இடி மின்னல் மழையாக வந்த அங்காளம்மா
அம்பிகை என்றாலே சக்தி வாய்ந்தவள்.அதிலும் அங்காளபரமேஸ்வரி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள் என்று அனைவரும் அறிந்தது.அப்படியாக திருவண்ணாமலையில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் ஒரு சிறிய கிராமத்தில் இந்த அங்காள பரமேஸ்வரி ஆலயம் அமைய பெற்று இருக்கிறது.
காடுகளை கடந்து அந்த கிராமத்தை அடைந்தால் அங்கு தாயாரை நாம் தரிசிக்க முடியும்.அந்த கிராமத்து மக்களுக்கு அம்பாள் தாயாக இருந்து காவல் காத்து வருகின்றாள். சிலையாக நாம் அங்காளபரமேஸ்வரியை பார்த்து இருப்போம்.ஆனால் இங்கு தாயார் லிங்க வடிவில் காட்சி கொடுக்கிறார்கள்.
இங்கு இன்னொரு விஷேசம் என்னவென்றால் இக்கோயிலுக்கு பின்னால் ஒரு குளம் ஒன்று உள்ளது.அந்த குளத்திற்கு சித்தர்கள் பலர் வந்து செல்கின்றனர் என்ற தகவலும் சொல்ல படுகிறது.
மேலும் இந்த கோயிலை சுற்றி அதிக மூலிகை நிறைந்த செடிகள் இருப்பதாகவும் அந்த காற்றை சுவாசிக்க பல விதமான நோய்கள் குணமாகிறது என்றும் அந்த ஊர் மக்கள் சொல்லுகின்றனர்.மேலும் அந்த சக்தி வாய்ந்த அம்மனின் அதிசயங்களை கீழ் உள்ள பதிவை பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |