வக்ரதோஷம் போக்கும் (வரலாற்றுக்கு முந்திய) வக்ரகாளியம்மன் கோயில்

By பிரபா எஸ். ராஜேஷ் Dec 21, 2024 11:28 AM GMT
Report

தொண்டை மண்டலத்தின் 30 ஆவது திருத்தலமான வக்ரகாளியம்மன் கோவில் விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனத்தில் இருந்து மயிலம் செல்லும் வழியில் ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

பாண்டிச்சேரியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் திருவக்ர என்ற ஊரில் வராக நதி அல்லது சங்கராபரணி நதிக்கரையில் இக்கோவில் அமைந்துள்ளது.

இக்கோயிலை வலப்பக்கமாக ஐந்து முறையும் இடப்பக்கமாக ஐந்து முறையும் (வக்கிரமாக) சுற்றி வர வேண்டும்.

வக்ரதோஷம் போக்கும் (வரலாற்றுக்கு முந்திய) வக்ரகாளியம்மன் கோயில் | Sri Vakra Kali Amman Temple

தெய்வங்களின் வரலாறு

தமிழகத்தின் சமய வரலாற்றை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று, இயற்கை வழிபாடும் முன்னோர் வழிபாடும் இருந்த சங்ககாலம். 

இரண்டு, சமண பௌத்தர்கள் துறவிகள் (தெய்வங்கள்) வழிபாடு (காப்பிய காலம்) மூன்று, சைவம்/வைணவ தெய்வ வழிபாடு. (பக்தி இலக்கிய காலம்) இம் மூன்று காலகட்ட வரலாற்றையும் ஒரு சேர வக்ரகாளியம்மன் கோயிலில் காணலாம்.

இயற்கை வழிபாடான ஒளி வழிபாட்டின் தொடர்ச்சியாக இங்கு ஜோதி தரிசனம் நடைபெறுகின்றது.  

திருவல்லா மகாவிஷ்ணு சுதர்சன மூர்த்தி திருக்கோவில்

திருவல்லா மகாவிஷ்ணு சுதர்சன மூர்த்தி திருக்கோவில்

ஜோதி தரிசனம்

வக்ரகாளியம்மன் கோயிலில் அமாவாசை பௌர்ணமி நாட்களில் ஒளிவழிபாடு உண்டு. பௌர்ணமி அன்று இரவு 12 மணிக்கு அமாவாசை அன்று பகல் 12 மணிக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.

கோவில் கோபுரத்தில் ஜோதி ஏற்றப்படும். ஜோதி தரிசனம் காண அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் கூடுவார்கள். ஆடி மாத பௌர்ணமி அன்று கோபுரத்தில் மகா தீபம் ஏற்றப்படும். 

பிடாரியம்மனும் வக்ரகாளியும்

தமிழ் மொழி என்ற அடையாளம் தோன்றுவதற்கு முன்னர் நாகர் என்ற அடையாளத்தோடு வாழ்ந்த மக்கள் பிடாரியைத் (பிடாரன்,பிடாரி) தம் தாயாகக் கருதி வழிபட்டனர். பிடாரி தீயவர்களின் பிள்ளை தின்னி. ஊருக்கு வெளியே மயானத்தில் குடி கொண்டிருப்பாள்.

ஊருக்கு ஒரு பிடாரியும் ஏரிக்கு ஒரு ஐயனாரும் காவலுக்கு இருந்தனர். வக்ரகாளி அம்மன் என்பது பிடாரியம்மனின் புதுப் பெயர். வக்ரகாளியம்மன் கதையிலும் பிள்ளையைக் கொன்று பிரேதமாகத் தன் காதில் குண்டலமாக தொங்கவிட்ட நிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது. 

வக்ரதோஷம் போக்கும் (வரலாற்றுக்கு முந்திய) வக்ரகாளியம்மன் கோயில் | Sri Vakra Kali Amman Temple

சந்திர தரிசனம்

காப்பிய காலத்தில் தமிழ்த்தில் சமண பௌத்த சமயங்கள் பரவின. அப்போது இங்கு சமண ஆதி தேவர், ரிஷப தேவர் போன்ற தீர்த்தங்கரர்களும் போதிசத்துவ முனிவர்களும் தாரா தேவி, சிந்தா தேவி, மணிமேகலா தெய்வம் போன்ற பௌத்தர்களும் வழிபடப்பட்டனர். பௌத்தர்கள் சந்திர தரிசனத்துக்கு முக்கியத்துவம் அளித்தனர். பௌத்தம் பரவியுள்ள ஜப்பான் நாட்டில் moon viewing என்ற பெயரை அவரவர் இருப்பிடத்தில் இருந்தே சந்திர தரிசனம் செய்கின்றனர். 

பௌர்ணமி பூஜை

சந்திர தரிசனத்தில் பௌர்ணமி பூஜை மிகவும் முக்கியமானது. அன்றிரவில் கிரி வலம் வருவதை பௌத்தர்கள் ஊக்குவித்தனர். இதை ஜப்பானில் பௌத்தர்கள் kai hog yo என்று குறிப்பர். பௌத்தர்கள் இக்கோவிலை சுவைகரித்துக் கொண்ட போது இங்குப் புதிதாக பிரம்ம தீர்த்தம் உருவானது. போதிசத்துவர், தாரா போன்றவர்களுக்கும் கோவில்கள் கட்டப்பட்டன. ஒளி வழிபாடு சந்திர சூரிய வழிபாடு என்று பெயர் மாற்றம் பெற்றது. 

சகல நன்மைகள் அருளும் பச்சைமலை பாலமுருகன்

சகல நன்மைகள் அருளும் பச்சைமலை பாலமுருகன்

 பௌத்தர்கள் பௌர்ணமி வழிபாட்டை தங்கள் மடாலயங்கள் இருந்த இடத்தில் சிறப்பாக நடத்தி வந்தனர். பௌர்ணமி இரவில் மக்கள் நிலவின் ஒளியில் மூழ்கி இருப்பது ஆரோக்கியமான ஆரோக்கியமானது என்பதை நடைமுறைக்குக் கொண்டு வந்தனர்.

சைவ வைணவக் கோயில்கள்

மூன்றாவது கட்டமாக பக்தி இலக்கிய காலத்திலும் அதற்குப் பிறகும் இத் திருத்தலத்தில் சிவன், விஷ்ணு கோயில்கள் உருவாகின. சிவபெருமானுக்கு மூன்று முகமும் சந்திரமவுலீஸ்வரர் என்ற பெயரும் தோன்றியது.

அடுத்ததாக விஜயநகரப் பேரரசின் மன்னர்கள் அவர்களின் பிரதிநிதியான நாயக்க மன்னர்களும் வைணவர்களாக இருந்த காரணத்தினால் சிவன் கோவில்களில் ஆட்சியாளர்கள் பெருமாள் சன்னதியையும் ஏற்படுத்தினர். இங்கு வரதராஜ பெருமாள் சன்னதியும் இடம்பெற்றது.   

வக்ரதோஷம் போக்கும் (வரலாற்றுக்கு முந்திய) வக்ரகாளியம்மன் கோயில் | Sri Vakra Kali Amman Temple

நான்கு வழிபாடு சிறக்கும் கோயில்

வக்ரகாளியம்மன் கோயில் மனித குல வரலாற்றின் வரலாற்றுக்கு ஏற்ப மிக நீண்ட வரலாற்றையும் பாரம்பரியத்தையும் கொண்ட மிகப் பழைய கோவிலாகும். ஒளி வழிபாடு பிடாரியம்மன் வழிபாடு சிவன் வழிபாடு விஷ்ணு வழிபாடு என்று நான்கு வகையிலும் சிறப்புப் பெற்ற கோவிலாக இக்கோவில் விளங்குகின்றது.

இங்கு கல் மரங்கள் கிடைத்திருப்பதும் இக்கோயிலின் தொன்மையை பறை சாற்றுகிறது. மரங்கள் கல்லாக மாறுவதற்கு பல கோடி ஆண்டுகள் ஆகும். 

வக்ரகாளி

நோய் தீர்க்கும் காவல் தெய்வம் சமயபுரம் மாரியம்மன்

நோய் தீர்க்கும் காவல் தெய்வம் சமயபுரம் மாரியம்மன்

காளி என்றாலே கொடூரத் தோற்றம் கொண்டவள். அதுவும் வகரகாளி என்றால் மிக மிக கொடூரத் தோற்றம் கொண்டவள். வக்ரகாளியின் தலையில் ஜ்வாலா மகுடம் எனப்படும் தீப்பொறி பறக்கும் மகுடம் உண்டு. கழுத்தில் மண்டையோடுகளால் ஆன மாலை அணிந்து இருப்பாள்.

வலது காது துளையில் வழியாக ஒரு குழந்தையின் பிரேதம் தொங்கும். எட்டு கைகளை உடையவள். இவளது கைகளில் பாசம், சக்கரம், வாள், கபாலம், காட்டாரி போன்ற ஆயுதங்களை ஏந்தி இருப்பாள். தலைமுண்டங்களின் மாலையையே முப்பரி நூல் போல் அணிந்திருப்பாள்.

பத்ரகாளி சந்நிதிக்கு எதிரே மயான பூமி உள்ளது. அம்மனே ஆதி காலத்தில் மயான பூமியின் தெய்வமாக பிடாரியம்மனாக வணங்கப்பட்டு வந்தாள். பிடாரியம்மன் தவறு செய்பவர்களின் குழந்தைகளைப் பறித்துத் தின்பாள். மயானத்தில் திருவாள்.

குழந்தைகளின் பிரேதங்கள் காதுகளில் குண்டலங்களாக அணிவாள். வக்ரகாளியின் காதில் பிரேத குண்டலம் தொங்குவதைப் பார்க்கலாம். அம்மனுக்கு முக்கிய திருநாட்களில் சந்தனம், தயிர், இளநீர், தேன், பால் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்படும். 

வக்ரதோஷம் போக்கும் (வரலாற்றுக்கு முந்திய) வக்ரகாளியம்மன் கோயில் | Sri Vakra Kali Amman Temple

சிவனும் பெருமாளும்

வக்ரகாளியம்மன் கோயிலில் சிவன் சந்நிதியும் பெருமாள் கோவிலும் உண்டு. இங்கே உள்ள சிவபெருமானின் பெயர் சந்திரசேகரன் அல்லது சந்திர மௌலீஸ்வரர். அம்பாளின் பெயர் வடிவாம்பிகை அல்லது அமிர்தேஸ்வரி. வக்ரகாளியம்மன் கோயிலில் வக்ர லிங்கம், சந்திர மௌலீச்வரர் மற்றும் சகஸ்ர லிங்கம் என்று மூன்று லிங்கங்கள் உண்டு

சந்திரகாந்த வக்ரலிங்கம்

வக்ரகாளிக்கு எதிரே இருக்கும் ஆத்மலிங்கம், வக்ரலிங்கம் என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த லிங்கம் சந்திரகாந்தக்கல்லால் செய்யப்பட்டது என்பதனால் வெயில் காலத்தில் இக்கருவறையும் இப்பகுதியும் குளிர்ச்சியாக இருக்கும். மழைக்காலத்தில் சிவலிங்கத்தின் மீது நீர் துளித்து இருப்பதைக் காணலாம். 

சஹஸ்ர லிங்கம்

பௌத்தர்கள் இந்திரனை லிங்க வடிவில் வணங்கினர் என்பதைக் 'கந்துடைப் பொதியில்' என்று சிலப்பதகாரம் அவனது கோயிலை வருணிப்பதில் இருந்து அறியலாம். கந்து என்றால் லிங்க உரு. அவன் தேவலோகத்தில் உள்ள அப்சரஸ்களுக்கு (மங்கையருக்கு) இந்திரிய தானம் செயதவன்என்பதால் கந்து வடிவில் பல குழிகள் அமைக்கப்பட்டன.

குழிகளுக்கு அருகில் இருந்த மேடுகளை பின்னர் கண்கள் என்று வருணித்துச் சொல்லி வேறொரு கதையும் உருவானது. பௌத்தம் அழிந்ததும் ஆயிரம் கண் உடைய கந்து அல்லது லிங்க் உருக்கள் (கண்ணாயிரம்) சஹஸ்ர (ஆயிரம்) லிங்கங்களாக மாற்றம் பெற்றன.  

சந்திரசேகரர்

வக்ரகாளி அம்மன் கோயிலில் உள்ள முக்கிய கருவறையில் உள்ள சிவலிங்கம் மூன்று முகங்களை உடையது. கிழக்கே தற்புருடம், தெற்கே அகோரம், வடக்கே வாமதேவம் என்பது மூன்று முகங்களுக்குரிய பெயராகும். மேற்கில் இருக்க வேண்டிய சத்தோயோஜாதம் என்ற முகம் காணப்படவில்லை. 

பிரம்மனுக்கு தனி சந்நிதி உள்ள திருப்பட்டூர் கோயில்

பிரம்மனுக்கு தனி சந்நிதி உள்ள திருப்பட்டூர் கோயில்

கதை 1

வரதராஜப் பெருமாள் கதை

அனைத்து சிவன் கோவில்களுக்கும் தல புராணக் கதைகள் இருப்பது போல இந்தக் கோவிலுக்கும் ஒரு கதை உண்டு. குண்டலினி சித்தரின் பேரன் வக்ராசுரன் என்பவன் தேவர்களுக்கு மிகுந்த தொல்லை கொடுத்து வந்தான்.

தேவர்கள் திருமாலை சேவித்து வக்ராசுரனின் தொல்லைகளிலிருந்து தம்மை விடுவிக்கும்படி வேண்டினர். திருமால் தன் சக்ராயுதத்தை ஏவி வக்ராசுரனைக் கொன்றார். இதனால் இங்கு எழுந்தருளியிருக்கும் வரதராஜ பெருமாள் பிரயோகச் சக்கரத்துடன் காட்சி தருகின்றார்.

கதை 2

வக்ரகாளியம்மன் கதை

வக்ராசரனுக்கு துன்முகி என்று ஒரு தங்கை இருந்தாள். அவளும் துர்க்குணங்கள் படைத்தவள். நல்லவர்களுக்குக் கெடுதல் பல செய்து வந்தாள். அவளை அழித்தால் மட்டுமே நல்லவர்கள் வாழ முடியும் என்ற நிலை ஏற்பட்டபோது பார்வதி தேவி அவளை அழிக்கக் கிளம்பினாள்.

அப்போது துன்முகி கர்ப்பவதியாக இருந்த காரணத்தினால் கர்ப்பவதியை கொல்லக்கூடாது என்ற தர்மத்தின் படி அவள் வயிற்றைக் கிழித்து வயிற்றினில் இருந்த குழந்தையை வெளியே எடுத்து விட்டு அவளைக் கொன்றாள். இதனால் இங்கே எழுந்தருளியிருக்கும் வக்கிரகாளியின் காதில் சிசு பிரேத குண்டலமாகத் தொங்குவதை பார்க்கலாம்  .

வக்ரதோஷம் போக்கும் (வரலாற்றுக்கு முந்திய) வக்ரகாளியம்மன் கோயில் | Sri Vakra Kali Amman Temple

தீர்த்தங்கள்

ஒளிவழிபாட்டு சிறப்புடைய இத்தலத்தில் உள்ள தீர்த்தங்கள் சந்திர தீர்த்தம், சூரிய தீர்த்தம் என்று அழைக்கப்படுகின்றன. பௌத்த சமயம் வந்த பின்பு இங்கு ஒரு பிரம்ம தீர்த்தமும் தோன்றியது.

வக்ர சனி

வக்ரகாளியம்மன் கோயிலில்

அருணகிரியார் பாடிய முருகனுக்கு தனி சந்நிதி உண்டு. சனிபகவான் வக்கிர நிலையில் (பின்னோக்கி) பயணிக்க தயாராக இருக்கும் வடிவில் சந்நிதி கொண்டுள்ளார். அவர் தனது வாகனமான காகத்தை இடது பக்கமாக திருப்பி நிறுத்தி இருக்கின்றார்.

மற்ற கோவில்களில் காகம் வலது பக்கமாக நோக்கி நிற்கும். வலது பக்கமாக காகம் இருந்தால் அவர் நேரே பயணிக்கின்றார் என்று பொருள்.காகம் இடது பக்கமாகத் திரும்பி நின்றால் அவர் வந்த வழியே திரும்பிச் செல்கின்றார் அதாவது பின்னோக்கி வக்கிரமாகச் செல்கின்றார் என்று பொருள். இங்கு சனி வக்ரசனியாக இருக்கின்றார்.

வக்ர தோஷ நிவர்த்தி ஸ்தலம்

ஒருவர் ஜாதகத்தில் கிரகங்கள் வக்கிரமாக இருந்தால் வக்ரகாளி அம்மன் கோயிலுக்கு வந்து சிவபெருமானையும் பெருமாளையும் ஒரு சேர வணங்கிச் செல்லலாம். வக்ர தோஷம் விலகும். சனி வக்கிரமாக இருந்தால் இங்கே உள்ள சனிபகவானுக்கு சனிக்கிழமை அன்று வந்து சிறப்பு பூசைகள் செய்யலாம். சனி தோஷம் விலகும்  

நீலமணி நாகராஜன் வணங்கிய திருநாகேஸ்வரம்

நீலமணி நாகராஜன் வணங்கிய திருநாகேஸ்வரம்

தாலி பாக்கியம் பெற

ஒளி தெய்வமாக தீபத்தின் அருள்ஜோதியாக லட்சுமிகரமான அம்மன் ஒருவர் தீபலட்சுமி அம்மன் என்ற பெயரில் இக்கோவிலில் தனி சந்நிதி கொண்டுள்ளார். இவர் பழைய பௌத்த தாராவாக இருக்கக் கூடும்.

திருமணத் தடை, திருமண தோஷம், மாங்கல்ய தோஷம் இருப்பவர்களும் தீபலட்சுமி அம்மன் கோவிலுக்கு வந்து மஞ்சள் கயிறு கட்டி எலுமிச்சை விளக்கேற்றி மனம் உருகி நின்று வேண்டிக் கொண்டால் தடைகள் விலகி திருமணம் விரைவில் நடைபெறும். மாங்கல்யம் உறுதி பெறும்.   

குறை தீர்க்கும் கோயில்

வக்ரகாளியம்மன் கோயிலில் தங்கள் குறைகளைத் துண்டுச் சீட்டில் எழுதி போடும் முறையும் உள்ளது. இதனாலும் மக்கள் குறைகள் நீங்குகிறது.

ஜீவன்முக்தி ஸ்தலம்

குண்டலினி முனிவர் இங்கே தவமிருந்து ஜீவன் முக்தி அடைந்ததால் தெற்கு பிரகாரத்தில் அவருக்கு ஒரு சிலை உண்டு. அவருடைய பேரன் வக்ராசுரனுக்கும் ஒரு சிலை உள்ளது.  

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.          

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US