தினப்பொருத்தம் (Dina Porutham)
தினம் என்றால் நாள்தோறும் என்று பொருள். இந்த நாள் பொருத்தம் இருந்தால், ஆணும் பெண்ணும் கூடி வாழும் பொழுது அவர்கள் சண்டையில்லாமல் மகிழ்வுடன் வாழ்வார்கள் என அர்த்தம்.
நிலவு ஒவ்வொரு நாளும் ஒரு நட்சத்திரத்தில் இருந்து பயனிக்கும். அதாவது 27 நட்சத்திரங்களை 27 நாட்களில் கடக்கும். அந்த முழு சுழற்சியின் போதும் இரண்டு இராசிகளும் ஒத்து வாழ்ந்தால் உடல் நலனிலும் மன நலனிலும் சிறந்து வாழ்வார்கள்.
பெண் நட்சத்திரத்தில் இருந்து ஆணுடைய நட்சத்திரம் வரை எண்ணிப்பார்க்க வேண்டும். வரும் எண்ணை 9 -ஆல் வகுத்தால் மிச்சம் வராமல் இருந்தால் அது சிறப்பான பொருத்தம்.
அதாவது, 9, 18, 27 ஆம் இடங்களில் வரும் நட்சத்திரம் கொண்ட ஜாதகம் நன்றாக தினப்பொருத்தம் பொருந்துகிறது. அப்படி மீதம் வருகிறது என்றாலும், அந்த மீதம் 3, 5, 7 என்று வரக்கூடாது. அதாவது 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 25 ஆகிய இடங்களை கொண்ட நட்சத்திரங்கள் ஜாதகம் பொருந்தாது.
எடுத்துக்காட்டாக பெண் பிறந்த நட்சத்திரம் பரணி என்று வைத்துக்கொண்டால் மிருகசீரிடம் மூன்றாவதாக வருகிறது. ஆக, இது பொருந்தாது. சித்திரை 12-ல் வருகிறது. இந்த 12 யை 9 ஆல் வகுத்தால் மீதம் 3 வருகிறது. ஆக, இது பொருந்தாது.
தினப்பொருத்தம் பார்க்கும் போது பெண் நட்சத்திரத்தில் இருந்து 2, 4, 6, 8, 9, 11, 13, 15, 18, 20, 24, 26 ஆம் நட்சத்திரமாக ஆண் நட்சத்திரம் வருமானால் அது பொருந்துகிறது என பொருள் ஆணின் நட்சத்திரம் பெண்ணின்நட்சத்திரத்திற்கு ஒரே இராசியாக இருந்தால் பொருந்துகிறது என்கிறோம். அதே விதியை ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது.
ஒவ்வொறு நட்சத்திரமும் 4 பாதங்களாக பிரிக்கப்பட்டிருக்கும். ஆண், பெண்ணுக்கு முன்னுள்ள நட்சத்திர பாதத்தில் பிறந்திருந்தால் நல்லது என்பது பொது கணக்கு.
ரோகிணி, திருவாதிரை, மகம், அஸ்தம், விசாகம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய எட்டு நட்சத்திரங்களுக்கும், ஆண் பெண் ஒரே மட்சத்திரமாக அமைந்திருந்தாலும் மிகவும் பொருந்தும்.
அசுவினி, கிருத்திகை, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், பூரம், உத்திரம், சித்திரை, அனுசம், பூராடம்., உத்திராடம் என்ற 11 நட்சத்திரத்தில் பிறந்த ஆணும் பெண்ணும் ஒரே நட்சத்திரமாக அமைந்திருந்து ஒன்று சேர்த்தால் சுமார் நிலை எனலாம்.
பரணி, ஆயில்யம், சுவாதி, கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், பூராட்டாதி ஆகிய இந்த எட்டு நட்சத்திரங்களில் பிறந்த ஆண் பெண் ஒரே நட்சத்திரம் கொண்டிருந்தால் பொருத்தமில்லை.
நட்சத்திரம் ஒன்றாக இருந்தாலும், ஒரே இராசியில் இருக்க வேண்டும் என்கிற விதியும் உள்ளது என்பதை கணக்கில் கொள்ள வேண்டும். மேலும் இந்த நட்சத்திர தொகுதிகளை மனத்தில் வைத்துக் கொண்டு பொருத்தத்தைப் பார்த்தால் துல்லியமாக கணக்கிடலாம்.
பெண்ணின் நட்சத்திரம் எந்த தொகுப்பானாலும் ஆணின் நட்சத்திர நிலையை எண்ணி வருகையில் அது அதன் தொகுப்பில் 1 ஆம் நட்சத்திரமாக இருக்குமேயானால் அது சுமாராக பொருந்துகிறது என கணக்கிடலாம். இது, பெண்ணின் நட்சத்திர தொகுப்பிற்கு முந்தைய தொகுப்பில் இருக்க வேண்டும்.
பெண் நட்சத்திரம் எந்த தொகுப்பில் இருந்தாலும் ஆண் நட்சத்திரம் அதே தொகுப்பிலோ அதற்கு அடுத்த தொகுப்பிலோ, 1 ஆவது நட்சத்திரமாக வருகிறது என்றால் பொருத்தம் மிகச்சுமார்.
அதாவது சுமாருக்கும் கீழ் நிலை,
- அதன் தொகுப்பில் 2 ஆவது நட்சத்திரம் உள்ளது என்றால் பொருத்தம் சுமார்.
- அதன் தொகுப்பில் 3 ஆவது நட்சத்திரம் என்றால் பொருத்தம் இல்லை .
- அதன் தொகுப்பில் 4 ஆவது நட்சத்திரம் என்றால் பொருத்துகிறது.
- அதன் தொகுப்பில் 5 ஆவது நட்சத்திரம் ஆனால் பொருத்தம் பொருந்தாது.
- அதன் தொகுப்பில் 6 ஆவது நட்சத்திரம் ஆனால் பொருத்தம் பொருந்தும்.
- அதன் தொகுப்பில் 7 ஆவது நட்சத்திரம் இருப்பின் பொருத்தம் பொருந்தாது.
- அதன் தொகுப்பில் 8 ஆவது நட்சத்திரம் என்பது பொருத்தம் சுமார்.
- அதன் தொகுப்பில் 9 ஆவது நட்சத்திரம் நிலையில் இருந்தால் பொருத்தம் பொருந்தும்
ஆக, தொகுப்பில் உள்ள 3,5,7 பொருந்தாது 1 மிகச்சுமார், 2, 8 சுமார், 4, 6, 9 நன்றாக பொருந்தும் என்று சொல்ல வேண்டும்.
27 வது நட்சத்திரம் பெண் நட்சத்திரத்திலிருந்து ஆண் நட்சத்திரம் 27 ஆவதாக வந்தால் அந்த இரண்டு நட்சத்திரகளும் ஒரே இராசியாக இருந்தால் பொருந்தும். வெவ்வேறு இராசியானால் பொருந்தாது.
எடுத்துக்காட்டாக, பெண்ணின்நட்சத்திரம் பரணி என்றால், அதற்கு இருபத்தேழாவது நட்சத்திரம் வருவது அசுவினி. இந்த இரண்டும் ஒரே இராசியைச் சேர்ந்தவை. இப்படி ஒரே இராசி, ஆண் பெண் இராசியாக அமைந்து, பெண்ணுக்கு, ஆண் நட்சத்திரம் 27 ஆக இருந்தால் பொருந்தும்.
அதே வேளையில் மூலம் நட்சத்திரம் பிறந்த பெண்ணுக்கு தனுசு இராசி. 27 ஆம் இடத்தில் உள்ள கேட்டை, விருச்சிக இராசியாக வருவதால் பொருந்தாது. அதாவது வேறு வேறு இராசியாகி 27 ஆவது நட்சத்திரம் இருப்பின் பொருந்தாது.
தினப் பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யலாமா..?
திருமண பொருத்தத்தில் தின பொருத்தம் என்பது மிக முக்கியமான பார்க்கப்படும் முதல் பொருத்தமாக கருதப்படுகிறது. தினம் என்பது நட்சத்திரத்தை அர்த்தமாக குறிக்கிறது. திருமண வாழ்க்கையில் கணவன் மனைவி தினம்தோறும் அன்பாக இருப்பதற்கு தின பொருத்தம் மிக முக்கியம் என்று கூறப்படுகிறது.
திருமண பொருத்தத்தில் தின பொருத்தம் இல்லை என்றால் தின பொருத்தத்தை ஈடு செய்யும் அம்சம் என்னவென்று பார்க்க வேண்டும். திருமண பொருத்தத்தில் ராசி பொருத்தம், ராசிய அதிபதி பொருத்தம் என சில முக்கியமான பொருத்தத்தை பார்க்கிறோம். ஆனால் லக்ன பொருத்தத்தை பெரும்பாலானோர் பார்ப்பதில்லை, ஜாதகரின் செயல்பாடுகளை தீர்மானம் செய்வதாக ஆரோக்கியம், அதிர்ஷ்டம், ஆயுள் காலம் ஆகியவற்றை குறிப்பிடுவதாக லக்ன பலன்கள் பார்க்கப்படுகிறது.
திருமண பொருத்தத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் மற்றும் நம்பிக்கை கொடுக்கிறோமோ அது போல லக்கின பலத்தையும் பார்க்கலாம். ஜாதகத்தை ஆணுக்கும் பெண்ணுக்கும் அமைந்துள்ள ஜென்ம லக்கணங்கள் 1,5,9 ஆக இருந்தால் நட்சத்திர பொருத்தத்தில் தின பொருத்தம் இல்லாவிட்டால் 1,5 லக்கனங்களை முதல் தர தின பொருத்தமாக எடுத்துக் கொள்ளலாம்.
4, 7, 10 ஆக இருந்தால் இரண்டாம் தர லக்னமாக தின பொருத்தமாக எடுத்துக் கொள்ளலாம். 3,11-ஐ மூன்றாம் தர தின பொருத்தமாக எடுத்துக் கொள்ளலாம். விலக வேண்டிய லக்கனங்களாக 2,6,8,12 வருகிறது.
நட்சத்திர பொருத்தத்தில் தின பொருத்தமும் இல்லை ஜாதகத்தில் லக்கன பொருத்தமும் இல்லை என்றால் ஆண் பெண் இரு பாலரின் ராசிப்படி ஜாதகத்தில் சுக்கிரன் ஒரே ராசியில் அமைந்தால் தின பொருத்தமாக எடுத்துக் கொள்ளலாம்.