பிள்ளைப் பேறு வழங்கும் திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவில்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சௌமிய நாராயண பெருமாள் கோவில் விளக்கு நேர்த்திக் கடனுக்கு புகழ்பெற்ற கோவில் ஆகும்.
இங்கு மூலவர் சௌமிய நாராயண பெருமாள் ஆவார். இத்தலம் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாகும்.
இக்கோவில் பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம்.
தாயார் மகாலட்சுமி தனிச் சன்னதி கொண்டுள்ளார். இவரை நிலமா மகள், குலமா மகள், திருமா மகள் என்றும் அழைப்பர்.
பெருமாள் அருளும் பிள்ளை வரம்
திருக்கோஷ்டியூருக்கு இரண்டு வித சிறப்புகள் உண்டு. ஒன்று இங்கு பிள்ளை வேண்டுவோர் விளக்கு பிரார்த்தனை செய்வர். இரண்டு, பிள்ளை இருந்தும் புத்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்போர் தங்கள் பிள்ளையைப் பெருமாளுக்கு தத்தாகக் கொடுத்து திரும்பப் பெற்றுச் செல்வர்.
தங்கள் பிள்ளையைத் தத்துக் கொடுக்கக் கருவறை முன்பு நிறுத்தும்போது கோவில் பட்டர் குழந்தைக்கு பெருமாளின் ஒரு பெயரைச் சூட்டி அவர்களிடம் பிள்ளையைத் திரும்ப கொடுப்பார். அன்று முதல் அக்குழந்தை பட்டர் சூட்டிய பெயரால் அழைக்கப்படும்.
10, 15 வயது சிறுவர் சிறுமிகளையும் இவ்வாறு தத்து கொடுக்கும் வழக்கம் உண்டு. பெருமாளுக்கே பிள்ளையைத் தத்து கொடுத்து திரும்பப் பெறுகின்ற இந்நடைமுறைவேறு எந்தக் கோவிலிலும் கிடையாது.
கருவறைக் கடவுளர்
திருக்கோஷ்டியூர் கருவறையில் சௌமிய நாராயணப் பெருமாளைத் தவிர மது கைடபர், இந்திரன், புத பகவானின் மகன் புரூரவச் சக்கரவர்த்தி, கதம்ப மகரிஷி, பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி ஆகியோர் உள்ளனர்.
பெருமாளை வணங்கி அருள் பெற்ற அனைவரும் கருவறைக்குள் காணப்படும் கோவில் இதுவாகும்.
பிள்ளைவரம் தரும் பிரார்த்தனை கண்ணன்
கருவறையில் மூலவருக்கு அருகில் சந்தானகிருஷ்ணன் தொட்டிலில் ஆடிக் கொண்டிருப்பார். பிள்ளை வரம் அருளும் இவரைப் இவரை பிரார்த்தனை கண்ணன் என்பர்.
அஷ்டாங்க விமானம்
திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் அஷ்டாங்க விமானத்தை கொண்டது ஒரு விமானத்தில் பொதுவாக ஆறு அங்கங்கள் (ஸடாங்கம்) உண்டு.
அவை அடித்தளம், சுவர், கூரை, கழுத்து, சிகரம் மற்றும் ஸ்தூபி ஆகியவை. இந்த ஆறு அங்கங்களுடன் பெருமாள் தாயார் கருவறைகளையும் சேர்த்து அஷ்டாங்க விமானம் என்பர். அதாவது பிரஸ்தரம் எனப்படும் கூரைக்கும் கிரீவம் எனப்படும் கழுத்துக்கும் இடையில் ஒன்றின் மேல் ஒன்றாக இரண்டு சன்னதிகள் அமைக்கப்படும்.
இந்த அமைப்பை அஷ்டாங்க விமானம் என்பர். அஷ்டாங்க விமானம் இருக்கும் கோவில்களில் பெருமாள் நின்ற கோலம், அமர்ந்த கோலம், கிடந்த கோலம் என்று பல கோலங்களில் காட்சியளிப்பார்.
சேரன்மாதேவியில் உள்ள இராம சுவாமி கோவில், மதுரை கூடல்ழகப் பெருமாள் கோவில், திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோவில், உத்திரமேரூர் சுந்தர வரதராஜர் கோவில் ஆகியவை அஷ்டாங்க விமானங்களைக் கொண்டவை.
பல கோலங்களில் பெருமாள் திருக்கோஷ்டியூரில் பல கோலங்களில் பெருமாளைத் தரிசிக்கலாம். கீழ்த்தளத்தில் பெருமாள் நர்த்தன கிருஷ்ணராக காட்சி தருவார். முதல் தளத்தில் பாற்கடலில் சயனிக்கும் தேவலோகப் பெருமாள் ஆகக் காட்சியளிப்பார். இரண்டாம் தளத்தில் இந்திரனின் தம்பி உபேந்திரன் பெயரில் உபேந்திரநாராயணனாக நின்ற கோலத்தில் தோன்றுவார். மூன்றாம் தலத்தில் வைகுண்ட லோகத்தில் இருக்கும் வைகுண்ட நாதர் ஆக பரமபதக் காட்சி அளிப்பார்.
'நான் செத்து வா'
நாராயண பக்தர்களுக்கு வைகுந்தம் செல்லும் வழியைக் காட்ட விடும் என்று விரும்பிய இராமானுஜர் அவர்கள் இவ்வூரில் உள்ள சிறந்த விஷ்ணு பக்தரான திருக்கோஷ்டியூர் நம்பி அவர்களின் வீட்டிற்கு வந்தார். திருக்கோஷ்டியூர் நம்பி வீட்டுக் கதவை இராமானுஜர் தட்டவும் 'யார் அங்கே' என்று உள்ளே இருந்த படி நம்பி கேட்டார். இராமானுஜர் 'நான் ராமானுஜன் வந்திருக்கிறேன்' என்ரு பதில் கூறினார். நம்பி உள்ளே இருந்தபடி 'நான் செத்து வா' என்று சொல்லிவிட்டார்.
இராமானுஜரும் திரும்பிப் போய்விட்டார் மீண்டும் வந்தார். மீண்டும் வந்தார். மீண்டும் வந்தார். இவ்வாறு 17 முறை வந்தவர் 18-வது முறை யார் அங்கே என்று கேட்டதும் 'அடியேன் வந்திருக்கிறேன்' என்றார். சரி உள்ளே வா என்று சொல்லிய திருக்கோஷ்டியூர் நம்பி வைகுந்தம் செல்லும் வழி அஷ்ட எழுத்து மந்திரத்தை ஜெபிப்பதாகும் என்று இ ராமானுஜரிடம் சொன்னார்.
இராமானுஜர் அகமகிழ்ந்து திருக்கோஷ்டியூர் நம்பியைப் பார்த்து 'இதை நான் எல்லோருக்கும் சொல்லப் போகிறேன்' என்றார். நீ வேத ரகசியத்தை பிராமணர் அல்லாத மற்றவர்களுக்குச் சொன்னால் அவர்கள் வைகுந்தம் சேர்வர். அவர்களுக்குச் சொன்ன பாவத்துக்காக நீ நரகம் புகுவாய் என்றார்.
தெய்வ ரகசியத்தை மற்ற சாதியினருக்கு சொல்லக்கூடாது என்பது ஐதீகம். இராமானுஜர் சிறந்த மனித நேயராக இருந்த காரணத்தினால் 'நான் நரகத்துக்கு போனாலும் பரவாயில்லை மற்றவர்கள் வைகுந்தம் அடைய வேண்டும்' என்ற நல்லெண்ணத்துடன் சரி என்று தலையாட்டி விட்டு தன் சீடர்களுடன் வந்தார்.
திருக்கோஷ்டியூர் நம்பி அவர்களின் வீட்டில் இருந்து கோவிலை நோக்கி இராமனுஜர் தன் சீடர்களுடன் வரும்போது அங்கிருந்த ஒரு கிணற்றை (சிம்மக் கிணற்றை) எட்டிப் பார்த்தார். கிணற்று நீரில் பகவான் தெரிந்தார். பெருமாளை பார்த்ததே பெரும் புண்ணியம் என்று கருதிய ராமானுஜர் தன்னுடைய கருத்து சரி தான் நினைத்ததைச் செய்ய பெருமாள் அனுமதி அளித்து விட்டார் என்ற எண்ணத்துடன் கோபுரத்தின் மேல் ஏறினார். சீடர்கள் இவர் கோபுரத்திலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொள்ளப் போகிறாரோ என்று அஞ்சினர்.
ஏனென்றால் அந்த காலத்தில் ராஜராஜ சோழன் கட்டிய பிரகதீஸ்வரர் கோவிலில் இருந்தும் கோபுரத்தில் இருந்தும் மதுரையில் சுந்தரபாண்டியன் கட்டிய மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுரத்திலிருந்தும் ஆட்கள் கீழே விழுந்து உயிர் துறந்த நிகழ்வுகள் நடந்ததுண்டு. எனவே சீடர்கள் அஞ்சினர். ஏன் எதற்கு என்று கேட்கவும் அஞ்சினர். இருந்தாலும் அவரை பின்தொடர்ந்து சென்றார்கள்.
இராமானுஜர் கோவில் கோபுரத்தின் உச்சிக்குப் போய் எல்லோரையும் இங்கு வாருங்கள் என்று ஊர் மக்களை அழைத்தார். ஊர் மக்கள் வந்து கீழே கூடியதும் 'ஓம் நமோ நாராயணாய' என்ற எட்டெழுத்து மந்திரத்தை நீங்கள் தினந்தோறும் ஜெபித்து வந்தால் உங்களுடைய பாவங்கள் தொலைந்து நீங்கள் சொர்க்கத்துக்கு போவீர்கள்' என்று சொன்னார். இவ்வாறு ஊர் மக்களுக்கு நல்வழி காட்டிய ஸ்ரீ ராமானுஜருக்கு இடமளித்த கோவில் திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோவில் ஆகும்.
கதை ஒன்று
புரூரவன் கங்கை கொணர்ந்த கதை
திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோவில் கோவிலில் புதன் பகவானின் மகனான புருரவச் சக்கரவர்த்தி பற்றிய கதை ஒன்று உண்டு புருறவன் புதன் மற்றும் இலா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவன் இவன் கே சி என்ற அசுரனிடம் சிக்கி இருந்த ஊர்வசியை மீட்டான் ஊர்வசியுடன் இல்லறம் நடத்தி ஆய்வு என்ற மகனை பெற்றெடுத்தான் அதன் பின்பு ஊர்வசி இவனை பிரிந்து இந்திரலோகம் சென்றதால் இவன் மனம் வெறுத்து துறவியாக வாழ்ந்தான் ஊர்வசி புருஉறவு சக்கரவர்த்தி பற்றி நாட்டுப்புறக் கதைகள் வில்லுப்பாட்டு போன்றவை தமிழ்நாட்டில் நிறைய உண்டு .
அக்கறைகளில் ஊர்வசிக்கும் பரூர் அவளுக்கும் ஒன்பது குழந்தைகள் பிறக்கின்றன அவற்றில் எட்டு குழந்தைகளை விலங்குகள் தின்று விடுகின்றன மிஞ்சி இருக்கும் ஒரே குழந்தையின் வம்சத்தில் வந்தவர்கள் தான் பாண்டவர்களும் கௌரவர்களும் இவன் பிரிந்து சென்ற தன் மனைவியை மீண்டும் பிரிந்து சென்ற தன் மனைவியுடன் மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என்று தவமிருந்து நோன்பு நோற்றான் என்ற நிகழ்ச்சிகள் வில்லுப்பாட்டில் இடம் பெற்று இருக்கின்றன அவ்வாறு அவன் தவம் இருந்த இடங்களில் ஒன்று திருக்கோஷ்டியூர் ஆகும்.
புரூரவன் திருக்கோஷ்டியூரில் தங்கி இருந்து இக்கோவிலில் பல திருப்பணிகளைச் செய்தான். அவ்வாறு திருப்பணிகள் செய்து கொண்டிருக்கும் காலத்தில் மகா மகம் வந்தது. மகா மகத்தன்று கங்கையில் நீராடுவதே தனிச் சிறப்பு. ஆனால் அவன் இங்கிருந்து கங்கைக்குச் செல்ல இயலாததால் பெருமாளிடம் முறையிட்டான். அப்போது வடகிழக்கு மூலையான ஈசானியத்தில் திடீரென நீரூற்று பொங்கியது. அவ்வாறு பொங்கி வந்த கங்கையில் பெருமாள் காட்சியளித்தார்.
தான் நீராடுவதற்காக கங்கை இங்கு வந்துவிட்டால் என்று மகிழ்ந்து புரூரவச் சக்கரவர்த்தி அந் நன்னாளில் புனித நீரில் குளித்துப் பெருமாளை வழிபட்டான். அந்த ஊற்று கோயில் தீர்த்தமாக இன்றும் விளங்குகிறது.
தீர்த்தத்தைச் சுற்றிலும் உள்ள அழகான படித்துறையில் நேர்த்திக்கடன் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. பிள்ளை வரம் வேண்டுவோர் அல்லது திருமணம் நடக்க வேண்டும் என்ற நேர்ச்சை செய்பவர்கள் ஆறு விளக்குகளை கொண்டு வந்து பட்டரிடம் கொடுக்க வேண்டும். அவர் மூன்றை மட்டும் அவர்களிடம் திருப்பிக் கொடுப்பார். அந்த மூன்று விளக்கை பத்திரமாகக் கொண்டு வந்து தன் வீட்டில் வைத்து தினமும் ஏற்றி வர வேண்டும். தங்களுடைய நேர்ச்சை நிறைவேறியதும் அந்த மூன்று விளக்குகளை எடுத்துக் கொண்டு கோவிலுக்கு போய்க் கூடுதலாக மூன்று விளக்குகள் வாங்கி படிக்கட்டில் ஏற்றி வர வேண்டும்.
இவர்கள் ஏற்றிய ஆறு விளக்குகள் அணைந்ததும் அணைந்த பழைய விளக்குகளில் மூன்றை புதிதாக நேர்ச்சைக்கு வருபவர்கள் எடுத்துக் கொண்டு தன் வீட்டில் தினமும் ஏற்றி வைத்து இறைவனை வழிபடுவர். இவ்வாறு மகா மகத்தன்று இக்கோவில் தீர்த்தத்தின் படித்துறைகள் முழுக்க விளக்குகளாக இருப்பதைப் பார்க்கலாம்.
மகாமகத்தன்றுஅதிகாலை முதல் இரவு 10, 11 மணி வரை அன்றைக்குப் பக்தர்கள் படிக்கட்டில் விளக்குகளை ஏற்றி வைப்பதைக் காண முடியும்.
கதை இரண்டு
நரசிம்மரின் மந்திராலோசனை
இரண்யகசிபு ஹரி என்ற பெயரை உச்சரிக்கக் கூடாது என்று தன் நாட்டு மக்களுக்கு உத்தரவிட்டான். விஷ்ணு பக்தனான தன் மகன் பிரகலாதனுக்கு பல கொடுமைகளைச் செய்தான். இவ்ற்றைக் கண்டு பொறுக்காமல் அவனை வதம் செய்ய வேண்டும் என்ற முடிவுடன் நரசிம்மர் இத்தலத்திற்கு வந்து தேவர்களை அழைத்து அவர்களோடு ஆலோசித்தார். அதனால் அவரது சிற்பம் விமானத்தில் இடம் பெற்றுள்ளது.
கதை 3
இந்திரன் வணங்கிய மூர்த்தம்
இந்திரன் தான் தேவலோகத்தில் வைத்து பூஜித்த சௌமிய நாராயணத் திருமேனியை கதம்ப மகரிஷிக்கு கொடுத்து அவரை இத் திருத்தலத்தில் இருந்து இறைவனை நோக்கித் தவம் செய்யும்படி கூறினான்.
இந்திரனின் வழிகாட்டுதலின்படி இங்குத் தவம் செய்து கொண்டிருந்த கதம்பமுனிக்குத் திருமால் தனது. நின்ற கோலம், நடந்த கோலம், இருந்த கோலம், அமர்ந்த காலம் என்று நான்கு கோலத்தையும் காட்டினார். அவரது வேண்டுகோளுக்கு இணங்க அந்நான்கு கோலங்களில் இங்கே மற்ற பக்தர்களின் குறைதீர்க்க பெருமாள் எழுந்தருளியுள்ளார்.
விழாக்கள்
எல்லா வைணவக் கோவில்களில் நடப்பது போலவே இங்கும் வைகுண்ட ஏகாதசி மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும். நவராத்திரி ஒன்பது நாட்களும் தாயாருக்குரிய நாட்களாக சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். மாசி மகம் சௌமிய நாராயணருக்கு தனிச்சிறப்புடைய நாள் என்பதனால் மாசி மகத் திருவிழா பக்தர்களின் பேராதரவோடு கோலாகலமாக நடைபெறும்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் பக்தர்கள் பெருமளவில் இங்கு வந்து பெருமாளைச் சேவித்து திரும்புவர். அப்போது திருமஞ்சனம் நடைபெறும் சர்க்கரை பொங்கல் சிறப்பு தளிகையாக இறைவனுக்குப் படைக்கப்பட்டு பிரசாதமாகவும் பக்தர்களுக்கு கொடுக்கப்படும். புரட்டாசி சனிக்கிழமைகளில் இங்கு உலகக்ஷேமத்துக்காக சகஸ்ர நாம அர்ச்சனை நடைபெறும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |