18ஆம் படி கருப்பசாமியின் கதையும் வரலாறும்

By பிரபா எஸ். ராஜேஷ் Sep 11, 2024 09:58 AM GMT
Report

சங்கிலிக் கருப்பு, நொண்டிக் கருப்பு, 18ஆம் படி கருப்பு, கருப்பண்ணன், கருப்பன், கருப்பு என்று பல பெயர்களில் கருப்பசாமி ஊருக்கு ஊர் இருப்பதைப் பார்க்கின்றோம்.

கருப்பசாமி நாட்டுப்புறத் தெய்வங்களில் ஒன்று என்றாலும் கூட அதற்கும் புராணப் பின்னணி உள்ளது.

அழகர் கோவில் பற்றி முனைவர் பட்டத்துக்கு ஆராய்ச்சி செய்த தொ. பரமசிவம் அவர்கள் கருப்பசாமி வெள்ளைச்சாமி இரண்டும் கண்ணன், பலராமன் ஆகியவற்றின் நாட்டுப்புற வடிவங்கள் என்பார்.

ஒவ்வொரு ஊரிலும் கருப்பசாமிக்கு ஒவ்வொரு கதை இருக்கலாம்.

ராமாயணக் கருப்பு

ராமாயணத்தில் கருப்பசாமிக்கு ஒரு கதை உண்டு. இந்த ராமாயணக் கதை 16ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு தோன்றிய புதுக்கதையாகும்.

சீதைக்கு ஒரே ஒரு மகன்தான் பிறந்திருந்தான். அவள் ராமனால் கைவிடப்பட்டு ஒரு முனிவரரின் குடிலில் வாழ்ந்து வந்த போது ஒரு நாள் தொட்டிலில் குழந்தையைத் தூங்க வைத்து விட்டுக் காட்டுக்குள் தண்ணீர் எடுக்கச் சென்றாள்.

அப்போது முனிவரிடம் 'சாமி குழந்தை தொட்டிலில் தூங்குகிறான். பார்த்துக் கொள்ளுங்கள்' என்று சொல்லி விட்டு சென்றாள்.

தியானத்திலிருந்து கண்விழித்த முனிவர் எழுந்து தொட்டிலைப் பார்த்தார். தொட்டிலில் குழந்தை இல்லை. அதிர்ந்தார். சுற்று முற்றும் தேடினார். காணவில்லை.

18ஆம் படி கருப்பசாமியின் கதையும் வரலாறும் | Lord Karuppasamy

தொட்டிலில் தருப்பைக் குழந்தை

குழந்தை சற்று முன்பே தொட்டிலை விட்டு இறங்கி அம்மாவை தேடிக்கொண்டு காட்டுக்குள் போய்விட்டது. இந்த விவரம் தெரியாத முனிவர் பயந்து போய் ஐயையோ குழந்தையை ஏதேனும் காட்டு மிருகங்கள் வந்து கொண்டு போய் விட்டனவோ தெரியவில்லையே.

நாம் ஆழ்நிலை தியானத்தில் ஆழ்ந்து விட்டோமே என்ற அச்சத்தில் ஒரு தர்ப்பைப் புல்லைக் கிள்ளி அதைத் தொட்டிலில் போட்டு குழந்தையாக்கினார். 

விநாயகர் வரலாறும் வழிபாடும்

விநாயகர் வரலாறும் வழிபாடும்


யார் என் குழந்தை?

சீதாதேவி காட்டுக்குள் தண்ணீர் கொண்டு வரப் போனவள் தன் குழந்தை பாதி வழியில் அழுது கொண்டு வருவதைக் கண்டு சமாதானப்படுத்தி அக்குழந்தையை அழைத்துக் கொண்டு வந்தாள்.

இங்கு வந்து பார்த்தால் தொட்டிலில் இவள் போட்ட குழந்தை உறங்கிக் கொண்டிருக்கிறது. இப்போது அவளுக்கு எது தன் குழந்தை என்று ஐயம் வந்துவிட்டது. முனிவருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. 

அக்கினி பரிட்சை

உண்மையான குழந்தையை அறிய ஒரு வழி கண்டுபிடித்தாள். அவள் உடனே ஒரு தர்ப்பப் புல்லை எடுத்து தரையில் ஒரு கோடு கழித்தாள். அவள் கிழித்த கோட்டில் தீ வளர்ந்தது.

இரண்டு குழந்தைகளையும் அழைத்து எரியும் தீயின் ஒரு பக்கம் நிறுத்தி, 'நீங்கள் இருவரும் தீயைத் தாண்டி வர வேண்டும். என்னுடைய உண்மையான பிள்ளை தீயில் கருகாது' என்றாள்.

தொட்டிலை விட்டு இறங்கி அம்மாவை தேடிச் சென்ற குழந்தை கருகாமல் தீயைத் தாண்டி வந்துவிட்டது.

முனிவர் தர்ப்ப புல்லைப் போட்டு உருவாக்கிய குழந்தை தீயில் கருகி கன்னங்கரேல் என்று வந்தது. அக்குழந்தை சீதா தேவியிடம் 'அம்மா என்னையும் உன் குழந்தையாக ஏற்றுக் கொள் தாயே. இன்று முதல் நான் உன் காவல் வீரன்' என்று வேண்டிக் கொண்டான் அன்று முதல் கருப்பசாமி பெருமாள் கோவில் வாசலில் காவல் தெய்வமாக நிறுத்தப்பட்டார். 

18ஆம் படி கருப்பசாமியின் கதையும் வரலாறும் | Lord Karuppasamy

போக்கிலும் வரத்திலும்

மதுரைக்கு அருகே உள்ள அழகர் கோவிலின் முன் வாசலில் 18ம் படி கருப்பசாமி காவல் தெய்வமாக இருந்து வருகிறார்.

கோவிலை விட்டு அழகரை வெளியே எடுத்துச் செல்லும்போது அவர் அணிந்திருக்கும் நகை பட்டியல் எடுத்துச் செல்லும் தண்டியில் போன்ற பொருள்களின் பட்டியலை பதினெட்டாம்படி கருப்பனிடம் சொல்லிவிட்டுச் செல்ல வேண்டும் என்று ஒரு மரபு உள்ளது.

திரும்ப உள்ளே வரும்போதும் எடுத்துச் சென்ற பொருட்கள் அனைத்தும் திரும்பக் கொண்டுவரப்பட்டன என்பதைக் காண்பித்துச் செல்ல வேண்டும். இப்படி ஒரு ஐதீகம் இங்கு நிலவுகின்றது. 

வராகியின் வரலாறும் வழிபாடும்

வராகியின் வரலாறும் வழிபாடும்


கதவுக்கே பூசை

பதினெட்டாம்படி கருப்பசாமிக்கு சிலையோ சன்னதியோ கிடையாது. கிழக்கு கோபுர வாசலைப் பூட்டி இருக்கும் மரக்கதவில் சந்தனம் பூசியிருப்பர். அங்கு தான் மாலை அணிவிப்பர்.

சூட தீபாராதனை காட்டி வணங்குவர். அக்கதவை ஆடி 18 அன்று திறப்பார்கள். உள்ளே 18 படிகள் காணப்படும்.

ஒவ்வொரு படியிலும் இரண்டு ஓரத்திலும் தீ பந்து (விளக்கு) வைப்பார்கள். பக்தர்கள் கொண்டு வரும் மாலைகளும் நேர்த்திக்கடனாக செலுத்தப்படும் அரிவாள்களும் பூட்டிய கதவுக்கு முன்புதான் வைக்கப்படும். 

வரலாற்றை உணர்த்தும் கதைப்பாடல்

பதினெட்டாம்படி கருப்பசாமிக்கு ஒரு கதைப் பாடல் உண்டு. தமிழக சமய வரலாற்றில் கதைப்பாடல்களும் ஸ்தல புராணங்களும் புதிதாக எழுதப்பட்டவை என்றாலும் அவை தம்முள் சில உண்மையான வரலாற்றுத் தகவல்களைப் பொதிந்து வைத்துள்ளன.  

பதினெட்டாம்படி கருப்பசாமி கதைப்பாடல் பதினெட்டாம்படி கருப்பன் உற்பத்தி வர்ணிப்பு என்ற பெயரில் மொட்டையக் கோனார் இயற்றியதாகும்

18ஆம் படி கருப்பசாமியின் கதையும் வரலாறும் | Lord Karuppasamy

சோலைமலை சுந்தரேசா!

பதினெட்டு லாடரையும் படியாக செய்ததைப்/

பகருதற்குத் துணை வருவாய்!

என்று தொடங்குகிறது. இவ்வர்ணிப்பு பாடலை 1960,70 களில் பாடியவர் மாரியப்பன் எனப்படும் வாணியச் செட்டி ஆவார் 

மலையாள தேசத்தில் இருந்து லாடர்கள் எனப்படும் 18 மந்திரவாதிகள் அழகர் கோவிலில் உள்ள அழகரின் பொற்சிலையைக் கவர்ந்து செல்ல வருவார்கள். அவர்கள் யார் கண்ணுக்கும் தெரியாமல் சன்னதிக்குள் சென்று கருவறைக்குள் புகுந்து கொள்வர்.

அவர்கள் கண்ணுக்கு கீழே அஞ்சனம் தீட்டி தன் உருவத்தை மறைத்துக் கொள்ளும் மந்திர வித்தை கற்றவர்கள். இவர்கள் தங்கச் சிலையை திருடிக் கொண்டு போக வந்துள்ளனர் என்பதை அறிந்த பெருமாள் பட்டரின் கனவில் போய் இத் தகவலைத் தெரிவித்தார்.

கோவில் நகரமாம் மதுரையின் முக்கிய ஸ்தலங்கள் ஓர் பார்வை

கோவில் நகரமாம் மதுரையின் முக்கிய ஸ்தலங்கள் ஓர் பார்வை


பெருமாள் காட்டிய வழி

பெருமாள் தன்னை மீட்பதற்கு ஓர் உபாயத்தையும் கனவில் பட்டரிடம் கூறினார். 'இன்று எனக்கு நைவேதனம் செய்யக் கொண்டு வரும் பொங்கலில் நிறைய மிளகு சேர்த்துக் கொண்டு வா. மிளகின் காரத்தில் அவர்கள் கண்களில் தண்ணீர் வந்து அஞ்சனம் அழிந்துவிடும். அஞ்சனம் அழிந்து விட்டால் அவர்கள் உருவம் வெளிப்பட்டு விடும். உடனே ஆட்களை அழைத்து வந்து அவர்களைக் கொன்று போட்டு விடு' என்றார்.

பெருமாள் சொன்னது போலவே பட்டரும் மறுநாள் செய்தார். அதிகாலையில் நிறைய மிளகு போட்டு காரசாரமாக பொங்கல் செய்து கொண்டு வரும்போது அந்த வெண்பொங்கலின் ஆவி காரமாகப் பரவியது.

அதை சுவாசித்த மந்திரவாதிகள் மூக்கின் வழியாக ஏறிய காரம் கண்களில் கண்ணீரைவர வைத்தது. கண்களில் தண்ணீர் கொட்டவும் கண்ணுக்கு கீழே தீட்டப்பட்ட அஞ்சனம் கரைந்து இவர்களின் உருவம் வெளிப்பட்டது.

உடனே கோயில் பணியாட்கள் மற்றும் ஊர் ஆட்கள் எல்லோரும் சேர்ந்து அவர்களைப் பிடித்து அடித்தனர். 17 பேர் மாய்ந்தனர்.

18ஆம் படி கருப்பசாமியின் கதையும் வரலாறும் | Lord Karuppasamy

ஒருவன் மட்டும் 'ஐயா அழகரின் அழகில் மயங்கி அவரைக் கொண்டு போக வந்தோம். மாட்டிக்கிட்டோம். நான் இங்கு அழகருக்குக் காவலாக இருந்து அவர் அழகை தினமும் தரிசிக்க விரும்புகின்றேன் என்று வேண்டினான்.

அடித்து கொல்லப்பட்ட அந்த 17 பேரையும் படிகளாக்கி 18 ஆவதாக இவன் அங்குக் காவலுக்கு நின்றான். இவரே கருப்பசாமி என்ற காவல் தெய்வம் ஆவார்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் கிழக்கு வாசலில் அம்மன் சந்நிதி வாசலுக்கும் சாமி சந்நிதி வாசலுக்கும் நடுவில் கருப்பசாமிக்குத் தணிக்க கோவில் உள்ளது. அருகே மதுரை வீரனுக்கு கோயில் உள்ளது.

சென்னை சென்றால் இந்த கோயில்களை தரிசிக்க தவறாதீர்கள்

சென்னை சென்றால் இந்த கோயில்களை தரிசிக்க தவறாதீர்கள்


உண்மை வரலாறு

கருப்பசாமியின் கதையை ஆராய்ந்தால் சில வரலாற்று உண்மைகள் புரிய வரும். இக்கோவிலுள் தங்கச் சிலைகள் பல இருந்தன.

அவற்றை வேறு எவரும் திருடிச் சென்று விடக்கூடாது என்பதற்கு காவலாக அங்கேயே கருப்பசாமி தங்கிவிட்டார். லாடர் என்பவர்கள் லாடதேசத்திலிருந்து வந்த சன்னியாசிகள். லாடதேசம் என்பது அந்தக் காலத்தில் இருந்த குஜராத் ஆகும்.

ஆனால் மலையாள தேசத்திலிருந்து வந்த மந்திரவாதிகள் என்பது கேரளாவில் வாழ்ந்து வந்த பௌத்த துறவியர் ஆவர். இவர்கள் மந்திர தந்திரம், ரசவாதம், வான சாஸ்திரம், தற்காப்புக் கலை ஆகிய அனைத்தும் கற்றவர்கள். இவர்கள் லாடர்கள் கிடையாது. 

வியப்பூட்டும் கன்னியாகுமரியின் முக்கிய கோயில்கள்

வியப்பூட்டும் கன்னியாகுமரியின் முக்கிய கோயில்கள்


புத்தரின் தங்கச் சிலை உடைப்பு

நீலன் என்ற திருடன் நாகப்பட்டினத்தில் இருந்த 30 அடி உயர புத்தரின் தங்கச் சிலையை உடைத்து விற்று காசாக்கி அதைக் கொண்டு திருவரங்கத்தின் திருமதில் கட்டியதாக வைணவ குரு பரம்பரை எடுத்துரைக்கின்றது. இது அனைவரும் அறிந்த உண்மை.

எனவே அக்கால கட்டத்தில் பௌத்தர்கள் கௌதம புத்தருக்கு தம் கோயில்களில் செய்து வைத்த தங்கச் சிலையை பாதுகாக்க முனைந்தனர். இவ்வாறு பாதுகாக்கும் நோக்கத்தில் தான் கேரள நாட்டிலிருந்து பௌத்த துறவிகள் மதுரைக்கு வந்துள்ளனர்.  

பெருமாள் வரவுக்கு முன்பு

மதுரையில் உள்ள அழகர் கோவிலின் கருவறை வட்ட வடிவமாக இருப்பதால் அவ்விடம் முன்பு புத்தர் கோயிலின் பொதுமக்கள் வழிபாட்டு இடமாக இருந்துள்ளது. மலை உச்சியில் துறவிகள் வாழ்ந்து வந்தனர். இதனை தொ. பரமசிவம் தமது ஆய்வில் கண்டறிந்துள்ளார்.

ராமநாதபுரத்தில் தரிசிக்க வேண்டிய முக்கியமான ஆலயங்கள்

ராமநாதபுரத்தில் தரிசிக்க வேண்டிய முக்கியமான ஆலயங்கள்


இவருக்கு முன்பு மயிலை சீனி வேங்கடசாமியும் இக்கருத்தை பௌத்தம் சமணம் பற்றிய தமது நூல்களில் குறிப்பிட்டுள்ளார். இக்கருத்தை அடிப்படையாக கொண்டு மேலும் ஆராய்ந்தால் அடிவாரத்தில் தங்கத்தால் ஆன புத்தர் சிலை இருந்தது என்பதும் அதனை எவரும் அழித்துவிடக் கூடாது என்ற காரணத்தினால் கேரள புத்த துறவிகள் அச்சிலையை எடுத்துச் செல்ல வந்தனர் என்பதையும் உணரலாம். இதுவே கருப்பசாமியின் கதையாகும். 

தல்லாகுளத்தின் கருப்பசாமி

தல்லாகுளத்தில் (தைலக் குளம்) ஒரு கருப்பண்ணசாமி கோவில் உண்டு. அழகர் கோவிலில் இருந்து புறப்பட்டு வரும்போது அழகர் பதினெட்டாம்படி கருப்பசாமியிடம் 'போய் வருகிறேன்' என்று சொல்லிக் கொண்டு வருவதைப் போல இங்கும் சொல்லிவிட்டுப் போவார். .

இவ்வாறு சொல்வதன் அடையாளமாக அழகர்கோயிலில் சீர்பாதம் தாங்கிகள் (பல்லக்குத் தூக்கிகள்) அழகர் வைக்கப்பட்டுள்ள தண்டியலை மூன்று முறை குலுக்குவார்கள். இதைப் போலவே மதுரையை விட்டு அழகர் பூப் பல்லக்கு அலங்காரத்தில் கிளம்பும்போது தல்லாகுளம் கருப்பண்ண சுவாமி கோயில் முன்பு நின்று அந்த பூப்பல்லக்கை மூன்று முறை குலுக்க, 'போய் வருகிறேன்' என்று சொல்லிவிட்டு போவதாக ஒரு பாவனைச் சடங்கு இன்று வரை நடைபெறுகிறது.

அவர் அழகர் கோவில் திரும்பியதும் 18ம் படி கருப்பசாமியின் முன் தண்டியலை நிறுத்தி 'திரும்பி விட்டேன்' என்று சொல்லிவிட்டு கோவிலுக்குள் செல்வார். இவ்வாறு அழகர் கோவிலை விட்டு வெளியே வரும்போதும் மீண்டும் உள்ளே செல்லும்போதும் கருப்பசாமி என்ற காவல் தெய்வத்திடம் சொல்லிக் கொண்டுதான் வருகிறார்.   

ஆன்மீக பூமியான திருவண்ணாமலையில் நாம் தரிசிக்க தவறிய முக்கியமான கோயில்கள்

ஆன்மீக பூமியான திருவண்ணாமலையில் நாம் தரிசிக்க தவறிய முக்கியமான கோயில்கள்


வழிபாடுகளும் சத்தியமும்

சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள் பதினெட்டாம்படி கருப்பசாமிக்கு ஆடு கோழி வெட்டி பொங்கல் வைத்து கும்பிடுவர். ஏதேனும் அநியாயம் நடந்துவிட்டால் இக்கோவிலின் முன் நின்று முறையிடுவர். அவர்களுக்கு கொடுமை இழைத்தோர் அழிந்து போவது உறுதி.

திருட்டுக் குற்றம், ஒழுக்கக் குற்றம் நடந்துவிட்டால் குற்றம் சாட்டப்பட்டவர் தான் குற்றமற்றவர் என்று இக்கோயில் முன் சத்தியம் செய்வர்.

அப்போது ஒரு நல்லவர் மீது அநியாயமாகக் குற்றம் சாட்டியவரின் குடும்பம் அழிந்துபோகும். இத்தகைய நம்பிக்கை இப்பகுதி மக்களிடையே நிலவுவதால் பதினெட்டாம்படி கருப்பு துடியான காவல் தெய்வமாக இருக்கிறார்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் 
+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US