பழனி முருகனை இந்த நாளில் மட்டும் தரிசனம் செய்து விடாதீர்கள்.. காரணம் இதோ.

Report

 முருகப்பெருமான் அறுபடை வீடுகளும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில் அறுபடை வீடுகளில் தனித்துவமாக திகழ்வது பழனி தண்டாயுதபாணி மலைக்கோவில். காரணம், அங்கு மட்டும்தான் முருகப்பெருமான் ஒரே நாளில் ஆறுவிதமான கோலங்களில் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

அதோடு இங்கு மட்டுமே போகர் சித்தரால் செய்யப்பட்ட நவபாஷாண திருமேனியாக முருகனை மற்றும் கையில் அருணகிரிநாதரை கிளி வடிவில் தாங்கிய ரூபத்தில் தரிசனம் செய்ய முடியும். இவ்வாறு எத்தனையோ சிறப்புகள் இந்த பழனி முருகன் ஆலயத்தில் இருக்கிறது.

அப்படியாக, பழனி முருகன் ஆலயம் நாம் எந்த நாளில் எந்த நேரத்தில் தரிசனம் செய்தாலும் சிறப்பு பலன்களை கொடுக்கும் என்றாலும் குறிப்பிட்ட சில நேரத்தில் நாம் சென்ற தரிசனம் செய்ய மிகப்பெரிய அற்புத பலன்களை நாம் பெறலாம் என்று சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.

பழனி முருகனை இந்த நாளில் மட்டும் தரிசனம் செய்து விடாதீர்கள்.. காரணம் இதோ. | When Is The Right Day To Worship Palani Murugan

தலையெழுத்தை நொடியில் மாற்றும் முருகப்பெருமானின் சக்தி வாய்ந்த மந்திரம்

தலையெழுத்தை நொடியில் மாற்றும் முருகப்பெருமானின் சக்தி வாய்ந்த மந்திரம்

பழனி முருகனை தரிசனம் செய்ய உகந்த தினமாக செவ்வாய்க்கிழமை இருக்கிறது. ஆகையால், அன்றைய தினம் காலை 6 மணியிலிருந்து 9 மணிக்குள் மலை ஏறி பழனி முருகனை ஆண்டி கோலத்தில் தரிசனம் செய்தால் நம் வாழ்க்கையில் சந்திக்கின்ற எப்பேர்பட்ட தடையும் விலகி உயர்ந்த நிலையை அடையலாம்.

செவ்வாய்க்கிழமை நவகிரகங்களில் உள்ள செவ்வாய் பகவானுக்கு உரிய தினமாகும். செவ்வாய் பகவானுக்கு அதிதேவதை முருகப்பெருமான். ஆகையால் முருகப்பெருமானை ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் நிலம், வீடு தொடர்பான பிரச்சனைகளை இருப்பவர்கள் கட்டாயம் இந்த நேரத்தில் தரிசனம் செய்வது அவர்களுக்கு நல்ல பலனை கொடுக்கும்.

அதேபோல், செவ்வாய்க்கிழமை காலை 6 முதல் 7 மணி வரையிலான நேரம் செவ்வாய் ஹோரை எனப்படுகிறது.

பழனி முருகனை இந்த நாளில் மட்டும் தரிசனம் செய்து விடாதீர்கள்.. காரணம் இதோ. | When Is The Right Day To Worship Palani Murugan

2026: ஜூலை மாதம் கவனமாக இருக்க வேண்டிய மிதுனம்.. பேச்சால் ஆபத்து காத்திருக்கிறதாம்

2026: ஜூலை மாதம் கவனமாக இருக்க வேண்டிய மிதுனம்.. பேச்சால் ஆபத்து காத்திருக்கிறதாம்

இந்த நேரத்தில் நாம் வழிபாடு செய்வது மிகவும் சக்தி வாய்ந்தது. மேலும், பழனி முருகனை ஆண்டி கோலத்தில் நம் தரிசனம் செய்கின்ற பொழுது நாமும் ஆண்டியாகி விடுவோம் என்று பலரும் தவறான கருத்துக்களை கொண்டிருக்கிறார்கள்.

அதனால் ராஜா அலங்கார கோலத்தை காண தான் பலரும் காத்து நிற்பது உண்டு. உண்மையில் ஒரு மனிதனுக்கு வறுமையை போக்குவதற்கு ஆண்டி கோல தரிசனமே மிகச்சிறந்த பலன் கொடுக்கும். ஆண்டி கோலம் என்பது நம்மை ஆள வந்த கோலம் அல்லது ஆண்டவன் கோலம் என்பதே இதனுடைய பொருள்.

இந்த நேரங்களில் இந்த கோலத்தின் தரிசனம் செய்யும் பொழுது வாழ்க்கையில் கட்டாயம் முருகனுடைய அருளால் மிகப்பெரிய உயரம் அடைவது நிச்சயம்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US