எந்த ராசிக்காரர்களை சமாளிப்பது கஷ்டம்?கோபக்கார ராசிக்காரர்கள் யார்?
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் மிகவும் சுதந்திரமான சிந்தனை உடையவர்கள் அவர்களை யாரேனும் கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும் என்று நினைத்தால் கஷ்டம்.
எந்த வேலை செய்தாலும் அதில் முழு அர்ப்பணிப்போடு செய்வார்கள்.எத்தனை பெரிய சவால்களையும் எளிதில் முடிக்க கூடிய ராசி மேஷ ராசிக்காரர்கள்.
அவர்கள் மிகவும் நல்ல தலைமைத்துவ பண்புகளைக் கொண்டுள்ளனர்.சுயசிந்தனை உடையவர்கள் மேஷ ராசி அன்பர்கள்.அவர்கள் வாழ்க்கையில் மூன்றாவது நபர் தலையிட்டால் அவர்களால் அதை பொறுத்து கொள்ள முடியாது.
இயல்பிலே இவர்கள் கொஞ்சம் பிடிவாத ராசி காரர்கள் ஆக சமயங்களில் இந்த பிடிவாதமோ பிரச்சனைகளுக்கு காரணமாக அமையும்.
சிம்மம்
சிம்ம ராசி காரர்கள் தலைமை பண்பில் சிறந்தவர்கள். தன்னுடைய ஆளுமையால் பிறரை எளிதாக கவர்ந்து விடுவார்கள்.
பிறர் சொல்லி கேட்காத ராசி சிம்ம ராசி.சமயங்களில் அவர்களின் இயலப்பான ஆளுமை தன்மை பிறரை மட்டம் தட்டுவது போலும்,அவர்களை மதிக்காதது போலும் காட்சி அளிக்கும்.
ஆதலால் பிறர் சொல்லுவதையும் கொஞ்சம் கவனித்தால் அவர்களுக்கு நல்ல நட்பு வட்டாரம் கிடைப்பதோடு பாராட்டுகளையும் பெறலாம்.
தனுசு
தனுசு ராசி காரர்கள் பரந்த மனப்பாங்கு உடையவர்கள்.தன பேச்சு தான் செயல் தான் விருப்பப்படி சுற்றுவட்டாரம் கேட்க வேண்டும் எண்ணுபவர்கள்.
மேலும் தனுசு ராசி காரர்கள் ரகசியம் கடைபிடிப்பவர்கள்.பிறரிடம் எளிதில் மனம் திறந்து பேசமாட்டார்கள்.
பேச்சில் அர்த்தம் இருந்தாலும் நேரங்களில் அர்த்தமற்ற விவாதங்களை தவிர்த்தால் வாழ்க்கையில் சிறப்பான மனிதராக திகழலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |