நம் தமிழ் நாடு ஆன்மீக பூமி என்றாலும் நம்மில் பலருக்கும் பல முக்கியமான கோயில்களை பற்றி தெரிவது இல்லை. இருந்தாலும் ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு சிறப்புகள் இருக்கும்.
சிலர் சொல்லுவார்கள் நான் எத்தனையோ கோயிலுக்கு சென்றும் சரி ஆகாத பிரச்சனை தற்செயலாக என் நண்பன் அறிமுக படுத்திய கோயிலுக்கு சென்றேன் என்ன மாயமோ தெரியவில்லை,அங்கு சென்று வந்த பிறகு வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் என்று சொல்லுவார்கள்.
அது தான் ஆன்மீகம்.நம்முடைய கிரகம் நட்சத்திரத்திற்கு எங்கோ ஓர் இடம் கட்டாயம் இருக்கும்.அங்கு செல்ல நல்ல திருப்பம் அமையும்.ஆக நாம் அதிகப்படியான சிறப்பு மிகுந்த ஆலயங்களை பற்றி தெரிந்து கொள்வது நல்லது.அவை நம்முடைய வாழ்க்கைக்கு மிக பெரிய மாற்றத்தை வழங்கலாம்.
அப்படியாக நாம் இப்பொழுது சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே அமைந்துள்ளது,கஞ்சமலை சித்தேசுவரர் என்னும் விஷேசமான வரலாறு கொண்ட கோயில் பற்றி தான் பார்க்க போகின்றோம்.யார் இந்த கஞ்சமலை சித்தேசுவரர்?இவருடைய சிறப்புகள் என்னவென்று தெரிந்து கொள்வோம்.
கோயில் வரலாறு
கஞ்சமலை சித்தேசுவரர் கோயில் மிகவும் இயற்கை சூழ அமைதியான இடத்தில் இடம் பெற்று உள்ளது.நாம் அனைவரும் திருமூலர் பற்றி கேள்வி பட்டு இவர் 63 நாயன்மார்களில் ஒருவரும் 18 சித்தர்களின் ஒருவரும் ஆவார்.
அப்படியாக கஞ்சமலை பகுதியில் அதிகமான மூலிகைகள் இருந்தது.திருமூலரும் சித்தர் தான் ஆதலால் அவர் ஒருமுறை திருமூலர் தன்னுடைய வயதி மூப்பை குறைத்து இளமை தோற்றம் கொடுக்கும் ஒரு மூலிகை கஞ்சமலையில் இருப்பதாக அறிந்த அவர் அந்த மலைக்கு செல்கிறார்.தனியாக மூலிகையை தேடி சென்ற அவருக்கு உதவ ஒருவர் கிடைக்கிறார்.
அவர் திருமூலரை விடவும் வயது அதிகமானவர் இருந்தாலும் அவரை சீடனாக ஏற்று கொண்டார்.அவருடைய இயற்பெயர் தான் கஞ்சமலை காலாங்கிநாதர். இவர்கள் இருவரும் மலை அடிவாரத்தில் ஒரு குடில் ஒன்று அமைத்து வசித்து வந்தனர்.
இந்த நிலையில் தினமும் திருமூலர் தினமும் அவர் எதிர்பார்த்த மூலிகையை தேடி சென்று விடுவார்.அவருக்காக திருமூலரின் சீடரான காலாங்கிநாதர் உணவு சமைத்து கொடுப்பார்.அப்படி ஒருமுறை சமைத்து கொண்டு இருக்கும் பொழுது ஏதோ ஆழ்ந்த சிந்தனைக்கு சென்று வீட்டார்.
அப்பொழுது உணவு பொங்கி வர என்னவென்று செய்வதறியாது உணவு சமைக்கும் கரண்டியை தேடினார் அப்பொழுது கரண்டி கிடைக்காத காரணத்தால் அருகில் இருந்த செடியை பிடிங்கி அருகில் இருந்த தண்ணீரில் கழுவி பொங்கும் உணவை கிளறி விட்டார்.
சற்று என்று உணவு கருப்பாக மாறியது.உடனே பயம் கொண்டு அந்த செடியை நெருப்பில் போட்டு வீட்டார்.அதை எவ்வாறு தங்களுடைய குருவிற்கு கொடுக்கமுடியும் என்று அஞ்சி அந்த உணவை வீணாக்காமல் சாப்பிட்டு விட்டார்.
சிறிது காலம் கடந்து திருமூலர் வருகை தர அவருகுக்கு அங்கு இருந்த காலாங்கிநாதரை அடையாமல் தெரியவில்லை.அப்பொழுது குரு சீடனை பார்த்து தாங்கள் யார் என்று கேட்க காலாங்கிநாதர் நான் தான் உங்கள் சீடன் என்று சொல்லு அதிர்ந்து போனார்.
அதாவது வயதில் வயது மூப்பானவர் மிகவும் இளமையாக தோற்றம் அளித்தார்.உடனே திருமூலர் அவரிடம் நீ எப்படி இளமையை ஆனாய் என்று கேட்க அதற்கு காலாங்கிநாதர் நடந்ததை கூறினார்.திருமூலர் இப்பொழுது அந்த செடி எங்கே?நான் தேடி வந்த மூலிகை செடியே அது தான் என்று சொல்ல,அதற்க்கு காலாங்கிநாதர் குருவே அதை நான் சமைக்கும் பொழுது உணவின் நிறம் கருப்பாக மாறியதால் அதை உங்களுக்கு கொடுக்க வேண்டாம் என்று எண்ணி நானே சாப்பிட்டு விட்டு அந்த செடியை தீயில் போட்டேன் என்று சொன்னார்.
பிறகு திருமூலரிடம் சீடன் ஆனால் நான் அந்த செடியை கழுவிய தண்ணீர் இருக்கிறது என்று சொன்னார்.அதை வாங்கி குடித்த திருமூலரும் இளமை திரும்பினார்.இளமை திரும்பிய மூலர், அங்கிருந்து புறப்படத் தயாரானார்.
அப்போது தன்னுடன் வருவதாக கூறிய காலாங்கிநாதரிடம், ‘நீ இங்கேயே இருந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்’ என்று கூறி விட்டு, சென்றார். குருவின் பேச்சை கேட்டு காலாங்கிநாதரும் அங்கு இருந்து சேவை செய்யலாம் என்று உறுதி செய்தார்.
ஆனால் ஊருக்குள் இந்த இளமை மாறுதல் கொண்டு சென்றால் யாரும் நம்ப மாட்டார்கள் என்று அவர் யாருக்கும் தெரியாத ஒரு நபராக செல்கிறார். அப்பொழுது அந்த பகுதியில் ஆடுமேய்த்து விளையாடும் குழந்தைகளுடன் விளையாடி கொண்டு அவர்கள் கொண்டு வந்த மாட்டின் பாலை குடித்து வாழ்ந்து வந்தார்.
பின்னர் தன்னுடன் விளையாடும் சிறுவர்களின் தலையில் ஒரு குட்டு வைத்து அனுப்பிவிடுவார். இதனால் அவர்கள் நடந்ததை மறந்து வீட்டுக்கு சென்று விடுவார்கள்.இந்த நிலையில் மேய்ச்சலுக்கு செல்லும் அனைத்து மாடுகளும் பால் அதிகமாக கறக்கும் போது, ஒரு மாடு மட்டும் பால் தராதது மாட்டின் உரிமையாளருக்கு சந்தேகத்தை உண்டாக்கியது.
எனவே சிறுவர்கள் மாடு மேய்க்க சென்ற போது, அவர்களை பின்தொடர்ந்து சென்று கண்காணித்தார்.அப்போது சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டு, ஒரு குறிப்பிட்ட மாட்டில் மட்டும் பாலை காலாங்கி நாதர் குடிப்பதை உரிமையாளர் பார்த்தார்.
இதுபற்றி ஊருக்குள் சென்று கூறி, பொதுமக்களை அழைத்து வந்து, காலாங்கி நாதரை அடித்து உதைத்தனர்.மக்கள் அடிஉதையால் மிகவும் துடித்து போனார் காலாங்கிநாதர்.அதனால் அவர்களிடம் இருந்து தப்பிக்கும் பொருட்டு ஒரு முள் செடிக்கு இடையில் ஒளிந்து கொண்டார்.
ஊர்க்காரர்கள் செடியை அகற்றி பார்த்த பொது அவர்களுக்கு அதிர்ச்சி.அடிக்க வந்த ஊர் மக்கள் அவரை வணங்கினார்கள்.அதாவது புதருக்குள் ஒழிந்த காலாங்கி நாதர் தவக்கோலத்தில் காட்சி அளித்தார்.பிறகு மக்கள் அவரிடம் மன்னிப்பு கேட்டனர்.அன்று முதல் சித்தர் என்று அழைத்தனர். பிறகு சித்தரேசாமி என அழைக்கத் தொடங்கினார்கள்.
நாளடைவில் அவர் சித்தேசுவரசாமியாக மாறினார். அவர் தவக்கோலத்தில் காட்சி அளித்த இடத்தில் கோவில் கட்டப்பட்டது. அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள், அவரை தாக்கியதால், தண்டிக்கப்படுவோம் என்று அச்சத்தில் இருந்தனர். ஆனால் சித்தேசுவரசாமி யாரையும் தண்டிக்கவில்லை.
மாறாக அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்து வருகிறார் என்கிறது இந்தத் திருத்தலத்தின் வரலாறு. இவரை வழிபாடு செய்ய அவர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுகிறார் என்கிறார்கள் மக்கள்.மேலும் அங்கு சென்று வந்ததால் பலருக்கும் வாழ்க்கை நல்ல விதமாக மாறியது என்றும் சொல்கின்றனர்.
கோவிலில் மாதந்தோறும் அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த நாளில் சித்தேசுவர சாமியை தரிசித்தால் நல்லது என்பதால் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆண்டுதோறும் சித்திரை மாதம் 3-வது செவ்வாய்க்கிழமை கோவிலில் திருவிழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
காந்த தீர்த்தக்குளம்
மற்ற கோயிலை போலவும் இந்த சித்தேசுவர சுவாமி கோயிலை சுற்றிலும் 7 தீர்த்தங்கள் உள்ளது.இங்கு இவரை தரிசிக்க வரும் பக்தர்கள் இந்த தீர்த்தத்தில் நீராடி விட்டு பின் சுவாமியை தரிசனம் செய்கிறார்கள்.கோவில் வளாகத்துக்குள் காந்த தீர்த்தக்குளம் உள்ளது.
தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கோவிலுக்கு வந்து, உப்பு, மிளகு, வெல்லம் ஆகியவற்றை தலையை சுற்றியும், பாதிக்கப்பட்ட தோல் பகுதியையும் சுற்றி, இந்த காந்த குளத்தில் போட்டால், தோல் வியாதி குணமாகும் என்பது ஐதீகம்.
மேலும் உப்பு, வெல்லம் போன்றவை தண்ணீரில் கரைவது போன்று கஷ்டங்களும் கரைந்து விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கோவிலுக்கு அருகில் பொன்னி என்கிற ஒரு ஓடை ஓடுகிறது. இதன் அருகில் தான் தீர்த்தக்குளங்கள் உள்ளன.
கஞ்சமலையில் ஏராளமான மூலிகை செடிகள் உள்ளதால், மலைப்பகுதியில் இருந்து வரும் தண்ணீர் ஓடை வழியாக தீர்த்தக்குளங்களுக்கு வருகிறது. இதனால் மூலிகை கலந்த தண்ணீரில் குளிப்பதால் நோய்கள் குணமாவதாகவும் பக்தர்கள் கூறுகிறார்கள்.
கோயில் சுற்றி உள்ள சிறப்புகள்
இன்றளவும் இரவு நேரங்களில் இந்த மலையில் சித்தர்கள் பலரும் ஒளி வடிவில் தோன்றி மறைவது வாடிக்கை என்றும் சித்தர் தான் விரும்பியவர்களுக்கு காட்சி கொடுப்பதாகவும் சொல்கின்றனர். இந்த கோவிலின் மலை உச்சிக்கு பவுணர்மி நாளில் பக்தர்கள் சென்று இரவில் அங்கு தியானத்தில் ஈடுபடுவது உண்டு.
மேலும் மலை உச்சியில் தியானமேடை போல ஒரு இடம் உள்ளது. இரவில் பல இடங்களில் வீசும் காற்று ஓம்' எனும் ஒலியோடு வெளியாவதாக சொல்கின்றனர்.அங்கு வீசும் காற்றும் வரும் ஒளியை கேட்பதற்கு அற்புதமாக இருக்கும் என்று அங்கு சென்றவர்கள் சொல்கிறார்கள்.
இன்னும் கூடுதலாக அந்த இடத்திற்கு அருகில்தான் அவ்வைப்பிராட்டி கருநெல்லி மரத்திலிருந்து 12 வருடங்களுக்கு ஒருமுறை காய்க்கும் கருநெல்லியை பறித்துச் சென்று தகடூரை ஆண்ட மன்னன் அதியமானுக்கு தந்தாக வரலாறு.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |