இன்றைய ராசி பலன்(08-08-2025)
மேஷம்:
இன்று உங்களுக்கு புதிதாக சில நட்புகளின் அறிமுகம் கிடைக்கலாம். வீடுகளில் சந்தித்த பிரச்சனைகள் நல்ல முடிவைப்பெறும். குழந்தைகள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவீர்கள்.
ரிஷபம்:
இன்று உங்களின் மகிழ்ச்சியான நாள். வீடுகளில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். வண்டி வாகனத்தில் செல்லும் பொழுது மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும். நன்மையான நாள்.
மிதுனம்:
இன்று உங்களிடம் வேலை பார்பவர்களிடத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். தாய் உடல்நிலையில் கவனம் தேவை. பிரிந்து சென்ற சொந்தங்கள் உங்களை தேடி வந்து பேசுவார்கள்.
கடகம்:
குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகும். பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்துடன் கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்வீர்கள்.
சிம்மம்:
இன்று வியாபாரத்தில் சில தடைகள் வரலாம். நினைத்த லாபத்தை பெற முடியவில்லை என்றாலும் நஷ்டம் வராமல் பார்த்துக்கொள்வீர்கள். சகோதரி வழி உறவால் நன்மைகள் நடக்கும்.
கன்னி:
மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்த வேண்டும். இன்று கொஞ்சம் மந்தமாக செயல்படுவீர்கள். சிலர் எதிர்கால வாழ்க்கையை பற்றி கவலை கொண்டு இருப்பார்கள். கவனமாக இருக்க வேண்டிய நாள்.

297 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அற்புத நிகழ்வு- இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம் காத்திருக்கின்றதாம்
துலாம்:
இன்று வேலையில் பொறாமையின் காரணமாக சிலர் சில பழிகள் சுமத்தலாம். எதிர்பாராத வாழ்க்கை மாற்றங்களை சந்திப்பீர்கள். தந்தை வழி உறவால் ஆதாயம் கிடைக்கும்.
விருச்சிகம்:
இன்று உங்கள் வங்கி கணக்குகளை சரி பார்க்க வேண்டும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் விலகும். உடன் பிறந்தவர்களால் சில நன்மைகள் பெறுவீர்கள்.
தனுசு:
இன்று அதிரடியாக சில முடிவுகளை எடுக்காதீர்கள். சில தடைகளை கடந்து சாதனை செய்வீர்கள். பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். விடாமுயற்சியால் நினைத்ததை சாதிப்பீர்கள்.
மகரம்:
இன்று பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிக்கான பேச்சு வார்த்தை நல்ல முடிவைப் பெரும். விருந்தினர் வருகையால் மனதில் மகிழ்ச்சி கிடைக்கும்.
கும்பம்:
குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மரியாதை கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உங்களுக்கு பிடித்த நபர்கள் உங்களுக்கு உங்களுக்கு சில பரிசு பொருட்கள் கொடுப்பார்கள்.
மீனம்:
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். நிலம் தொடர்பான பிரச்சனைகள் உங்களுக்கு சாதகமாக அமையும். தொலைத்தூர பயணம் மேற்கொள்வீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







