தீபாவளி அன்று ஏன் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் தெரியுமா?
தீபாவளி என்றாலே அனைவருக்கும் கொண்டாட்டம் தான். பலரும் இந்த தீபாவளியை எதிர் பார்த்து காத்திருப்பார்கள். காரணம் தீபாவளி அன்று அவர்கள் புத்தாடை அணிந்து உறவினர்களோடு வெடி வெடித்து பலகாரம் உண்டு கொண்டாட கூடிய ஒரு அற்புதமான நிகழ்வாகும்.
அப்படியாக தீபாவளி கொண்டாட்டம் இந்து மதத்தில் முக்கியமான பண்டிகை என்றாலும் இந்த தீபாவளி கொண்டாட்டத்திற்கு பின்னால் நிறைய காரணம் இருக்கிறது. அதை பற்றி பார்ப்போம். பொதுவாகவே தீபாவளி என்றால் பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது நரகாசுரன் மற்றொன்று அன்றைய தினம் நாம் வீடுகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது.
அதாவது தீபாவளி அன்று நாம் எந்த விஷயம் செய்கின்றோமோ இல்லையோ கட்டாயம் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். இவ்வாறு தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து அதிலும் வெந்நீரில் குளிக்க வேண்டும். இவ்வாறு குளிப்பது புனித கங்கா நதியில் நீராடிய புனிதத்தை நமக்கு கொடுப்பதாக சொல்கிறார்கள்.
மிக முக்கியமாக தீபாவளியன்று எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது அன்றைய நாள் மட்டுமாவது நாம் சிகைக்காய் பயன்படுத்தி குளிப்பது மிகவும் நன்மையை கொடுக்கும். காரணம் எண்ணெய்யில் மகாலட்சுமியும், சிகைக்காயில் சரஸ்வதி தேவியும், வெந்நீரிலும் கங்காவும் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இவ்வாறு நாம் அன்று குளிப்பது நம்முடைய பாவங்களை போக்குவதாக சொல்கிறார்கள். மேலும் தீபாவளி என்று எண்ணெய் தேய்த்து குளிப்பது என்பது நரகாசுரனை மகிழ்விப்பதற்கான ஒரு முக்கியமான காரணம் என்று அனைவருக்கும் தெரியும்.
அதோடு சேர்த்து விடியற்காலையில் நல்லெண்ணையை நம்முடைய தலையில் தேய்த்து குளிப்பதனால் மகாலட்சுமியின் அருள் நமக்கு கிடைப்பதாக ஐதீகம். வெந்நீரில் கங்கை எழுந்து அருளிக்கிறார் என்பதால் அதிகாலை வெந்நீரில் குளிக்க வேண்டும். இதனால் நமக்கு புண்ணியம் கிடைக்கிறது.
மேலும், தீபாவளி என்று சூரியன் உதிக்கும் முன்பாகவே அதிகாலையில் நாம் எண்ணெய் தேய்த்து குளிப்பது தான் அன்றைய நாளிற்குரிய பலனை கொடுக்கும். அதாவது அதிகாலை 3 மணி முதல் 6:00 மணிக்குள் குளிப்பது நன்மை அளிக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







