யோனி பொருத்தம் (Yoni Porutham)

திருமணத்திற்கு பின்னர் தம்பதிகளுக்கு இடையேயான இல்லற வாழ்க்கை பற்றி கணிப்பதே யோனிப்பொருத்தம் ஆகும்.

27 நட்சத்திரத்திற்கும் ஒரு விலங்கினம் குறிக்கப்படுகிறது, ஒன்றுக்கு ஒன்று பகை இல்லாத விலங்கினமாக இருந்தால் யோனிப் பொருத்தம் உத்தமம். இல்லாவிட்டால் யோனி பொருத்தம் கிடையாது.

உதாரணத்திற்கு ஆணின் நட்சத்திரம் பூனையாக இருந்து பெண்ணின் நட்சத்திரம் எலி எனில், இருவருக்கும் முட்டிக்கொள்ளும், யோனிப்பொருத்தம் கிடையாது.


27 நட்சத்திரங்களும் விலங்கினமும்:

  • அஸ்வினி - ஆண் குதிரை
  • பரணி - பெண் யானை
  • கார்த்திகை - பெண் ஆடு
  • ரோகிணி - ஆண் பாம்பு
  • மிருகசீரிஷம் - பாம்பு
  • திருவாதிரை - பெண் நாய்
  • புனர்பூசம் - ஆண் பூனை
  • பூசம் - ஆண் ஆடு
  • ஆயில்யம் - பெண் பூனை
  • மகம் - பெண் எலி
  • பூரம் - பெண் மாடு
  • உத்திரம் - பெண் எலி
  • அஸ்தம் - ஆண் எருமை
  • சித்திரை - பெண் புலி
  • சுவாதி - பெண் எருமை
  • விசாகம் - பெண் புலி
  • அனுஷம் - ஆண் மான்
  • கேட்டை - பெண் மான்
  • மூலம் - நாய்
  • பூராடம் - பெண் குரங்கு
  • உத்திராடம் - பெண் முங்கூஸ்
  • திருவோணம் - ஆண் குரங்கு
  • அவிட்டம் - சிங்கம்
  • சதயம் - குதிரை
  • பூரட்டாதி - ஆண் சிங்கம்
  • உத்திரட்டாதி - ஆண் மாடு
  • ரேவதி - பெண் யானை

யோனி பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யலாமா..?

திருமண பொருத்தங்களில் யோனி பொருத்தம் மிக முக்கியமான பொருத்தமாக பார்க்கப்படுகிறது.

திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினரை குண நலன்களை சார்ந்த விஷயங்களை கணிக்க பெரிதும் உதவியாக இருக்கிறது. ஜாதக ரீதியாக யோனி பொருத்தம் என்பது மிருகங்களை வைத்து குணங்களை குறிப்பிடப்படுகிறது.

யோனி பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யலாமா என்றால் செய்யக்கூடாது.

உங்கள் ஜாதக ரீதியாக சில பரிகாரங்கள் இருக்கும் அதை செய்துவிட்டு திருமணம் செய்து கொள்வது சிறந்தது.

+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US