நாளைய ராசி பலன்(29-11-2025)
மேஷம்:
இன்று பழைய நட்புகளை சந்திக்க வாய்ப்புகள் உள்ளது. மனதிற்கு பிடித்தவர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். எதிர்கால வாழ்க்கை தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும் நாள்.
ரிஷபம்:
காலை முதல் மனம் சற்று பதட்டத்துடன் இருக்கும். வீண் கோபம் வாக்கு வாதம் செய்வதை தவிர்த்து விடுங்கள். சிலருக்கு குலதெய்வ வழிபாடுகளால் நன்மை உண்டாகும்.
மிதுனம்:
சக ஊழியர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். தொழில் தொடர்பாக நீங்கள் திடீர் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். வருமானத்தை உயர்த்த கடின உழைப்பு கொடுக்கும் நாள்.
கடகம்:
மனதில் தெளிவு பிறக்கும். வருகின்ற துன்பத்தை எளிதாக கடந்து செல்வீர்கள். உங்களை பற்றி பிறர் சொல்லும் விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் இருப்பதால் நிம்மதி அடையலாம்.
சிம்மம்:
வியாபார ரீதியாக உங்கள் கூட்டாளியுடன் பிரச்சனை வரும். முடிந்த வரை கடன் வாங்காமல் இருங்கள். மனைவி வழியே உங்களுக்கு மதியம் மேல் சில எதிர்ப்புகள் வரலாம்.
கன்னி:
திருமண வாழ்க்கையில் உள்ள பிரச்சனை நல்ல முடிவு அடையும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விஷயம் உங்களுக்கு கைகூடி வரும். சிலருக்கு கடன் தொல்லை விலகும்.
துலாம்:
வாழ்க்கையை பற்றிய புரிதல் கிடைக்கும் நாள். உடன் இருப்பவர்களின் முழு ஆதரவு பெறுவீர்கள். சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகளும் வீண் அலைச்சலும் வரலாம்.
விருச்சிகம்:
வீண் கோபம் தவிர்க்க வேண்டும். பிறரிடம் மென்மையாக பேசுவது அவசியம். நீங்கள் சொல்லும் கருத்துக்களை பிறர் தவறாக புரிந்து கொள்ளும் நிலை வரலாம். கவனம் தேவை.
தனுசு:
இன்று உங்களையும் உங்கள் சுற்றி உள்ளவர்களையும் புரிந்து கொள்வீர்கள். குடும்பத்தில் உங்களின் மதிப்பு உயரும். மன சங்கடம் விலகி நன்மை உண்டாகும் நாள்.
மகரம்:
குடும்பத்தினர் தேவதைகளை பூர்த்தி செய்வீர்கள். அரசியல் தொடர்பான விஷயங்களில் அதிக ஈடுபாடு செலுத்த வேண்டாம். வீண் வம்பு வழக்குகள் சந்திக்கூடும்.
கும்பம்:
தொழில் ரீதியாக சந்தித்த சிக்கல் விலகும். நீண்ட நாட்கள் கைக்கு வராத பணம் கைகளுக்கு வந்து சேரும். வங்கி தொடர்பன விஷயங்களில் இருந்த சிக்கல் விலகும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
மீனம்:
பிள்ளைகளுக்கு தேவையான விஷயங்களை செய்து கொடுப்பீர்கள். ஆன்மீக ஈடுபாடு அதிகம் இருக்கும். மதியம் மேல் நண்பர்களுடன் நேரத்தை செலவு செய்யும் நாள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |