ராசி பொருத்தம் (Rasi Porutham)
ஆணும் பெண்ணும் இருவரின் நீண்ட ஆயுளுக்கு உறுதியளிப்பது இதுவாகும். கணப்பொருத்தம் இல்லாத பட்சத்தில் இது தீர்வாகும்.
ஆணும் - பெண்ணும் ஒரே ராசியாயினும் அல்லது பெண் ராசிக்கு ஆண் ராசி 6ம் மேற்படினும் உத்தமம்.
7வது ராசியானால் சிறப்பு, 8வது ராசி ஆகாது. அதிலும் கும்பம் - சிம்மம், மகரம் - கடகம் போன்ற ராசிக்கு பொருந்தாது.
பெண் ராசியில் இருந்து எண்ணும் போது, ஆண் ராசியானது 1, 3, 5, 12 வது ராசிகள் வந்தால் மத்திமம் 7, 9, 10, 11 வது ராசிகள் வந்தால் உத்தமம். 2, 6, 8 வது ராசிகள் வந்தால் ஒத்துவராது.
பெண் ராசிக்கு, ஆண் ராசி 6, 8 எண்ணாகவோ அல்லது 8, 6 எண்ணாகவோ வந்தால் சஷ்டாஷ்டக தோஷம் எனப்படும்.
சஷ்டாஷ்டகம் உள்ள ஜாதகங்களை பொருத்துவது நல்லதல்ல.
ராசி பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யலாமா..?
ராசி பொருத்தம் என்பது திருமண பொருத்ததில் பார்க்கப்படும் ஒரு முக்கிய பொருத்தமாகும்.
ஒருவர் பிறந்த ஜாதகத்தில் சந்திர பகவான் நின்ற இடத்தை ராசி என்று குறிப்பிடுகிறோம். இதை சந்திர லக்கனம் என்றும் குறிப்பிடுவார்கள்.
திருமணத்திற்கு பிறகு மணமகள் மற்றும் மணமகன் ஆயுள், ஆரோக்கியம் ஆகியவற்றை உறுதி செய்வதற்கு இந்த பொருத்தம் பார்க்கப்படுகிறது.
ஆணின் ராசிக்கு பெண்ணின் ராசி அல்லது பெண்ணின் ராசிக்கு ஆணின் ராசி ஏழாவது ராசியாக அமைந்தால் சம சப்தம ராசி பொருத்தம் உண்டு என குறிப்பிடப்படுகிறது.
இதிலும் சில விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது சம சப்தம ராசிகளில் மகர ராசி, கடக ராசி, சிம்ம ராசி, கும்ப ராசி சம சத்தமாக வந்தால் ராசி பொருத்தம் இல்லை என குறிப்பிடப்படுகிறது.
திருமண பொருத்தத்தை ராசி பொருத்தம் மிகவும் அவசியம். பெண் ஜாதகத்திலும் ராசி பொருத்தம் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்வது சிறந்தது.