யாருக்கு வெளிநாடு மற்றும் வேறு மொழி பேசும் நபருடன் திருமணம் நடக்கும்
ஜோதிட ரீதியாக நாம் எதிர்காலங்களை தெரிந்து கொள்ளலாம். ஒரு சிலருக்கு வாழ்க்கையில் எப்பொழுதுமே தொடர்ந்து வேறு மொழி, வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருக்கக்கூடியவரின் நட்பு சிறுவயதிலிருந்து கிடைப்பதை பார்க்க முடியும். இது அரிதான விஷயம் கிடையாது.
இது அவர்களுடைய ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்தால் அந்த அமைப்பு இருந்திருக்கும். அந்த வகையில், எந்த ஜாதக அமைப்பு கொண்டவர்களுக்கு வெளிநாடு, வெளி மாநிலம் அல்லது வேறு மொழி பேசும் நபர்களுடன் திருமணம் நடக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

ஜாதகத்தில் ஏழாம் இடம் என்பது திருமணத்தை குறிக்கக்கூடியது. அந்த ஏழாம் வீட்டில் ராகு இருந்தாலும் அல்லது 7 ஆம் அதிபதியுடன் ராகு சேர்ந்திருந்தாலும் வேறு சாதி வேறு மொழி பேசும் நபருடன் திருமணம் நடக்கும்.
அதை போல், ஏழாம் அதிபதி ராகு நட்சத்திரத்தில் இருந்தால் துணை வேறு சமுதாய பின்னணியை கொண்டு இருப்பார்கள்.

சுக்கிரன் மற்றும் ராகு சேர்ந்திருந்தால் அவர்களுக்கு வழக்கத்திற்கு மாறான உறவுகள் மற்றும் திருமணம் போன்ற நிகழ்வு நடக்கும். ஒருவருடைய ஜாதகத்தில் ஐந்தாம் இடம் மற்றும் ஏழாம் இடத்து அதிபதி தொடர்பு பெற்றாலும் குடும்ப எதிர்ப்புகளை மீறி திருமணம் நடக்கும்.
அதை போல், ஐந்தாம் அதிபதியும் ராகுவும் தொடர்பு பெற்றாலும் பாரம்பரிய எல்லைக்கு மீறி காதல் திருமணம் நடக்கிறது, ஏழாம் அதிபதி 12 ல் இருந்தாலும் அவர்களுக்கு குடும்பம் அல்லது பழக்கமான சமூக வட்டாரத்திலிருந்து திருமணம் முடிகிறது.
இவ்வாறான அமைப்புகளை கொண்டு நாம் ஒருவருக்கு எந்த மொழி எப்படிப்பட்ட திருமண வாழ்க்கை நடக்கும் என்பதை பற்றி பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.