எல்லா மந்திரங்களும் ‘ஓம்’ என்று துவங்குவதற்கு என்ன காரணம்?

By Sathya May 13, 2024 10:58 AM GMT
Report

எல்லா மந்திரங்களும் ஓம் என்று தொடங்குவதற்கு காரணம் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

வேதத்தில் ஓம் நமசிவாய என்பது பஞ்சாட்சரம் என்று உள்ளது. சிவ உபாசனை செய்கிறவர்கள் இதை சொல்வார்கள். மேலும், தியானமும் செய்வார்கள்.

யோக மார்க்கத்தில் செல்கிறவர்கள் பஞ்சாட்சரத்தை ஸ்தூல பஞ்சாட்சரம் என்றும் சூக்கும பஞ்சாட்சரம் என்றும் பாகுபடுத்தி சொல்வார்கள்.

இதுவே மார்க்கத்தில் செல்பவர்களுக்கு ஸ்தூல பஞ்சாட்சரம் என்பதும், சூக்கும பஞ்சாட்சரம் என்பதும் பாகுபாடு கிடையாது.

யோக மார்க்கத்தில் செல்பவர்கள் பாகுபடுத்தி சொல்வதற்கு என்ன காரணம் என்றால், ஓம்நமசிவாய, நமசிவாய, சிவாயநம, சிவா, வசி இப்படி மாத்திரைகளைச் சுருக்கிக் கொண்டு போக சூக்கும்மாகிவிடுகிறது.

Why do all mantras start with

குறிப்பாக பிராணாயமம் செய்கிற போது பூரகம், கும்பகம், ரேசகம் என பழகும்போது ஒவ்வொன்றுக்கும் எத்தனை மாத்திரை கால அளவு கொடுக்கலாம் என்ற சந்தேகம் வருகிறது.

அதாவது, எண்ணிக்கையால் காலத்தை அளப்பதை விட மந்திர உச்சரிப்பால் அளப்பது மிகுந்த பலன் தரும் என்பதால் சூக்குமம் தோன்றின.

குருவிடமிருந்து உபதேஷம் பெறாமலேயே பஞ்சாட்சரத்தை ஜபம் செய்த பலரும் முக்தி அடைந்துள்ளார்கள். தூக்கம் வராத போது இவற்றில் ஏதாவது ஒரு மந்திரத்தை சொன்னால் நல்லது.

அ, உ, ம ஆகிய மூன்று எழுத்துக்களுடன் ‘ம்’ என்ற ஒலியும், அதன் நாதமும் இணைந்து உள்ளடக்கியது “ஓம்’ என்ற சொல். இதில் ‘அ’ என்பது பிரம்மனையும், ‘உ’ என்பது விஷ்ணுவையும், ‘ம’ என்பது ருத்ரனையும், ‘ம்’ என்பது சக்தியையும், நாதம் சிவ பரம்பொருளையும் குறிக்கிறது.

உலக இயக்கத்தைக் குறிப்பது 'ஓம்’ ஆகும். . கல்வியறிவு மற்றும் தவ அறிவு எல்லாவற்றிற்கும் இந்த மந்திரமே வாசலாக உள்ளது என்று திருவிளையாடல் கூறுகிறது.

இதனால் தான், எல்லா மந்திரங்களையும் ‘ஓம்’ என்று துவங்குகின்றனர். முருகனை, சிவனை, கிருஷ்ணனை வணங்குகிறேன் என்று இஷ்ட தெய்வத்தை ‘ஓம்’ என்று கூறி பிரார்த்திப்பர்.   

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US