தினம் இதை செய்தால் வீட்டில் திருஷ்டி இருக்காது
"சொல்லடி பட்டாலும் கண் அடி படக்கூடாது” என்பார்கள், நாம் நல்ல எண்ணங்களில் இருந்தாலும் பிறர் மனம் மற்றும் ஏதேனும் தீய சக்திகளும் நம்மை சுற்றி இருப்பது நம் கண்ணுக்கு தெரியாது, அதை நாம் அறியவும் முடியாது.
கண் திருஷ்டி இருப்பவர்கள் அதிக சோர்வுடன் காணப்படுவார்கள், எந்த வேலையில் மனம் ஈடுபாட்டுடன் இருக்காது.
மனக்கஷ்டம், பணத்திற்கு கஷ்டம் என எதிர்மறையான செயல்களே மேலோங்கி இருக்கும், வீட்டில் அடிக்கடி பிரச்சனைகள் வரலாம்.
நிம்மதி இல்லாத வாழ்க்கை என அடிக்கடி தோன்றவும் செய்யலாம், கெட்ட கனவுகள், தூக்கம் இல்லாமல் தவிப்பது, சோகமாய் இருப்பது, கணவன்- மனைவி இடையே பிரச்சனை என சந்தோஷங்கள் தொலைந்து போகும்.
இப்படியான சூழல்கள் இருந்தால் திருஷ்டி கழிப்பது அவசியம்.
என்ன செய்யலாம்?
* தினமும் இரவு தூங்கும் முன் ஒற்றை படையில் நம் குடும்பத்தினருக்கு சூடம் சுற்றி வாசலில் வைப்பது நல்லது. அது நமக்கு நம் வீட்டுக்கும் வர ஆபத்துகளில் இருந்து காக்க உதவியாக இருக்கும். அப்படி சூடம் எரிக்கும் பொழுது நம் திருஷ்டியும் நெருப்பில் பட்டு கழிந்து விடும் என்பது ஐதீகம், இதை மறக்காமல் சோம்பல் பார்க்காமல் தினம் செய்தாலே பல ஆபத்துகளில் இருந்து நம்மை காப்பாற்றி விடலாம்.
* கெட்ட சக்தி நுழையாமல் தடுக்க பௌர்ணமியில் வீட்டு வாசலில் நீர் பூசணி கட்டி தொங்க விடலாம்.
* தெரு மண், கடுகு, உப்பு, வரமிளகாய் (ஒற்றை படையில்) எல்லாம் சேர்த்து கிழக்கு பார்த்து மூன்று முறை சுற்றிவிட்டு விறகு அடுப்பில் போட்டு எரிக்கவும், செவ்வாய் அல்லது ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் இதை செய்து வரலாம்.
* சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் சிறிது ஏலக்காய், கிராம்பு, மூன்று அல்லது நான்கு கற்பூரம் சேர்த்து எரிக்க வேண்டும், இந்த நெருப்பை வீட்டின் அனைத்து அறைகளிலும் காட்ட வேண்டும், இப்படி செய்வதால் எதிர்மறை ஆற்றல் நீங்கும்.