.
புரட்சியும் புராணங்களும்
சைவப் பேரெழுச்சி தோன்றிய காலம் என்பது சமயப் புரட்சி தோன்றிய காலம் ஆகும். புரட்சியின் நோக்கம் நமது வெற்றி எதிரியின் தோல்வி. இந்நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் புதிய சமய இலக்கியங்கள் புனையப்பட்டன.
அவ் இலக்கிய வகைகளில் ஒரு வகை, ஸ்தல புராணங்கள் ஆகும். இவை ஊருக்கு ஊர் பழைய வழிபாட்டு மரபுகளுக்குப் புதிய கதைகளும் காரணங்களும்தெரிவித்தன. . சமயப் புரட்சியின் நோக்கம் முன்பிருந்த கடவுள் மறுப்புச் சமயங்களை வாதில் வென்று வைதிக மரபை நிலைநாட்ட வேண்டும் என்பதே ஆகும். எனவே பௌத்த சமயக் கடவுளர்களை இழிவுபடுத்தும் நோக்கிலும் வைதீகக் கடவுளரைப் பெருமைப்படுத்தும் கதைகள் புனையப்பட்டன.
கதை 2
சக்கர தீர்த்தம் தென்குடி திட்டையில் மூன்று தீர்த்தங்கள் உள்ளன. அவை பசு தீர்த்தம், சூல தீர்த்தம், சக்கர தீர்த்தம் ஆகும். சக்கர தீர்த்தத்திற்கு மட்டும் ஒரு தனிக் கதை உள்ளது. காரணம் சூல தீர்த்தம் என்பது சிவபெருமானின் சூலாயுதத்தோடு தொடர்புடையது. பசு தீர்த்தம் என்பதும் காமதேனுவுடன் தொடர்புடையது. எனவே இறைவனுக்கு இன்னொரு பெயர் தேனுபுரீச்வரர்.
சக்கர தீர்த்தம் மட்டும் காரணம் இன்றி இங்குள்ளதாக தோன்றக்கூடாது என்பதற்காக அதற்கு ஒரு ஸ்தல புராணக்கதை உருவாக்கப்பட்டது. சக்கர தீர்த்தம் என்பது பௌத்தர்கள் வழிபாட்டிடங்களில் காணப்படும் தீர்த்தம் ஆகும். சக்கரம் பௌத்தர்களின் முதன்மைத் தெய்வமான இந்திரனின் ஆட்சியைக் குறிக்கும் சொல்.
இந்திரனுக்கு கோவில் இருந்த ஊர்களில் எல்லாம் சக்கரம் என்ற சொல் முக்கிய இடத்தைப் பெற்றது. இக்கோவிலில் இருந்த கந்து சிவலிங்கமாகக் கொள்ளப்பட்டு இக்கோவில் சிவன் கோவிலாக மாறிய பின்பு சக்கர தீர்த்தத்திற்கு ஒரு புதிய புராணக்கதை இயற்றப்பட்டது.
சக்கரம் திருமாலின் கையில் உள்ள ஆயுதம் என்று மாறிவிட்ட காரணத்தினால் இக்கதை திருமாலை தொடர்பு படுத்திய கதையாக விளங்குகின்றது. மது கைடபர் என்று அரக்கர்கள் யோக நித்திரையில் இருந்த திருமாலுக்கு பல தொல்லைகள் கொடுத்து வந்தனர்.
யோக நித்திரையில் இருந்து இவர்களின் தொல்லை தாங்காமல் விழித்த திருமால் தன்னுடைய தவ வலிமை குன்றி இருப்பதை உணர்ந்தார். தன் வலிமையைத் திரும்பப் பெற வேண்டி திட்டை என்னும் இத்திருத்தலத்திற்கு வந்து தன் சக்கராயுதத்தை பூமியில் எறிந்து ஓர் தீர்த்தம் உண்டாக்கினார்.
அதில் தினமும் குளித்து சிவபெருமானை வழிபட்டார். அதன் பின்பு அவருக்கு சிவயோகம் சித்தித்தது. பழைய வலிமையை திரும்பப் பெற்றார்.
கதை 3
நோய் தீரும் பதவி கிடைக்கும் நோய் நொடியால் வாடியவர்கள், பதவி இழப்பு காரணமாக பலம் இழந்து இருப்பவர்கள், பதவி பறிபோனவர்கள், தகுதி இழப்பு செய்யப்பட்டவர்கள், தோட்டை என்னும் இத்திருத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வணங்கினால் அவர்களுக்குப் பழைய சிறப்புக்கள் திரும்பக் கிடைக்கும். திட்டை திருத்தலம் சிவபெருமானும் பார்வதியும் பிரளயத்தின் போது வந்து சேர்ந்த இடம் ஆகும்.
ஓம் என்னும் ஓங்காரம் ஒலித்த இடத்தில் இவர்களின் தோணி தரை தட்டி நின்றது. அவ்வூர் தோணிபுரம் எனப்பட்டது. ஆனால் ஹம் என்னும் மந்திர ஒலி கேட்ட இடம் ஞான மேடு என்று அழைக்கப்பட்ட தென்குடித்திடடை ஆகும். இங்கு மந்திர ஒலி கேட்டதனால் இறைவன் ஞான குருவாக இருக்கின்றார். மேலும் கால பைரவரின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய இடம் இத் தென்குடித்திட்டையாகும்.
கருங்கல் கட்டுமானம்
தென்திட்டை கோவிலில் உள்ள சந்திரகாந்தக் கல் கோவிலின் கட்டுமானச் சிறப்புக்கு ஒரு சான்றாகும். இது தவிர இன்னொரு கட்டுமானச் சிறப்பும் இக்கோவிலுக்கு உண்டு. மற்ற ஊர்களில் இருப்பது போல இக்கோயில் கட்டப்படவில்லை. முழுக்க முழுக்க கருங்கற்களால் கட்டப்பட்டது. கோவிலின் விமானம் கலசம் கொடிமரம் ஆகிய அனைத்தும் கருங்கற்களால் கட்டப்பட்டன.
கருவறைச் சிறப்பு
கருங்கற்களின் நடுவே மூலஸ்தானத்தில் மட்டும் சிவபெருமானுக்கு மேல் சந்திரகாந்தக்கல் பதிக்கப்பட்டுள்ளது. இதனால் மூலஸ்தானம் எப்போதும் குளிர்ச்சியாக காணப்படும். அம்மன் சன்னதியின் முன் விதானத்தில் 12 ராசிகளின் படம் பொறிக்கப்பட்டுள்ளது. 12 ராசிகளின் படம் வேறு பல கோவில்களிலும் இருப்பதை காணலாம்.
நாக வழிபாடு நடந்த ஸ்தலம்
பௌத்த கோவில் இருந்த காலத்தில் நாக வழிபாட்டுக்குரிய தலமாகவும் இருந்திருக்கின்றது என்பதை இறைவனின் பெயர் நாகநாதர் என்றும் நாகேஸ்வரர் என்று இருப்பதால் அறியலாம்.
நாக தோஷம் தீர்க்குமிடம்
கருவறை நாதர் நாகநாத்ர் என்பதால் நாக தோஷம் மற்றும் காலசர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து நற்பலன் பெறலாம். திருமணத்தடை மற்றும் குழந்தை பேறின்மையால் அவதிப்படுவோர் இத்தலத்திற்கு வந்து வணங்கினால் அவர்களின் தோஷம் நீங்கி நல்ல குடும்பம் அமைந்து குழந்தைகளும் பிறக்கும்.
மாங்கல்ய பலம் அருளும் மங்களாம்பிகை
கதை 4
திட்டையில் அம்பாளின் பெயர் மங்களாம்பிகை அல்லது சுகந்த குந்தளாம்பிகை ஆகும். சுகந்த குந்தளா என்றால் வாசனையுள்ள தலை முடியைக் கொண்டவள் என்பது பொருள். ஒரு காலத்தில் இப்பகுதியில் சோமநாதர் ஒரு என்று ஒரு செல்வர் இருந்தார் அவருக்கு அருமை பெருமையாக ஒரே ஒரு பெண் குழந்தை பிறந்தாள் அவளுக்கு மங்களாதேவி என்று பெயர் சூட்டினார்.
ஒரு ஜோதிடர் மங்களாம்பிகையின் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு இவள் 16 வயதில் விதவை ஆவாள் என்று கூறினார். அக்கால வழக்கப்படி அவளுக்கு 13 வயதில் திருமணம் ஆகியது. அவள் தினந்தோறும் இத்தலத்தில் உள்ள மங்களாம்பிகையை வணங்கித் தனக்கு மாங்கல்ய பாக்கியம் அருளம்படி வேண்டினாள். அவளது 16ஆம் வயதில் பௌர்ணமி அன்று கால தேவன் அவள் கணவனின் உயிரைப் பறிக்க வந்தான்.
உண்மையை அறிந்து கொண்ட மங்களா தேவி கோவிலுக்குள் சென்று அம்பிகையை நெக்குருகி வணங்கி நின்றாள். அம்பிகை காட்சி அளித்து விபூதியை எடுத்துக் கொண்டு போய் காலதேவனின் மேல் தூவு. அவன் காணாமல் போய்விடுவான் என்றாள். மங்களாவும் அவ்வாறே செய்தாள். கால தேவன் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டான்.
ஆயுள்தோஷம் நீங்கும்
காலனை வென்ற தலம் என்பதால் ஆயுள் தோஷம் இருப்பவர்கள் இங்கு வந்து மங்களாம்பிகைக்கு சிறப்பு பூசனைகள் செய்தால் அவர்களின் ஆயுள் கெட்டிப்படும். பெண்களுக்கு மாங்கல்ய தோஷம் அல்லது ஜாதகத்தில் விதவா யோகம் இருந்தால் இத்தலத்திற்கு தொடர்ந்து வந்து மங்களாம்பிகையை வணங்கி வர அவர்களின் மாங்கல்ய பலம் உறுதிப்படும்.
காலதேவன்
காலதேவன் தோற்றோடிய புராணக்கதை இக்கோவில் முன்பு கால தேவனின் கோவிலாக இருந்ததை உறுதி செய்கின்றது. காலச்சக்கரம் அல்லது தர்மசக்கரம் என்பது பௌத்தர்களின் அடையாளமாகும். பௌத்த மடாலயங்களை எழுப்பிய இடங்களில் எல்லாம், காலம் நகர்ந்து கொண்டே இருக்கும்.
ஆனால் தர்மம் நிலைபெற்று நிற்கும் என்ற தாரக மந்திரத்தை உறுதி செய்யும் பொருட்டு சூரிய சந்திரன் உருவம் பொறித்த கற்களை நிறுத்தி காலதேவனின் கால மாற்றத்தை உறுதி செய்யும் போதனைகளைப் பரப்பினர். இக்கோவிலில் இன்று காணப்படும் சூரிய சந்திர வழிபாடுகள், சக்கர தீர்த்தம், கால தேவனின் தோல்வி ஆகியன பௌத்த சமயம் தோற்றுப் போன வரலாற்றை நிலை நிறுத்துகின்றன.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |