நாடி பொருத்தம் (Naadi Porutham)
கணவன் - மனைவி இருவரும் திருமண வாழ்வில் நோய்நொடி இல்லாமல் வாழ இப்பொருத்தம் பார்க்கப்படுகிறது.
இது 10 பொருத்தத்தில் வராமல் இருந்தாலும் இதனை பார்ப்பதும் அவசியமாகிறது.
27 நட்சத்திரங்களை மூன்றாக பார்சுவ நாடி, மத்தியா நாடி மற்றும் சமான நாடி என பிரித்துள்ளனர்.
பெண் நாடியும், ஆண் நாடியும் வெவ்வேறாக இருக்க வேண்டும். முக்கியமாக பித்தம் என்ற மத்தியா நாடியில் இருப்பது நல்லதல்ல.
பார்சுவநாடி அல்லது வாதநாடி:
அசுவினி, திருவாதிரை, புனர்பூசம், உத்தரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாத.
மத்தியா நாடி அல்லது பித்த நாடி:
பரணி, மிருகசீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்ரட்டாதி.
சமான நாடி அல்லது சிலேத்துவ நாடி:
கார்த்திகை, ரோகிணி, ரேவண திருவோணம், ரேவதி ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்ராடம், திருவோணம், ரேவதி.
நாடிப் பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யலாமா..?
நாடிப் பொருத்தம் என்பது மணமகன் மற்றும் மணமகளின் வருங்கால வம்சத்தை குறித்து பார்க்கப்படும் பொருத்தமாகும்.
மணமகன் மற்றும் மணமகள் இருவருக்கும் நாடிப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்து வைத்தால் இருவரும் நோய் நொடி இல்லாமல் வாழ்க்கையில் ஆரோக்கியமான வாழ்க்கையாக வாழலாம் என்று கூறப்படுகிறது.
நாடிப் பொருத்தம் அமைந்தால் புத்திர பாக்கியத்திற்கு எந்த ஒரு தடங்கலும் இருக்காது என்றும் ஜாதக ரீதியாக கூறப்படுகிறது. திருமண பொருத்தத்தில் முக்கியமான பொருத்தம் ஆகவும் நாடிப் பொருத்தம் குறிப்பிடப்படுகிறது.
நாடிப் பொருத்தம் இல்லை எனில் ராசி பொருத்தம் அமைந்தாலும் திருமணம் செய்து கொள்ளலாம்.