இந்த தேதியில் பிறந்த குழந்தைகள் பெற்றோர்களுக்கு அதிர்ஷ்டத்தை தேடி கொடுப்பார்களாம்

By Sakthi Raj May 20, 2026 11:31 AM GMT
Report

 ஜோதிடத்தில் எண் கணிதத்தின்படி ஒருவர் பிறந்த தேதியின் அடிப்படையில் அவர்களுடைய வாழ்க்கை மற்றும் ஆளுமை திறனை தெரிந்து கொள்ள முடியும். அப்படியாக, குறிப்பிட்ட சில எண்ணில் பிறந்தவர்கள் பெற்றோர்களுக்கு மிகப்பெரிய அளவில் நல்ல பெயரையும் அதிர்ஷ்டத்தையும் தேடி கொடுப்பார்களாம்.

குறிப்பாக அவர்கள் 40 வயதை எட்டிய பிறகு அவர்களுக்கு எதிர்பாராத செல்வமும் அதிகாரமும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் எந்த தேதியில் பிறந்தவர்கள் என்று பார்க்கலாம். எண் கணிதத்தின் படி எந்த மாதத்திலும் 1, 11, 28 ஆகிய தேதியில் பிறந்தவர்கள் சூரிய பகவானின் ஆதிகத்தை பெற்றவர்களாக இருக்கிறார்கள்.

இந்த தேதியில் பிறந்த குழந்தைகள் பெற்றோர்களுக்கு அதிர்ஷ்டத்தை தேடி கொடுப்பார்களாம் | Kids Born This Date Bring Parents A Good Name

அதே போல் 5,4 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் புதனின் ஆதிக்கத்தை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதேபோல் 9, 18 ,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் குரு பகவானின் ஆதிக்கத்தை பெற்றவர்களாக இருக்கிறார்கள்.

27 நட்சத்திரத்திற்கு உரிய அதிர்ஷ்ட நிறம் மற்றும் மலர் என்ன தெரியுமா ?

27 நட்சத்திரத்திற்கு உரிய அதிர்ஷ்ட நிறம் மற்றும் மலர் என்ன தெரியுமா ?

அதனால் இந்த தேதியில் பிறந்த குழந்தைகள் எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும் எதையும் தீர ஆராய்ந்து யோசித்து முடிவு எடுக்கக் கூடிய தன்மையும் பெற்று இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் இவர்களுக்கு போட்டி என்று வந்துவிட்டால் அதில் கடுமையாக உழைத்து ஜெயிக்க கூடியவராக விளங்குகிறார்கள்.

இவர்கள் 20 வயது அடையும் பொழுதே இவர்கள் சொந்த காலில் நிற்க வேண்டும் என்ற ஆசை உருவாகிறது. அது மட்டுமில்லாமல் இவர்கள் 25 முதல் 30 வயதிற்குள் அவர்களுடைய தொழிலில் நல்ல நிலையை அடைந்து நிலைத்தன்மையை பெற்று விடுகிறார்கள். பிறகு 45 வயது அடையும் பொழுது அந்த நபர்கள் வாழ்க்கையில் எல்லா விசயங்களையும் பெற்று குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கிறார்களாம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US