இந்த விளக்கை வீட்டில் ஏற்றி வைப்பது யாகம் செய்ததற்கு சமம்
நம் வீடுகளில் அகல் விளக்கு, வெள்ளி விளக்கு, காமாட்சி விளக்கு, குத்து விளக்கு என்று பலவகையான விளக்குகளை ஏற்றி வழிபடுவது உண்டு.
இவற்றை பூஜையறையில் வைத்து தினமும் காலை, மாலை ஏற்றுவதும் வழக்கம் உண்டு. பொதுவாக, தினமும் காலையும், மாலையும் வீட்டில் விளக்கேற்றுவது வீட்டுக்கு சுபிட்சத்தைத் தரும். வீட்டில் தினமும் விளக்கேற்றுவது கெட்ட சக்திகளை விரட்டி, பாசிட்டிவ் எனர்ஜியை கொடுக்கும்.
அது மட்டுமில்லாமல் அனைத்து செல்வச் செழிப்பையும் கொண்டு வந்து சேர்க்கும். பஞ்சகவ்யம் என்பது பசுவிலிருந்து எடுக்கப்படும் ஐந்து வகை பொருட்களாகும். பால், நெய், தயிர், கோமியம், சாணம் ஆகியவற்றை சரியான விகிதத்தில் சேர்த்து அத்துடன் இன்னும் சில மூலிகைகள் சேர்த்து ஏற்றப்படுவதே பஞ்சகவ்ய விளக்காகும்.
இதை விளக்கை வீட்டில் ஏற்றி வைப்பது யாகம் செய்ததற்கு சமம் என்று கூறப்படுகிறது. பஞ்சகவ்ய விளக்கை வீட்டில் ஏற்றி வைப்பது மகாலக்ஷ்மியின் அருளையும், செல்வ செழிப்பையும், நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சி, நிம்மதி போன்றவற்றை தரக்கூடியதாகும்.
இந்த விளக்கை ஏற்றுவது நாம் செய்த பாவங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமையுடையது என்று நம்பப்படுகிறது.
இது 100 சதவீதம் இயற்கையான மற்றும் உடலுக்கு ஆரோக்கியம் தருவதாகும். பஞ்சகவ்ய விளக்கு ஏற்றியதும் 10 முதல்15 நிமிடங்களில் நன்றாக எரிந்து முடிந்துவிடும். பிறகு இதனுடைய சாம்பலை விபூதியாக பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் ஒரு விளக்கை எடுத்து நீரில் 10 விநாடிகள் நனைத்து பின் விளக்கில் பஞ்சகவ்யம் சேர்த்து ஏதேனும் தட்டின் மேல் வைத்து ஏற்றி வைக்கவும். முக்கியமாக செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் காலை மற்றும் மாலை 6 மணிக்கு மேல் ஏற்றுவது சிறப்பாகும்.
இதனால் உண்டாகும் புகை வீடு முழுக்க பரவி, நல்ல நறுமணத்தைத் தரும். இது ஒரு கிருமிநாசினி என்பதால் வீட்டில் உள்ள கெட்ட கிருமிகளை அழிக்கும்.
நினைத்த காரியம் நிறைவேறும். பூலோகத்து காமதேனு என்று அழைக்கப்படும் பசுவிடமிருந்து எடுக்கப்படும் இந்த ஐந்து வகையான பொருட்கள் நல்ல பலனையே தரும் என்பதில் ஐயமில்லை.
இதை தொடர்ந்து 48 நாட்கள் வீட்டில் ஏற்றி வந்தால், கடன் பிரச்னை தீரும்.
குடும்பத்தில் அமைதி நிலவும், கண் திருஷ்டி அகலும். இது நாட்டு மருந்து கடைகளிலேயே சுலபமாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |