ஏழரை சனி: இந்த எளிய பரிகாரங்கள் போதும் - பிரச்சனை விலகும்
சனி பாதிப்பிலிருந்து விடுபட செய்ய வேண்டிய எளிய பரிகாரங்களை தெரிந்துக்கொள்வோம்.
ஏழரை சனி
சனி பகவான் ஒரு ராசியில் சஞ்சரிக்கும் போது, அந்த ராசிக்கும், அதற்கு முன் மற்றும் பின் உள்ள ராசிகளை ஏழரை சனி பாதிப்பு ஏற்படுத்தும். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு 2 1/2 ஆண்டுகளுக்கு ஒரு முறை பெயர்ச்சி ஆவார்.
அந்த வகையில் இந்த ஆண்டு மார்ச் 29ஆம் தேதி கும்பத்தில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். இதனால் ஏழரை சனி நடக்கக்கூடிய ராசிகள் வேலை, தொழில் தொடர்பான விஷயத்தில் அசுபமான பலன்களையும், சிக்கலான சூழ்நிலையையும் சமாளிக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
பரிகாரம்
எனவே, இந்த சனி பாதிப்பிலிருந்து விடுபட, சனிக்கிழமைகளில் விரதம் இருந்து அனுமான் வழிபாடு செய்து, சனி ஸ்தோத்திரத்தை உச்சரிப்பது நல்லது.
சனிக்கிழமைகளில் அதிகாலையில் குளித்து சுத்தமான ஆடைகளை அணிந்து தூய மனதுடன் வீட்டில் பூஜை செய்து, அருகில் உள்ள கோயிலுக்கு சென்று வரவும்.
ஏழரை சனி அல்லது ஜாதகத்தில் அசுபமான இடத்தில் சனி பகவான் இருப்பின் ஒவ்வொரு சனிக்கிழமையும், வெள்ளம் மற்றும் கருப்பு எள் கலந்த நீரை அரசமரத்திற்கு ஊற்றவும். தினமும் சூரிய பகவானுக்கு அர்க்கியம் செய்ய வேண்டும். மாலை நேரத்தில் நல்லெண்ணெய் ஊற்றிய தீபத்தில் கருப்பு எள் திரியில் அரச மரத்திற்கு கீழே ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
முடிந்த போதெல்லாம் வீட்டிற்கு அருகில் இருக்கக்கூடிய சிவ ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்து வரலாம். இதன் மூலம் இன்னல்கள் விலகும்.