ஸ்திரி பொருத்தம் (Stree Deerga Porutham)

மானிட குலத்தில் எல்லோருக்குமே தங்களுடைய வெளி வாழ்க்கை மற்றும் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமெனில் அவர்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக அமைய வேண்டும்.

சிறப்பான திருமண வாழ்க்கையை அடைவதற்கு தனக்கு ஏற்ற துணையை தேர்ந்தெடுத்து மணக்க வேண்டும்.

தங்களுக்கு ஏற்ற துணையை அறிவதற்கு தான் திருமண பொருத்தம் பார்க்கப்படுகிறது. அப்படி பார்க்கப்படும் பொருத்தங்களில் ஒன்று தான் ஸ்திரீ பொருத்தம்.


ஸ்திரீ பொருத்தம் என்றால் என்ன?

இந்த பொருத்தம் இருந்தால் அஷ்டலட்சுமி கடாட்சம், தன மற்றும் தான்யம் சிறப்பாக இருக்கும். பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பதற்கு இந்த பொருத்தம் பார்க்கப்படுகிறது.

ஸ்திரி என்றால் பெண் என்று பொருள், தீர்க்கம் என்றால் முழுமை என்று பொருள். பெண்ணிற்கு கிடைக்க வேண்டிய அனைத்தும் கிடைக்குமா என்பதை தெரிந்து கொள்வதற்கு இந்த பொருத்தம் மிகவும் முக்கியம். அதாவது மணப்பெண் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் கணவனுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காக பார்க்கிறார்கள்.

திருமணத்திற்கு பின்னர் பெண்ணின் ஆயுட்காலம் கணவனின் நட்சத்திரத்தால் எவ்வாறு மாறும் என்பதை தெரிந்து கொள்வதற்காக பார்க்கப்படுகிறது.


ஸ்திரீ பொருத்தம் எப்படி பார்க்க வேண்டும்:

பெண்ணின் நட்சத்திரத்தை முதல் நட்சத்திரமாக வைத்து கொண்டு, ஆண் நட்சத்திரம் வரும் வரை எண்ணும் போது 13க்கு மேல் ஆண் நட்சத்திரம் இருந்தால் உத்தமம்.

உதாரணத்திற்கு பெண் நட்சத்திரம் கார்த்திகை என்றும், ஆணின் நட்சத்திரம் சதயம் என்றும் வைத்து கொள்வோம். பெண் நட்சத்திரமான கார்த்திகையை 1, அ தற்கு பிறகு வரும் நட்சத்திரத்தை 2, 3, 4 என வைத்து கொண்டு எண்ணினால் ஆண் நட்சத்திரம் சதயம் 22 வது நட்சத்தி ரமாக வரும். 13-க்கு மேல் வருவதால் ஸ்திரீ பொருத்தம் உண்டு.

பெண்ணின் நட்சத்திரம் ரேவதி என வைத்து கொண்டு எண்ணினால் ஆணின் நட்சத்திரம் அஸ்தம், சித்திரை போன்ற நட்சத்திரங்கள் பொருந்தும் இந்த பொருத்தம் இருந்தால் பெண்ணிற்கு நீண்ட ஆயுள் கிடைக்கும், உடல் நலம் நன்றாக இருக்கும். தம்பதிகள் செல்வ செழிப்புடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்வார்கள்.

பெண்ணின் நட்சத்திரத்தை முதல் நட்சத்திரமாக கொண்டு எண்ணும் போது ஆணின் நட்சத்திரம் 7 முதல் 13-க்குள் அமைந்தால் அது மத்திமம் ஆகும். பெண் நட்சத்திரத்தை வைத்து எண்ணும் போது ஆணின் நட்சத்திரம் 1 முதல் 6 க்குள் அமைந்தால் அந்த ஜாதகத்திற்கு ஸ்திரீ பொருத்தம் இல்லையென்று அர்த்தம்.


ஸ்திரீ பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யலாமா..?

திருமண பொருத்தத்தில் ஸ்திரி பொருத்தம் முக்கியமான பொருத்தமாக பார்க்கப்படுகிறது. திருமணம் செய்வதற்கு 10 பொருத்தும் போது முக்கியம் எனினும் ஒரு சிலர் 12 பொருத்தங்களும் பார்க்கின்றனர்.

ஸ்திரீ தீர்க்கப் பொருத்தத்தின் முக்கியமான தீர்க்கம் என்னவென்றால் ஸ்திரீ என்பது மணப்பெண்ணின் ஆயுள், ஆரோக்கியத்தை குறிக்கிறது. மேலும் மணப்பெண்ணின் குணநல மற்றும் பொதுவான பண்புகளை குறிக்கும் பொருத்தமாக குறிப்பிடப்படுகிறது.

திருமணத்திற்கு பிறகு மணமகள் ஆரோக்கிய சம்பந்தப்பட்ட விஷயங்களை தீர்மானிக்கும் பொருத்தமாக ஸ்திரீ பொருத்தம் குறிப்பிடப்படுகிறது. மணமகளைப் போல் மணமகனின் குணநல மற்றும் ஆரோக்கியத்தை இந்த ஸ்திரீ பொருத்தம் வைத்து தீர்மானிக்கலாம்.

திருமண பொருத்தத்தில் ஸ்திரீ பொருத்தம் இல்லையென்றாலும் திருமணம் செய்து கொள்ளலாம்.

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US