வேதைப்பொருத்தம் (Vedha Porutham)

'வேதை' என்ற சொல்லுக்கு பெண் மற்றும் ஆண் பிறந்த நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று ஒத்துப்போகவில்லை என்றால் வரும் துன்பம் என்று பொருள்.

27 நட்சத்திரங்களுக்கும் அதற்கான வேதை நட்சத்திரங்கள் உள்ளன, இதைப்பார்த்து பொருத்த வேண்டும். அதாவது எந்த நட்சத்திரத்துக்கு எந்த நட்சத்திரம் வேதை என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப திருமணம் செய்ய வேண்டும்.

ஆண்- பெண்ணின் இல்லற வாழ்க்கையில் வேதைப் பொருத்தம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

  • கார்த்திகை - விசாகம்
  • அஸ்வினி - கேட்டை
  • ரோகிணி - சுவாதி
  • பரணி - அனுஷம்
  • புனர்பூசம் - உத்திராடம்
  • திருவாதிரை - திருவோணம்
  • பூசம் - பூராடம்
  • ஆயில்யம் - மூலம்
  • மகம் - ரேவதி
  • பூரம் - உத்திரட்டாதி
  • உத்திரம் - பூரட்டாதி
  • அஸ்தம் - சதயம்

வேதை பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யலாமா..?

வேதைப் பொருத்தம் என்பது திருமண பொருத்தத்தில் பார்க்கப்படும் முக்கியமான பொருத்தமாக பார்க்கப்படுகிறது. மேலும் இரட்சிப் பொருத்தமானது மணமகன் மற்றும் மணமகளின் ஜாதகப்படி பொருந்தினால் மன வாழ்க்கையானது சிறப்பாக அமையும் ஆனால் அதனுடன் வேதைப் பொருத்தமும் சேர்ந்து அமைந்தால் மனவாழ்க்கையானது ஆனந்தமாக அமையும்.

பெண் நட்சத்திரத்திற்கும் ஆண் நட்சத்திரம் வேதை நட்சத்திரமாக அமைந்தால் இருவரும் எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒற்றுமையாக வாழ்க்கையை வாழ்வார்கள் என்று எடுத்துக்காட்டுகிறது. எனவே வேதை பொருத்தம் என்பது இருந்தால் இருவர் வாழ்க்கையும் ஆனந்தமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

வேதை பொருத்தம் இல்லாமல் ரஜ்ஜீ பொருத்தம் இருந்தால் கூட திருமணம் செய்து கொள்ளலாம்.

+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US