கணப்பொருத்தம் (Gana Porutham)
ஆண் மற்றும் பெண் இருவரின் இயல்புகளை கணிப்பதே கணப்பொருத்தம் ஆகும். இருவரின் மனம் மற்றும் உடலின் இணக்கத்தன்மையை உறுதிப்படுத்தவும் பார்க்கப்படுகிறது.
இப்பொருத்தத்தை தேவ கணம், மனித கணம் மற்றும் ராக்ஷஸ கணம் என மூன்றாக பிரிக்கலாம். ஒவ்வொரு கணமும் 9 நட்சத்திரங்களை உள்ளடக்கியது.
தேவ கணத்தில் உள்ளவர்கள் மிக மென்மையாகவும், நேர்மையாகவும், மற்றவர்களுடன் அன்பாகவும் பழகக்கூடியவர்கள், நல்ல குணத்துடன் வாழ்விற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.
மனித கணத்தில் பிறந்தவர்கள் கலவையான பண்புகளை கொண்டவர்கள், நல்ல பண்புகள் இருந்தாலும் தீங்கான எண்ணங்களும் இருக்கும், நல்ல நடத்தை இருந்தாலும் சில நேரங்களில் பகையை வெளிக்காட்டக்கூடியவர்களாக இருப்பர்.
ராக்ஷஸ கணத்தில் பிறந்தவர்கள் மோசமான நடத்தை கொண்டவர்களாக இருப்பர், அவர்களது பேச்சு மற்றும் செயல்பாடுகள் சரியானதாக இருக்காது, மற்றவர்களுடன் இணக்கமாக செயல்பட மாட்டார்கள். மிக அரிதாகவே நல்ல பண்புகள் வெளிப்படும்.
ஆண் மற்றும் பெண் இருவரின் நட்சத்திரங்களும் தேவ கணத்தில் இருந்தால் கணப்பொருத்தம் கச்சிதம்.
இருவரின் நட்சத்திரங்கள் மனித கணத்தில் இருந்தாலும் கணப்பொருத்தம் உண்டு.
ஒருவரின் நட்சத்திரம் தேவ கணத்திலும், மற்றொருவரின் நட்சத்திரம் மனித கணத்தில் இருந்தாலும் கணப்பொருத்தம் உண்டு.
இருவரின் நட்சத்திரங்கள் ராக்ஷஸ கணத்தில் இருந்தால் கணப்பொருத்தம் கிடையாது.
ஆண் ராக்ஷஸ கணத்தில் பிறந்து, பெண் தேவ அல்லது மனித கணத்தில் பிறந்திருந்தால், கணப்பொருத்தம் மத்தியம்.
பெண் ராக்ஷஸ கணத்தில் பிறந்து, ஆண் தேவ அல்லது மனித கணத்தில் பிறந்தால் கணப்பொருத்தம் கிடையாது, அதமம் என கூறப்படுகிறது.
தேவ கணம் | மனித கணம் | ராக்ஷஸ கணம் |
அஸ்வினி | பரணி | கார்த்திகை |
மிருகசீரிஷம் | ரோஹினி | அயில்யம் |
புனர்பூசம் | திருவாதிரை | மகம் |
பூசம் | பூரம் | சித்திரை |
அனுஸம் | உத்திரம் | விசாகம் |
சுவாதி | பூராடம் | கேட்டை |
அஸ்தம் | உத்திராடம் | மூலம் |
திருவோணம் | பூரட்டாதி | அவிட்டம் |
ரேவதி | உத்திரட்டாதி | சதயம் |
கணப் பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யலாமா...?
கண பொருத்தம் என்பது திருமண ராசி பொருத்தத்தில் பார்க்கப்படும் முக்கியமான பொருத்தங்களில் ஒன்று.
கண பொருத்தம் என்பது ஆண், பெண்ணின் குணாதிசயங்களை குறிப்பிடப்படுவதாக கூறப்படுகிறது. கண பொருத்தம் இருந்தால் கணவன் மனைவி வாழ்க்கை முழுவதும் கருத்து வேறுபாடுகள் இல்லாமல் ஒற்றுமையுடன் இருப்பார்கள் என்று ஜாதக ரீதியாக கூறப்படும் உண்மை.
ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கும். இந்த குணாதிசயங்களை பற்றி தெரிந்து கொள்வதற்கு இந்த கண பொருத்தம் பார்க்கப்படுகிறது.
மூன்று விதமான கண பொருத்தங்கள் உள்ளது.
- தேவ கணம்
- மனுஷ கணம்
- ராட்சச கணம்
திருமணம் செய்து கொள்ளும் ஆண், பெண் இருவரில் ஒருவருக்கு தேவ கணமும் மற்றொருவருக்கு மனுஷ கனமும் இருந்தால் உன்னதம்.
திருமணம் செய்து கொள்ளும் பெண்ணுக்கு தேவ கணமும் ஆணுக்கு ராட்சச கணம் இருந்தால் மத்திமம் என்று கூறப்படுகிறது.
இதே போல் பெண் ராட்சச கணமாகவும் திருமணம் செய்து கொள்ளும் ஆண் தேவ கணமாகவும் இருந்தால் பொருத்தம் இல்லை என்று கூறப்படுகிறது.
திருமணம் செய்து கொள்ளும் பெண்ணிற்கு ராட்சச கணம், ஆணுக்கு மனுஷ கணமாகவும் இருந்தால் பொருத்தம் இல்லை என்று கூறப்படுகிறது.
கண பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யலாமா என்று ஜோதிடரீதியாக சில தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்...
ஜோதிட ரீதியாக கண பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யலாம்.
கண பொருத்தம் இல்லை என்றாலும் தினப் பொருத்தம் இருக்க வேண்டும்.
கண பொருத்தம் இல்லை என்றால் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் திருமணம் செய்து கொள்ளுவது சிறந்தது.
கண பொருத்தம் இல்லை என்றால் அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் திருமணம் செய்து கொள்ளும் பொழுது அனைத்து தோஷங்களும் விலகிவிடும் என்று கூறப்படுகிறது.