மகேந்திரப்பொருத்தம் (Mahendra Porutham)
நீண்ட ஆயுள், செல்வம் மற்றும் குழந்தை பாக்கியத்தை குறிக்கக்கூடியது மகேந்திர பொருத்தம்.
கணவன் தன்னுடைய பிள்ளைகள் மற்றும் மனைவியை உலகத்தின் தீமைகளில் இருந்து பாதுகாத்து தேவையான பொருள் மற்றும் நிதியை வழங்குவார்களா என்பதையும் கணிக்கிறது.
பெண் நட்சத்திரத்தில் இருந்து ஆண் நட்சத்திரம் வரை எண்ணி வரும் போது 4, 7, 10, 13, 16, 19, 22, 25 ஆக அந்த எண்ணிக்கை இருந்தால் மகேந்திர பொருத்தம் 1 உத்தமம். மற்ற எண்ணிக்கை இருந்தால் மகேந்திர பொருத்தம் கிடையாது.
உதாரணத்திற்கு பெண் நடத்திரத்தில் இருந்து ஆண் நட்சத்திரம் வரை எண்ணிக்கை 15ஆக இருந்தால் மகேந்திர பொருத்தம் கிடையாது.
மகேந்திர பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யலாமா..?
திருமணத்திற்கு பார்க்கப்படும் 10 பொருத்தங்களை மூன்றாவது இடமாக மகேந்திர பொருத்தம் அமைந்துள்ளது.
மகேந்திர பொருத்தம் பார்ப்பதற்கு மிக முக்கியமான காரணம் குழந்தை பாக்கியமாக குறிப்பிடப்படுகிறது. திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினருக்கு குழந்தை பாக்கியத்தில் ஏதேனும் குறைபாடு உள்ளதா என்று இந்த மகேந்திர பொருத்தத்தை வைத்து தெரிந்து கொள்கின்றனர்.
மேலும் மகேந்திர பொருத்தத்தை வைத்தது திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினரின் சந்ததி விருத்தி அடையுமா என்றும் தெரிந்து கொள்கின்றனர். திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறக்குமா பெண் குழந்தை பிறக்குமா என்று கூட இந்த மகேந்திர பொருத்தத்தை வைத்து தீர்மானிக்கின்றனர்.
மகேந்திர பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்து கொள்ளலாமா.. என்று தொடர்ந்து பார்ப்போம்..
மகேந்திர பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்து கொள்ளலாமா என்றால் செய்து கொள்ளலாம். ஜாதகப்படி தினப் பொருத்தம் கணப் பொருத்தம் இவற்றில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் திருமணம் செய்து கொள்ளலாம்.
அப்படி இல்லை எனில் விருச்ச பொருத்தம் பார்த்து திருமணம் செய்து கொள்ளலாம். உங்கள் ஜாதகப்படி விருச்ச பொருத்தம் இருந்தால் தம்பதியினரின் எதிர்கால சந்ததியை பற்றி குறிப்பிட முடியும்.