நாளைய ராசி பலன்(05-12-2025)

Report

மேஷம்:

உங்களுடைய மதிப்பு உயரும் நாள். சிலர் சமுதாய பணிகளில் பங்கு கொள்வீர்கள். மதியம் மேல் எதிர்பாராத நபரின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும். நணபர்களுடன் பேசும் பொழுது கவனம் தேவை.

ரிஷபம்:

வம்பு வழக்குகளில் சிக்கி கொள்ளாமல் பார்த்து கொள்ளுங்கள். கணவன் மனைவி இடையே சிறு விஷயத்தால் கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்புகள் உள்ளது. கோபம் குறைத்து கொள்ள வேண்டும்.

மிதுனம்:

காலை முதல் மனம் பதட்டமாக இருக்கும். உடன் பிறந்தவர்களால் இவர்களுக்கு நன்மைகள் உண்டாகும். பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். மாமன் வழி உறவால் நன்மை உண்டாகும்.

இந்த ராசியில் பிறந்த பெண்கள் மிகவும் பிடிவாதம் குணம் கொண்டவர்களாம்

இந்த ராசியில் பிறந்த பெண்கள் மிகவும் பிடிவாதம் குணம் கொண்டவர்களாம்

கடகம்:

உங்கள் சிந்தனையில் கவனமாக இருக்க வேண்டும். சிலருக்கு எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரலாம். வங்கி தொடர்பான சிக்கல்கள் விலகும். வாழ்க்கை துணையிடம் நிதானமாக பேசுங்கள்.

சிம்மம்:

அரசு வழியில் உங்களுக்கு நல்ல அனுகூலம் கிடைக்கும். எதிரிகள் தொல்லை விலகி நன்மை அடையும் நாள். பத்திரம் விவகாரங்களில் கவனமாக இருக்க வேண்டும். பெரிய நபர்களின் உதவி கிடைக்கும்.

கன்னி:

குடும்பத்தின் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். உங்கள் வீடுகளில் சந்தித்த குழப்பங்கள் தீரும். முகம் தெரியாத நபரின் வழியே நல்ல ஆதாயம் பெறுவீர்கள். சுற்றுலா சென்று மகிழும் நாள்.

துலாம்:

காலை முதல் மனம் பதட்டமாக இருக்கும். வழக்கு விஷயங்களில் சந்தித்த சிக்கல் விலகும். உங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட மன குழப்பங்களுக்கு நல்ல முடிவு கிடைக்கும். நன்மையான நாள்.

விருச்சிகம்:

நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். நிதானமாக செயல்பட்டு காரியம் சாதிப்பீர்கள். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட குழப்பம் விலகும்.

வாஸ்து: தவறியும் இந்த 2 சுவாமி படங்களை ஒன்றாக வைத்து விடாதீர்கள்

வாஸ்து: தவறியும் இந்த 2 சுவாமி படங்களை ஒன்றாக வைத்து விடாதீர்கள்

தனுசு:

இன்று உங்களுக்கு யோகமான நாள். மனதில் உண்டான விலகும். உங்கள் திறமை நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வேலை நல்ல முடிவு பெரும். எதிர்பார்த்த பண வரவு கிடைக்கும்.

மகரம்:

பூர்வீக சொத்தில் இருந்த விவகாரம் நல்ல முடிவு பெரும். குடும்பத்தில் சந்தித்த நெருக்கடிகள் விலகும் நாள். உறவினர்கள் வழியே கிடைத்த உதவியால் மகிழ்ச்சி அடையும் நாள்.

கும்பம்:  

உங்களின் உழைப்பு உழைப்பு அதிகரிக்கும். திட்டமிட்டு எந்த வேலையும் சரியாக செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும் நாள். சிலர் வீண் பழி சந்திக்கலாம்.

மீனம்:

உங்களின் முயற்சி வெற்றி அடையும் நாள். நீண்ட நாட்களாக தொழில் ரீதியாக சந்தித்த சண்டைகள் விலகும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நன்மையான நாள்.       

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US