அதிர்ஷ்டம் பெருக வீட்டில் இந்நேரத்தில் கதவு, ஜன்னலை திறந்து வையுங்கள்
இந்து மதத்தில் வீடு கட்டுவது முதல் அதன் அலங்காரம் வரை அனைத்திற்கும் வாஸ்து முக்கியமாக பார்காமப்படுகிறது.
அந்தவகையில், லட்சுமி வீட்டிற்கு வரும் நேரத்தில் ஜன்னல்கள், கதவுகளை மூடி வைப்பது தவறானதாகும்.
அதனால் எந்த நேரத்தில் கதவு, ஜன்னலை திறக்க வேண்டும் மூட வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்.
பலருக்கும் வீட்டில் லட்சுமி தேவி குடியிருக்க வேண்டும்,. நிதி நிலை உயர வேண்டும் என்பதே ஆசையாகும்.
வாஸ்து சாஸ்திரப்படி லட்சுமி தேவி வீட்டிற்கு வரும்போது வீட்டு கதவை திறந்து வைத்தால் மங்களம் உண்டாகும் என்று சொல்லப்படுகிறது.
இந்து மதத்தில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி அன்று மாலை நேரத்தில் லட்சுமி தேவி வீட்டிற்குள் வருவதாக கூறப்படுகிறது.
மேலும் ஒவ்வொரு நாளும் ஒரு முறை லட்சுமி தேவி வீட்டிற்கு வருவதாகவும் சொல்லப்படுகிறது.
அதாவது சூரிய உதயமாகும் நேரமான பிரம்ம நேரத்தில் லட்சுமி தேவி வீட்டிற்கு வருவார் என்பதால், இந்த நேரத்தில் கதவு, ஜன்னல்களை திறந்து வைப்பது சுபமாகும்.
இதேபோன்று சூரிய அஸ்தமனமாகும் நேரத்திலும், வீட்டில் விளக்கேற்றி கதவு,ஜன்னல்களை திறந்து வைப்பதும் மங்களகரமானதாகும்.
இப்படி செய்வதன் மூலம் வீட்டில் எதிர்மறை ஆற்றல் விலகி, நேர்மறை ஆற்றல் வரும் என்று நம்பப்படுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |