2025ஆம் ஆண்டு முதல் கிரகப்பெயர்ச்சி-எந்த ராசிகளுக்கு வெற்றி

By Sakthi Raj Dec 19, 2024 10:35 AM GMT
Report

நவக்கிரகங்களில் முதன்மையாக விளங்கக்கூடியவர் சூரிய பகவான். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் வருகின்ற ஜனவரி மாதம் 2025 ஆம் ஆண்டு மகர ராசிக்கு சூரிய பகவான் செல்கின்றார் இது சனி பகவானின் சொந்தமான ராசியாகும். ஒரு ஆண்டிற்கு பிறகு சூரியன் மகர ராசிக்கு செல்கிறார்.இதனால் சில ராசிகளுக்கு ராஜ யோகத்தை உருவாக்க போகிறது.அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.

தனுசு ராசி:

தனுசு ராசியில் இரண்டாவது வீட்டில் சூரியன் பயணம் செய்யப் போகின்றார்.இதனால் இவர்களுக்கு பல ஆண்டு காலம் ஏற்பட்ட மனக்குழப்பங்கள் முற்றிலுமாக விலகும்.பல ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் நிம்மதியாக கோயிலுக்கு செல்லும் வாய்ப்பு உருவாகும்.

புதிய வீடு,வாகனம் வாங்கும் அதிர்ஷ்ட வாய்ப்பு உருவாகும்.கடனால் அவதிப்பட்ட காலம் முற்றிலுமாக மாறப்போகிறது.பிள்ளைகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.திருமணம் முடியாதவர்களுக்கு எதிர்பார்த்த திருமண வரன் அமையும்.

மனிதர்கள் ஒரு இயந்திரமா?கிருஷ்ணர் சொல்வது என்ன?

மனிதர்கள் ஒரு இயந்திரமா?கிருஷ்ணர் சொல்வது என்ன?

துலாம் ராசி:

துலாம் ராசிகளில் நான்காவது வீட்டில் சூரியன் பயணம் செய்யப் போகின்றார்.இதனால் துலாம் ராசி சந்தித்த மறக்கமுடியாத துன்பகள் அவர்களை விட்டு விலகும்.பொன் பொருள் சேர்க்கை,விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்கும் யோகம் உருவாகும்.

புதிதாக வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள்.வியாபாரத்தில் மற்றும் வேலை இடங்களில் உங்கள் மதிப்பு உயரும்.திருமண வாழ்க்கையில் நல்ல மாற்றம் உருவாகும்.வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

ரிஷப ராசி:

ரிஷப ராசியில் ஒன்பதாவது வீட்டில் சூரியன் பயணம் செய்யப்போகின்றார்.இதனால் இவர்கள் போட்ட முதலீட்டில் நல்ல லாபம் பெறுவார்கள்.பல நாள் வியாபாரத்தில் முன்னேற்றத்தை சந்திக்காமல் இருந்த ரிஷப ராசிக்கு இது ஒரு பொற்காலம்.

நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.தந்தை உறவு உங்களுக்கு பக்கபலமாக இருக்கும்.மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.எதிரிகள் தொல்லை முற்றிலும் விலகும்.இடம் மாற்றம்,தொழில் மாற்றம் உங்களுக்கு சாதகமாக அமையும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

   

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US