வர்ண பொருத்தம் (Varna Porutham)
வேலை அல்லது தொழிலில் ஒருவரின் நிலையை குறிப்பது வர்ண பொருத்தம் ஆகும்.
இல்லற வாழ்க்கையை தொழில் வாழ்க்கையுடன் இணைத்து சிறப்பாக அமைவதை இப்பொருத்தம் குறிக்கிறது. ஆணின் வர்ணம், பெண்ணின் வர்ணத்தை விட அதிகமாக அல்லது சமமாக இருக்க வேண்டும்.
வர்ணபொருத்தம் சரியாக இருந்தால் தம்பதிகள் இல்லறம் மற்றும் தொழிலில் சிறந்து விளங்குவார்கள், சரியாக இல்லாத பட்சத்தில் குடும்பத்தில் சச்சரவுகள் உண்டாகலாம்.
வர்ணம் |
ராசிகள் |
அடையாள உறுப்பு |
பிராமண வர்ணம் |
கடகம், விருச்சிகம், மீனம் |
தண்ணீர் |
க்ஷத்திரிய வர்ணம் |
மேஷம், சிம்மம், தனுசு |
நெருப்பு |
வைஷ்ய வர்ணம் |
ரிஷபம், கன்னி, மகரம் |
நெருப்பு |
சூத்ர வர்ணம் |
மிதுனம், துலாம், கும்பம் |
பூமி |
வர்ண பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யலாமா..?
வர்ண பொருத்தம் என்பது மணமகன் மற்றும் மணமகளின் வேலை அல்லது தொழில் போன்றவற்றை குறிப்பிடுகிறது.
திருமண பொருத்தத்தில் வர்ண பொருத்தம் பார்க்கும் பொழுது பெண்ணை விட ஆணின் சந்திர பார்வையானது அதிகமாக உள்ளதா என்பதை கணிக்க வேண்டும்.
வர்ண பொருத்தம் சிறப்பாக அமைந்தால் வீடு, தொழில் போன்றவற்றில் முன்னேற்றம் ஏற்படும்.
திருமண பொருத்தத்தில் இந்த பொருத்தம் இல்லை என்றாலும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை திருமணம் செய்துகொள்ளலாம்.