நாளைய ராசி பலன்(22-11-2025)
மேஷம்:
இன்று உங்கள் நண்பர்கள் வழியே உங்களுக்கு ஆதரவும் ஆறுதல்களும் கிடைக்கும். சிலருக்கு திடீர் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு வரலாம். மதியம் மேல் உங்கள் குழப்பத்திற்கான விடை கிடைக்கும்.
ரிஷபம்:
இன்று கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகும். இருப்பினும் வாழ்க்கை துணையிடம் சற்று கவனமாக பேச வேண்டும். முகம் தெரியாத நபர்களிடம் இருந்து உதவிகள் கிடைக்கும்.
மிதுனம்:
தொழில் வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகள் விலகும் நாள். குடும்பத்தில் சில குழப்பங்களும் மன கசப்புகளும் உருவாகும். வேலை செய்யும் இடத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
கடகம்:
உங்கள் மனதில் உள்ள குறைகள் யாவும் விலகும். உங்கள் வீட்டிற்கு விருந்தினர் வருகையால் சில நன்மைகள் நடக்கும். பிரிந்து சென்று சொந்தங்கள் மீண்டும் உங்களை வந்து பேசுவார்கள்.
சிம்மம்:
தொடர் பிரச்சனைகளால் உங்களுக்கு மன சங்கடங்கள் வரலாம். பொருளாதார பிரச்சனையில் இருந்த சிக்கல்கள் விலகும். முன்னோர்களின் வழிகாட்டுதலால் நன்மை அடைவார்கள்.
கன்னி:
மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். சிலருக்கு வங்கி தொடர்பான விஷயங்களில் சிக்கல் வரலாம். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். கவனம் தேவை.
துலாம்:
உங்கள் மனதில் தன்னம்பிக்கையும் தெளிவும் பிறக்கும். உங்களை சுற்றி உள்ளவர்கள் உங்களை பற்றி புரிந்து கொள்வார்கள். மதியம் மேல் நீங்கள் நினைத்த விஷயங்கள் நடக்கும்.
விருச்சிகம்:
உங்கள் ஆரோக்கியத்தில் இருந்த தடைகள் யாவும் விலகும். மதியம் மேல் நீங்கள் நினைத்த செய்தி உங்களை தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் சந்தித்த பிரச்சனைகள் யாவும் விலகும்.
தனுசு:
வீடு மற்றும் பூர்வீக தொடர்பான விஷயங்களில் இருந்த சண்டைகள் யாவும் விலகும். சொந்தங்கள் மத்தியில் உங்களுக்கு மதிப்பு உயரும். அக்கம் பக்கத்தில் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.
மகரம்:
தொலை தூர பயணம் செல்லும் பொழுது மிகவும் கவனமாக இருங்கள். உங்களுக்கு பிடித்த விஷயங்கள் செய்வதில் சில தடைகள் வரலாம். பெற்றோர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
கும்பம்:
அரசு வழியில் சந்தித்த சிக்கல்கள் யாவும் விலகும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் எல்லாம் விலகும். உடன் பிறந்தவர்களால் சில சங்கடம் சந்திக்கலாம்.
மீனம்:
பிள்ளைகள் உடல் நிலையில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சிலருக்கு மருத்துவ செலவுகள் வரலாம். உங்கள் வருமானத்தில் சந்தித்த தடைகள் விலகும் நாள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |