அர்ஜுனனுக்கும் துரியோதனனுக்கும் ஒரே கிருஷ்ணர்… ஏன் முடிவு மட்டும் வேறானது?
உலகத்தை காக்கக்கூடிய பரம்பொருள் கிருஷ்ண பகவானை ஒருவர் மனதார நினைக்கத் தொடங்கிவிட்டால் அந்த மனதிற்கு எந்த பிறவியிலும் எந்த துன்பமும் வராத அளவிற்கு கிருஷ்ண பகவான் பாதுகாத்து அருள்கிறார்.
அந்த வகையில் எல்லோரும் வியந்து போற்றக்கூடிய மகாபாரதம் நம்மை பல நேரங்களில் பல விஷயங்களைப் பற்றி ஆராய்ந்து சிந்திக்கத் தூண்டுகிறது. அந்த ஆராய்ச்சியின் இறுதியில் தான் மனிதன் இன்னும் மீண்டும் மீண்டும் இறைவனை நோக்கி நெருக்கமாக நடக்கிறான்.
அந்த வகையில், மகாபாரதத்தில் குந்தி தேவி கிருஷ்ண பகவானிடம் சொல்ல கூடிய ஒரு முக்கியமான ஒரு பகுதியை பற்றி பார்ப்போம்.

"மன்னே த்வாம் காலமீசானம் அநாதி-நிதனம் விபும் |
ஸமம் சரந்தம் ஸர்வத்ர பூதானாம் யன்மித: கலி: ||"
இந்த இடத்தில் குந்தி தேவி கிருஷ்ண பகவானை பார்த்து என்ன சொல்கிறார் என்றால், இறைவனே நீயே நித்தியமானவன். முழு படைப்பையும் ஆளக்கூடிய ஒருவன் நீயே. எல்லோருடைய இதயங்களிலும் சமமாக இருக்கக்கூடியவர்.
உன்னை பொறுத்தவரை யாரும் உனக்கு சொந்தமானவரும் இல்லை, அதை போல் அந்நியர் என்ற வேறுபாடுகளும் இல்லை. ஆனால், உலகம் என்ன சொல்கிறது? கிருஷ்ண பகவான் பாண்டவர்களுக்கு தான் ஆதரவாக இருந்தார் என்று சொல்கிறது. ஆனால் அன்னை குந்தி தேவி என்ன சொல்கிறார் தெரியுமா?

இல்லை கிருஷ்ண பகவான் யாருக்கும் தனிப்பட்ட முறையில் ஆதரவு அளிக்கவில்லை. கிருஷ்ண பகவான் எல்லோருக்கும் உரியவர். சூரியன் எவ்வாறு உதிக்கும் பொழுது அது நல்லவர் கெட்டவர் என்று பாகுபாடு பார்ப்பதில்லை. அதன் கதிர்கள் அனைவர் மீதும் சமமாகவே விழுகிறது. ஆனால், ஒருவர் தங்களுடைய வீட்டு கதவுகளை மூடிக்கொண்டால் அதற்கு சூரியன் காரணமாக முடியாது அல்லவா?
அதே போல், தான் இறைவனுடைய அருளும் அனைவர் மீதும் சமமாகவே விழுகிறது. சிலர் தங்களுடைய இதயங்களை திறந்து வைத்து வழிபாடு செய்கிறார்கள். இறைவனுக்கு இடம் கொடுக்கிறார்கள்.
ஆனால், வேறு சிலர் அங்காரம் என்னும் சுவர்களை எழுப்பி கொள்கிறார்கள். அர்ஜுனனுக்கு கிடைத்த அதே கிருஷ்ண பகவான் தான் துரியோதனனுக்கும் கிடைத்தார் அல்லவா? ஆனால், அர்ஜுனனோ :என் குரு விஷ்ணு பகவானே போதும்" என்று அவரை சரணடைந்தார்.
துரியோதனோ "எனக்கு நானே போதும்" என்று கருதினார். இறைவன் இங்கு யாரிடமும் பாகுபாடு காட்ட வில்லை. அந்த வேறுபாடு இதயத்தின் உணர்வுகள் மட்டுமே இருந்தது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |