2026: அட்சய திருதியை அன்று தங்கம் வெள்ளி வாங்க முடியாதவர்கள் என்ன வாங்கலாம்?

By Sakthi Raj Apr 07, 2026 10:10 AM GMT
Report

இந்துமத பண்டிகைகளில் அட்சய திருதியை என்பது மிகவும் முக்கியமான நாளாக பார்க்கப்படுகிறது. அன்றைய நாள் பலரும் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்வார்கள். இன்னும் கூடுதலாக அட்சய திருதியை அன்று நாம் தங்கம் வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதால் நம்முடைய வீடுகளில் செல்வம் பெருகும் என்று நம்பிக்கை உள்ளது.

ஆனால் அட்சய திருதியை அன்று எல்லோராலும் தங்கம் வெள்ளி வாங்கக்கூடிய வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அந்த வகையில் தங்கம் வெள்ளி வாங்க முடியாதவர்கள் அன்று என்ன செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

2026 ஆம் ஆண்டு அட்சய திருதியை ஏப்ரல் 20 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. அந்த வகையில் அட்சய திருதியை அன்று தங்கம் வெள்ளி வாங்க முடியாதவர்கள் என்ன வாங்கலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

2026: அட்சய திருதியை அன்று தங்கம் வெள்ளி வாங்க முடியாதவர்கள் என்ன வாங்கலாம்? | What Are Things We Should Buy On Akshaya Tritiya

திருமண பத்திரிக்கை அடித்த பிறகு தவறியும் இந்த 5 காரியங்கள் செய்யக்கூடாதாம்

திருமண பத்திரிக்கை அடித்த பிறகு தவறியும் இந்த 5 காரியங்கள் செய்யக்கூடாதாம்

1. அட்சய திருதியை அன்று புதிதாக மண்பாண்டம் வாங்குவது மிகவும் மங்களகரமானதாக பார்க்கப்படுகிறது. களிமண் என்பது செவ்வாய் மற்றும் புதன் பகவானுடன் தொடர்பு கொண்டது. அதனால் அட்சய திருதியை அன்று புதிய மண்பாண்டம் வாங்கி அதில் நீர் நிரப்பினால் அல்லது அதை தானம் செய்தால் வீடுகளில் மன அமைதியும் பொருளாதாரத்தில் நிலையான தன்மையும் உருவாக்கும்.

2. அதேபோல் அட்சய திருதியை அன்று வீடுகளில் சமையலுக்கு தேவையான புதிய பாத்திரங்கள் சமையல் உபகரணங்கள் போன்றவை வாங்கலாம்.

இவை குடும்பத்தில் வளம், செழிப்பு, நல்ல வாழ்வு, மங்களம் ஆகியவற்றை கொடுக்கிறது. அதைப்போல் வெண்கலம் பித்தளை பொருட்கள் வாங்கினாலும் சிறப்பான பலன்கள் தரும்.

3. தங்கம் குரு பகவானுக்கு உகந்த உலோகமாகும். அதேபோல் கொண்டைக்கடலை குருபகவானுக்குரிய தானியமாகும். அதனால் தங்கும் வாங்க முடியவில்லை என்று வருத்தம் அடைய தேவை இல்லை.

2026: அட்சய திருதியை அன்று தங்கம் வெள்ளி வாங்க முடியாதவர்கள் என்ன வாங்கலாம்? | What Are Things We Should Buy On Akshaya Tritiya

ஜோதிட ரீதியாக ஒருவருக்கு நல்ல காலம் எப்பொழுது துவங்கும் தெரியுமா?

ஜோதிட ரீதியாக ஒருவருக்கு நல்ல காலம் எப்பொழுது துவங்கும் தெரியுமா?

அன்றைய தினம் குரு பகவானுடைய அருள் கொண்டைக் கடலை அரிசி ஆகியவற்றை வாங்கி வைத்து நாம் வழிபாடு செய்யலாம். இதனால் வீடுகளில் பொருளாதார சிக்கல்கள் விலகி நிலையான வருமானம் கிடைக்கும்.

4. ஜோதிடத்தில் வெள்ளை நிறம் சுக்கிர பகவானுக்கு உரிய நிறமாகும். அதனால் வீடுகளில் செல்வம் பெருக மல்லிகை பூ, பச்சரிசி, கல் உப்ப போன்ற வெள்ளை நிற பொருட்கள் வாங்கினால் சுக்கிர பகவானுடைய அருள் கிடைத்து மகிழ்ச்சியும் பொருளாதாரத்தில் சிறந்து விளங்கக்கூடிய தன்மையையும் அவை கொடுக்கிறது.

5. அதைப்போல் இந்து மதத்தில் மங்களப் பொருட்களாக கருதக்கூடிய மஞ்சள் குங்குமம் வெற்றிலை பாக்கு ஆகியவற்றை வீடுகளில் வாங்கி வைத்து வழிபாடு செய்யலாம். இவற்றை மகாலட்சுமிக்கு படைத்து வழிபாடு செய்யும் பொழுது மகாலட்சுமி பரிபூரண அருள் நமக்கு கிடைக்கிறது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US