யாருக்கு எப்பொழுது ராஜயோகம் தேடி வரும் ? என்ன பரிகாரம் செய்யவேண்டும்
ஜோதிடத்தில் ஒவ்வொருவருடைய கிரக அமைப்புகளை பொறுத்து அவர்களுக்கு ராஜயோகம் தேடி வருகிறது. அப்படியாக, ஒருவருடைய ஜாதகத்தில் பண வரவை குறிக்கக்கூடிய இடமாக இரண்டு 5,8 மற்றும் 11 ஆகிய இடங்கள் இருக்கிறது.
இந்த இடத்தை வைத்து தான் ஒருவருக்கு பொருளாதார நிலை எப்படி இருக்கும் என்று தீர்மானிக்கப்படுகிறது. மேலும், 4, 7, 10 கேந்திர ஸ்தானங்கள் ஒருவரது வாழ்வாதாரம் வாகனம் சொத்துக்கள் ஆகியவற்றை குறிக்கக்கூடிய இடமாக இருக்கிறது.
மேலும் நான்காம் பாவம் வலுவாக இருந்தால் அவர்களுக்கு நிறைய சொத்துக்கள் சேர்க்கை உண்டாகும். ஆனால், அதன் தாக்கம் ஐந்தாம் பாவத்தை பாதிக்க வாய்ப்பு உள்ளது, மேலும், ஒருவருக்கு எட்டாம் இடம் அதிர்ஷ்டத்தையும் பினாமி சொத்துக்களையும் குறிக்க கூடியதாக உள்ளது,
11ஆம் இடம் லாப ஸ்தானம் எந்த கிரகம் இருந்தாலும் இது நல்ல பலன்களை கொடுக்கும், குறிப்பாக ரியல் எஸ்டேட் மற்றும் முதலீடுகளில் இவை சிறந்தவையாக உள்ளது, மேலும், ஒருவருக்கு பொருளாதாரத்தில் தடை ஏற்பட அவர்கள் மிகவும் கஷ்டத்திற்கு ஆளாவார்கள்,
அவர்கள் உத்திரட்டாதி முதல் ரோகினி நட்சத்திரம் வரை உள்ள நாட்களில் வேப்பெண்ணை, விளக்கெண்ணெய் இலுப்பெண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் நெய் கொண்டு தீபம் ஏற்றும்பொழுது நமக்கு தோஷத்தை நீக்குகிறது,
மேலும், ஆடி மாதத்தில் அல்லது விசேஷ நாட்களில் கன்னிப் பெண்களுக்கு பாத பூஜை செய்கின்ற பொழுது சுக்கிர பகவானுடைய அருள் நமக்கு கிடைக்கும்.அதோடு ஒருவருக்கு ராஜயோகம் கிடைப்பதற்கு என்னென்ன விஷயங்கள் பின்பற்ற வேண்டும் என்று இந்த காணொளியில் பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |