செவ்வாய்க்கிழமை ஆஞ்சநேயர் வழிபாட்டிற்கு ஏன் எவ்வளவு சிறப்புகள் தெரியுமா?
ஒரு மனிதன் வலிமையோடு எழுந்து போராட வேண்டும் என்றால் நிச்சயமாக அவர்களுக்கு முழு வழங்கக்கூடிய தெய்வமாக ஆஞ்சநேயர் இருக்கிறார். மேலும், செவ்வாய்க்கிழமை என்றாலே பல இந்து மரபுகளில் முதலில் நினைவிற்கு வருவது முருகப்பெருமான் தான்.
ஆனால், இங்கு நாம் ஆஞ்சநேயரையும் வழிபாடு செய்வது மிக சிறந்த நற்பலன்களை கொடுக்கும் என்று சொல்கிறார்கள். ஆஞ்சநேயர் வீரம், வலிமை, பக்தி நம்பிக்கை ஆகியவற்றின் அடையாளமாக வழிபாடு செய்யப்படுகிறார்.

ஸ்ரீ ராமபிரானின் மீது அவர் கொண்டுள்ள அளவற்ற பக்தியால் செய்ய முடியாத காரியங்களையும் செய்து முடித்தவர் என்று ராமாயணம் நமக்கு எடுத்துச் சொல்கிறது. ஏன் செவ்வாய்க்கிழமை ஆஞ்சநேயரை வழிபாடு செய்கின்றோம் என்பதை பற்றி பார்ப்போம்.
பொதுவாகவே, ஆஞ்சநேயர் சிறப்பு ஸ்ரீ ராமர் மீது அவர் கொண்ட அளவற்ற பக்தி. அனுமன் சக்தியை பற்றி பெருமை கொள்ளாமல் அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணித்தவர். அதனால் தான், ஆஞ்சநேயர் நமக்கு ஒரு முக்கியமான செய்தியை உணர்த்துகிறார்.

எப்பொழுதும் நம்பிக்கையுடன் இறைவனை நாடினால் தடைகள் வந்தாலும் மனம் தளராமல் முன்னேற்றம் அடையலாம்.
செவ்வாய்க்கிழமை ஆஞ்சநேயரை வழிபாடு செய்கின்ற பொழுது தொழில் ரீதியாக சந்திக்க கூடிய நஷ்டங்கள் எதிரிகளால் தொல்லை கடன் நெருக்கடிகள் போன்றவற்றிலிருந்து நாம் விடுபடலாம். மேலும், மனதில் நம்பிக்கையும் நமக்கு கிடைக்கிறது. நினைத்த காரியங்களை எளிதில் சாதிக்க கூடிய வல்லமை பெறுகின்றோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |